TA/710204b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கோரக்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 13:55, 14 January 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"யம் ஏவைஷ வ்ருʼணுதே... நாயம் ஆத்மா ப்ரவசனேன லப்... (கத உபநிஷத் 1.2.23). இது வேதத்தின் தடை உத்தரவு. வெறுமனே பேசிக் கொண்டிருப்பதாலும், ஒரு நல்ல பேச்சாளராக அல்லது விரிவுரையாளராக வருவதால், நீங்கள் பரமபுருஷரை புரிந்துக் கொள்ள முடியாது. நாயம் ஆத்மா ந மேதயா. உங்களுக்கு மிகவும் நல்ல மூளை இருக்கிறது, ஆகையினால் உங்களால் புரிந்துக் கொள்ள் இயலும்— இல்லை. ந மேதயா. நாயம் ஆத்மா ப்ரவசனேன லப்யோ ந மேதயா ந. பிறகு எப்படி? யம் ஏவைஷ வ்ருʼணுதே தேன லப்ய꞉-லப்ய꞉ (கத உபநிஷத் 1.2.23): "முழு முதற் கடவுளின் ஆதரவைப் பெற்றவரால் மட்டுமே, அவரால் தான் புரிந்துக் கொள்ள முடியும்." அவரால் புரிந்துக் கொள்ள முடியும். இல்லையெனில், ஒருவராலும் புரிந்துக் கொள்ள முடியாது."
710204 - சொற்பொழிவு SB 06.03.12-15 - கோரக்பூர்