TA/690913b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டிட்டேன்ஹர்ஸ்ட் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:58, 21 September 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே சைவ இராஜ்யத்தில் நமக்கு பல உணவு வகைகள் இருக்கின்றன, மேலும் கிருஷ்ணர் உங்களிடம் கேட்பது பத்ரம்ʼ புஷ்பம்ʼ பலம்ʼ தோயம்ʼ யோ மே பக்த்யா ப்ரயச்சதி (ப.கீ. 9.26). 'யாரேனும் எனக்கு அளிப்பது...' இது உலகளாவியது. பத்ரம் என்றால் இலை. சும்ம ஒரு இலை. புஷ்பம், ஒரு மலர். மேலும் பத்ரம் புஷ்பம் பலம். பலம் என்றால் பழம். மேலும் தோயம் என்றால் தண்ணீர். எனவே எத்தகைய ஏழை மனிதனாலும் இதை கிருஷ்ணருக்கு வழங்க முடியும். அது தேவையில்லை, நான் சொல்ல நினைப்பது, ஆடம்பரமான உணவு வகைகள் தேவையில்லை, ஆனால் இது மிகவும் ஏழையான மனிதனுக்கானது. ஏழ்மையிலும் ஏழையான மனிதனால் இந்த நான்கு பொருள்களையும் உறுதியாக பெற முடியும்—கொஞ்சம் இலை, கொஞ்சம் மலர், கொஞ்சம் பழம் மேலும் கொஞ்சம் தண்ணீர். உலகத்தில் எந்த பகுதியிலும் கிடைக்கும். ஆகையினால் அவர் பரிந்துரைக்கின்றார், பத்ரம்ʼ புஷ்பம்ʼ பலம்ʼ தோயம்ʼ யோ மே பக்த்யா ப்ரயச்சதி: 'யாரேனும் அன்பும் மேலும் பக்தியுடனும் எனக்கு வழங்கினால்...' தத் அஹம்ʼ பக்த்ய்-உபஹ்ருʼதம். ஏனென்றால் அது எனக்கு அன்பும் மேலும் பக்தியுடனும் அளிக்கப்பட்டது', அஷ்நாமி, 'நான் உட்கொள்வேன்'."
690913 - சொற்பொழிவு SB 05.05.01-2 - டிட்டேன்ஹர்ஸ்ட்