TA/710115 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் அலகாபாத் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 15:01, 25 December 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"விஷ்ணுதூத கூறுகிறார் அதாவது 'ஒருவர் பல பாவச் செயல்களை செய்திருந்தாலும், அந்த நேரத்தில்..., அவர் நாராயணரின் புனிதமான பெயரை ஒருமுறை உச்சரித்தால், அவர் உடனடியாக விடுதலை அடைவார்'. அது உண்மையே. அது மிகைப்படுத்தல் அல்ல. ஒரு பாவி மனிதன், எப்படியோ அல்லது வேறுவிதமாக, அவன் இந்த ஹரே கிருஷ்ணா மந்திரத்தை உச்சாடனம் செய்தால், அவன் உடனடியாக அனைத்து எதிர்வினைகளிலிருந்து விடுதலை பெறுகிறான். ஆனால் சிரமம் என்னவென்றால் அவன் மீண்டும் அதே பாவத்தைச் செய்வான். அதுதான் நாமாபராத, குற்றம். அங்கே பத்து விதமான குற்றங்கள் இருக்கின்றன. இதுதான் மிகவும் கடுமையான குற்றம், அதாவது ஹரே கிருஷ்ணா மந்திரத்தை உச்சாடனம் செய்ததால், அனைத்து எதிர்வினைகளிலிருந்து விடுதலை பெற்ற பிறகு, அவன் மீண்டும் அதே பாவத்தை செய்தால், அது மிகவும் கடுமையான குற்றச் செயல். சாதாரண மனிதனுக்கு அது மிகவும் கடுமையான குற்றமாக இருக்காது, ஆனால் ஹரே கிருஷ்ணா மந்திரத்தை உச்சாடனம் செய்பவன், இந்த மந்திரத்தை பயன்படுத்தி கொண்டால், அதாவது 'நான் ஹரே கிருஷ்ணா மந்திரத்தை உச்சாடனம் செய்கிறேன், நான் பாவம் செய்தாலும், நான் விடுதலை அடைவேன்', அவன் விடுதலை அடைவான், ஆனால் அவன் குற்றவாளி, அதனால் அவன் ஹரே கிருஷ்ணா மந்திரத்தை உச்சாடனம் செய்வதனால் அடையும் இறுதி இலக்கை அடையமாட்டான்."
710115 - சொற்பொழிவு SB 06.02.09-10 - அலகாபாத்