TA/710816 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:42, 14 May 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கட்டுண்ட வாழ்க்கை என்றால் நமக்கு நான்கு விதமான தகுதியற்ற குணங்கள் இருக்க வேண்டும். அவை யாவை? தவறுகளை செய்ய வேண்டும், மாயையில் இருக்க வேண்டும், ஏமாற்றுக்காரனாக, மேலும் நிறைவற்ற புலன்களை பெற்றிறுக்க வேண்டும். இதுதான் நம் தகுதி. ஆனால் நாம் புத்தகமும் தத்துவமும் எழுத விரும்புகின்றோம். சும்மா பாருங்கள். தன் நிலையை பற்றி ஒருவன் எண்ணவில்லை. ஆந்த. ஒரு மனிதன் குருடன், மேலும் அவன் கூறுகிறான், 'சரி, என்னுடன் வாருங்கள். நான் தெருவை கடந்து செல்வேன். வாருங்கள்'. மேலும் ஒருவர் நம்பினால், 'சரி...' அவன் விசாரிக்கவில்லை அதாவது 'ஐயா, நீங்களும் குருடர். நானும் குருடன். நீங்கள் எவ்வாறு எனக்கு, தெருவை கடந்து செல்ல உதவி செய்ய முடியும்? இல்லை. அவனும் குருடன். இதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. ஒரு குருடன், ஒரு ஏமாற்றுக்காரன், மற்றொரு குருடனை ஏமாற்றுகிறான், ஏமாற்றுகிறான். ஆகையினால் என் குரு மஹாராஜ் கூறுவது வழக்கம், இந்த பௌதிக உலகம் ஏமாற்றுக்காரனும் மேலும் ஏமாறுபவனும் நிறைந்த சமூகம். அவ்வளவுதான். ஏமாற்றுக்காரனும் மேலும் ஏமாறுபவனின் சேர்க்கை. நான் ஏமாற்றமடைய விரும்புகிறேன் ஏனென்றால் நான் பகவானை ஏற்றுக் கொள்ளவில்லை. பகவான் இருக்கின்றார் என்றால், பிறகு என் பாவபட்ட வாழ்க்கைக்கு நான் பொறுப்பாகிறேன். எனவே நான் பகவானை மறுக்க அனுமதியுங்கள்: 'அங்கே பகவான் இல்லை', அல்லது 'பகவான் இறந்துவிட்டார்'. முடிவுற்றது"
710816 - சொற்பொழிவு SB 01.01.02 - இலண்டன்