TA/700504b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 15:01, 5 November 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் வெறுமனே கிருஷ்ணரின் விக்ரகத்திற்கு நிவேத்தியம் செய்யப்பட்ட பொருள்களை உட்கொள்ளலாம். அதுதான் யஜ்ஞ-ஷிஷ்டாஷின꞉ (ப.கீ. 3.13). நாம் பல பாவச் செயல்களை செய்திருந்தாலும், இந்த பிரசாதத்தை உட்கொள்வதால் அதை நாம் எதிர்மறைப்படுத்துகிறோம். முச்யந்தே ஸர்வ-கில்பிஷை꞉. யஜ்ஞ-ஷிஷ்ட... அஷிஷ்ட என்றால் யஜ்ஞ செய்த பிறகு மீதம் இருக்கும் உணவுப் பொருள்கள். ஒருவர் இதை உண்டால், பிறகு முச்யந்தே ஸர்வ-கில்பிஷை꞉. ஏனென்றால் நம் வாழ்க்கை பாவம் நிறைந்தது, எனவே நாம் அந்த பாவச் செயல்களில் இருந்து விடுதலை பெறுவோம். அது எப்படி? அதுவும் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது, அதாவது அஹம்ʼ த்வாம்ʼ ஸர்வ-பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி (ப.கீ. 18.66): 'நீ என்னிடம் சரணடைந்தால், பிறகு உன்னுடைய அனைத்து பாவச் செயல்களில் இருந்தும் நான் உனக்கு பாதுகாப்பு அளிப்பேன்'. ஆகவே நீங்கள் சத்தியம் செய்தால் அதாவது "கிருஷ்ணருக்கு நிவேத்தியம் செய்யப்படாத எதையும் நான் உண்ணமாட்டேன்," அப்படியென்றால் அது சரணடைவதாகும். நீங்கள் கிருஷ்ணரிடம் சரணடையுங்கள், அதாவது 'என் அன்பு பகவானே, உங்களுக்கு நிவேத்தியம் செய்யப்படாத எதையும் நான் உண்ணமாட்டேன்'. அது தான் சத்தியம். அந்த சத்தியம் தான் சரணடைதல். மேலும் அங்கு சரணடைதல் இருப்பதால், நீங்கள் பாவச் செயல்களில் இருந்து பாதுகாக்கப்படுகிறீர்கள்."
700504 - சொற்பொழிவு ISO 01 - லாஸ் ஏஞ்சல்ஸ்