TA/701227 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சூரத் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:28, 22 December 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த பௌதிக செயல் என்பது என்ன? அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பௌதிகம், இந்த வீடு, "எனக்கு ஒரு அழகான வீடு இருக்கிறது, வானளாவிய கட்டிடம்." எனவே நான் அனுபவிப்பவர். ஆனால் நான் இந்த இரும்பு, மரம், மண், செங்கல், இவை அனைத்தையும் தேர்ந்தெடுத்து இருக்கிறேன், மேலும் இன்னும் ஐந்து பொருள்கள் உள்ளன; நான் மண்ணை எடுத்து, தண்ணீருடன் கலந்தேன், அதை நெருப்பில் காயவைத்தேன், எனவே செங்கல் செய்யப்பட்டது. அதேபோல், சிமெண்ட் செய்யப்பட்டது. பிறகு ஒன்றாக சேர்த்து மேலும் ஒரு அழகான வீடு கட்டினோம், இன்னும் நான் நினைக்கிறேன், "நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்." நான் அனுபவிக்கவில்லை; நான் என்னுடைய சக்தியை கெடுத்துக் கொண்டிருக்கிறேன், அவ்வளவுதான். பொருள்கள் இயற்கையால் வழங்கப்பட்டது, ப்ரக்ருʼதே꞉ க்ரியமாணானி. ப்ரக்ருʼதி, ஒரு வகையில் ப்ரக்ருʼதி உங்களுக்கு உதவி செய்கிறது, மேலும் நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், அல்லது நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன், அதாவது நான் தான் அனுபவிப்பவர் என்று."
701227 - சொற்பொழிவு - சூரத்