TA/710211 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கோரக்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 15:07, 14 January 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நீங்கள் பேசும் பொழுதும், நீங்கள் ஒரு சொற்பொழிவுக்கு பிரசங்கம் செய்ய சென்றாலும், நீங்கள் பேசினால், அதுவும் உச்சாடனம் செய்வதுதான். மேலும் தானாக அங்கே செவியால் கேட்கப்படும். நீங்கள் உச்சாடனம் செய்யும் போதும் அங்கே கேட்கப்படும். ஷ்ரவணம்ʼ கீர்தனம்ʼ விஷ்ணோ꞉ ஸ்மரணம் (ஸ்ரீ.பா. 7.5.23). அங்கு மனப்பாடமும் செய்யப்படும். நீங்கள் ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை, இவற்றின் முடிவுரைகளை மனப்பாடம் செய்யாவிட்டால், உங்களால் பேச முடியாது. ஷ்ரவணம்ʼ கீர்தனம்ʼ விஷ்ணோ꞉ ஸ்மரணம்ʼ பாத-ஸேவனம் அர்சனம். அர்சனம், இது தான் அர்சனம். வந்தனம், என்பது பிரார்த்தனை வழங்குதல். ஹரே கிருஷ்ணாவும் பிரார்த்தனை தான். ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா: "ஓ கிருஷ்ணா, ஓ கிருஷ்ணாவின் சக்தி, தயவுசெய்து என்னை உனக்கு செய்யும் சேவையில் ஈடுபடுத்து." இந்த ஹரே கிருஷ்ணா வெறுமனே பிரார்த்தனை தான்."
710211 - சொற்பொழிவு SB 06.03.18 - கோரக்பூர்