TA/710206 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கோரக்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:38, 14 January 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே நம் பக்தி செயல்முறை பகவானை தனியாக பார்க்க முயற்சி செய்வதற்காக அல்ல. கர்மீகளைப் போல், அவர்கள் சவால் இடுவார்கள், 'எங்களால் நேருக்கு நேர், பகவானைப் பார்க்க முடிந்தால்?' இல்லை. அது எங்கள் செயல்முறை அல்ல. எங்கள் செயல்முறை வேறுபட்டது. எவ்வாறு என்றால், சைதன்ய மஹாபிரபு நமக்கு கற்பித்தது போல், ஆஷ்லிஷ்ய வா பாத-ரதாம்ʼ பிநஷ்டு மாம்ʼ மர்ம-ஹதாம்ʼ கரோது வா அதர்ஷனான் (சி.சி. அந்த்ய 20.47). அனைத்து பக்தர்களும் காண விரும்புகிறார்கள், ஆனால் சைதன்ய மஹாபிரபு கற்பிக்கிறார் அதாவது 'நீங்கள் என்னை மனமுடைந்து போகச் செய்தாலும், வாழ்க்கை முழுவதும் அல்லது எப்பொழுதும் பார்க்க முடியாமல் போனாலும், அது முக்கியமல்ல. இருப்பினும், நீங்கள் தான் என் வணங்கத்தக்க பகவான்'. இதுதான் தூய்மையான பக்தன். எவ்வாறு என்றால், அங்கே ஒரு பாடல் இருக்கிறது, 'என் அன்பு தெய்வமே, தயவுசெய்து உங்கள் புல்லாங்குழலுடன் நடனமாடிக் கொண்டே என் முன் தோன்றுங்கள்'. இது பக்தியல்ல. இது பக்தியல்ல. மக்கள் நினைக்கலாம், 'ஓ, அவன் எத்தகைய சிறந்த பக்தன், கிருஷ்ணரை நடனம் ஆடிக் கொண்டே அவன் முன் காட்சியளிக்க கேட்கிறான்.' எவ்வாறென்றால் கிருஷ்ணருக்கு கட்டளையிடுகிறான். ஒரு பக்தன் எதற்கும் உத்தரவிடுவதில்லை அல்லது கிருஷ்ணரிடம் எதையும் கேட்பதில்லை, ஆனால் நேசிக்க மட்டுமே செய்வான். அதுதான் தூய்மையான அன்பு."
710206 - சொற்பொழிவு SB 06.03.16-17 - கோரக்பூர்