TA/690621 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூ விருந்தாவன் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 11:15, 11 September 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"சும்மா அதே உதாரணம், நாம் மீண்டும் மீண்டும் ..., அதாவது வயிற்றுக்கு உணவு அளிப்பதன் மூலம், நீங்கள் உடலின் உறுப்புக்களுக்கு உணவு அளிக்கிறீர்கள். உங்களுக்கு தேவைப்படாது... இது நடைமுறை. அல்லது மரத்தின் வேருக்கு தண்ணீர் ஊற்றுவதால், நீங்கள் தண்ணீரை கிளைகளுக்கு, இலைகளுக்கு, எல்லாவற்றிர்கும் அளிக்கிறீர்கள். நாம் தினமும் பார்க்கிறோம். இது நடைமுறை உதாரணம். வெறுமனே... அதேபோல், இந்த விரிவாக்கம் அனைத்திற்கும் ஏதோ ஒரு மையப் புள்ளி இருக்க வேண்டும். அதுதான் கிருஷ்ணர். நாம் வெறுமனே கிருஷ்ணரை பலவந்தமாக கைப்பற்றினால், பிறகு நாம் அனைத்தையும் கைப்பற்றுவோம். மேலும் வேதமும் கூறுகிறது, யஸ்மின் விஜ்ஞாதே ஸர்வம் இதம்ʼ விஜ்ஞாதம்ʼ பவதி (முண்டக உபநிஷத் 1.3). நாம் துறைசார்ந்த அறிவை தேடிக் கொண்டிருக்கிறோம், ஆனால் நீங்கள் வெறுமனே கிருஷ்ணரை புரிந்துக் கொண்டால், அந்த மையப் புள்ளி, பிறகு நீங்கள் அனைத்தையும் புரிந்துக் கொள்வீர்கள்."
690621 - சொற்பொழிவு SB 01.05.17-18 - New Vrindaban, USA