TA/701212 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இந்தூர் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:09, 8 December 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இது ஸதாசார ஆரம்பமாகும்: விடியற்காலையில் எழுந்து, தூய்மைப்படுத்திக் கொண்டு, பிறகு உச்சாடனம் செய்ய வேண்டும், அல்லது வேத மந்திரத்தை, அல்லது தற்காலத்தில் எளிமைப்படுத்தப்பட்ட, ஹரே கிருஷ்ணா மந்திரம், மஹா மந்திரத்தை உச்சாடனம் செய்ய வேண்டும். இதுதான் ஸதாசாரத்தின் ஆரம்பம். எனவே ஸதாசார என்றால் பாவச்செயலின் எதிர்வினையிலிருந்து விடுதலை அடைவது. ஒருவர் ஒழுங்குமுறை கோட்பாடுகளை பின்பற்றினால் அல்லாது அவன் விடுதலை அடைய முடியாது. மேலும் ஒருவன் பாவச்செயலின் எதிர்வினையிலிருந்து முழுமையாக விடுதலை பெறாமல், அவனால் பகவான் என்றால் என்ன என்று புரிந்துக் கொள்ள இயலாது. ஸதாசார, ஒழுங்குமுறை கோட்பாடுகளில் இல்லாதவர்கள், அவர்களுக்கு... மிருகங்களைப் போல், அவர்கள் எதையும் பின்பற்றுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படவில்லை... நிச்சயமாக, இயற்கையாக அவர்கள் ஒழுங்குமுறை கோட்பாடுகளை பின்பற்றுவார்கள். இருப்பினும், மனிதர்கள், முன்னேற்றம் பெற்ற உணர்வுகள் பெற்றிருப்பதால், அதை சரியான முறையில் பயன்படுத்துவதற்கு பதிலாக, அவர்கள் முன்னேற்றம் பெற்ற உணர்வுகளை தவறாக பயன்படுத்தி, மேலும் அதனால் மிருகங்களைவிட தாழ்வான நிலையை அடைகிறார்கள்."
701212 - சொற்பொழிவு SB 06.01.21 and Conversation - இந்தூர்