TA/710212b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கோரக்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:38, 18 January 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணரை புரிந்துக் கொள்வது மிகவும் எளிதான காரியமல்ல. "பத்து இலட்சம் ஆண்களில், ஒருவர் மட்டும் இந்த மானிட வாழ்க்கையில் சரியானவராக இருக்க முயற்சி செய்கிறார்." எல்லோரும் முயற்சி செய்யவில்லை. முதலில் ஒருவர் ப்ராஹ்மனன் ஆகவேண்டும் அல்லது ப்ராஹ்மனனுக்கு இருக்கும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். அதுதான் சத்வ குணத்தின் தளம். ஒருவர் சத்வ குணத்தின் தளத்திற்கு வராமல் பக்குவம் பெறும் கேள்விக்கே இடமில்லை. ஒருவராலும் புரிந்துக் கொள்ள முடியாது, எவரும் ரஜோ குணம் மேலும் தமோ குணத்தின் தளத்தில் பக்குவம் அடைய முடியாது, ஏனென்றால் ரஜோ குணம் மேலும் தமோ குணத்திற்கு அடிமையான ஒருவர் எப்பொழுதும் பேராசை மற்றும் காமம் உடையவர்களாக இருப்பார்கள். ததோ ரஜஸ்-தமோ-பாவா꞉ காம-லோபாதயஷ் ச யே (ஸ்ரீ.பா 1.2.19). அறியாமை மற்றும் பேரார்வம் என்னும் பௌதிக தகுதிகளால் கறைப்படுத்தப்பட்டுள்ளவர்கள், அறியாமை மற்றும் பேரார்வம் உள்ளவர்கள். அவ்வளவுதான்."
710212 - சொற்பொழிவு CC Madhya 06.149-50 - கோரக்பூர்