TA/690827 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஹம்பர்க் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 12:25, 16 September 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே கிருஷ்ணருடைய நாமமும் மேலும் அவரும் வேறுபட்டதல்ல. ஆகையினால், என் நாக்கு கிருஷ்ணருடைய புனித பெயரை தொட்டவுடனயே, அப்படியென்றால் அது உடனடியாக கிருஷ்ணருடன் இணைகிறது. எனவே நீங்கள் ஹரே கிருஷ்ணா மஹா மந்திரம் சொல்வதன் மூலம் தொடர்ந்து கிருஷ்ணருடன் இணைந்திருந்தால், பிறகு கற்பனை செய்து பாருங்கள், நீங்கள் எவ்வாறு வெறுமனே இந்த செயல்முறையால் சுலபமாக தூய்மைப் படுத்தப்படுகிறீர்கள், உச்சாடனம், ஜிஹ்வாதௌ, நாக்கை உச்சாடனம் செய்வதில் ஈடுபடுத்துவதால். மேலும் உங்கள் நாக்கு ருசிப்பதற்கு மிகவும் சுவையான உணவுகளை விரும்புகிறது. எனவே கிருஷ்ணர் மிகவும் கருணை மிக்கவர். அவர் உங்களுக்கு நூறு, ஆயிரம் வகையான சுவையான உணவுகளை கொடுத்திருக்கிறார், அவரால் உட்கொள்ளப்பட்ட மிச்சிய உணவு. நீங்கள் சாப்பிடுங்கள். இவ்வழியாக, நீங்கள் வெறுமனே உறுதி எடுத்துக் கொண்டால் ஆதாவது 'என் நாக்கை கிருஷ்ணருக்கு நெய்வேத்தியம் செய்யாத எதையும் ருசிக்கவிடமாட்டேன், மேலும் என் நாக்கை எப்போதும் ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்வதில் ஈடுபடுத்துவேன்', பிறகு அனைத்து முழுமையும் உங்களுக்குள் இருக்கும்."
690827 - சொற்பொழிவு Initiation - ஹம்பர்க்