TA/710824 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:31, 21 May 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நான் ஒரு இருண்ட கிணறு பார்த்தேன். உங்கள் நாட்டில், நான் ஜான் லெனின் வீட்டில் விருந்தினராக 1969ல் வந்தபோது, அந்த தோட்டத்தில் ஒரு இருண்ட கிணறு இருந்ததைப் பார்த்தேன். இருண்ட கிணறு என்றால் மிகவும் ஆழமான பள்ளம், கிணறு, ஆனால் அது புற்களால் மூடப்பட்டிருந்தது. ஒரு ஆழமான கிணறு இருக்கின்றது என்று நீங்கள் அறியமாட்டீர்கள், ஆனால் நடந்துக் கொண்டிருக்கும் பொழுது, நீங்கள் அதனுள் விழுந்துவிட வாய்ப்புள்ளது. மேலும் அது ஏற்கனவே புற்களால் மூடப்பட்டிருக்கிறது, மற்றும் அது ஆழமாக உள்ளது. நீங்கள் விழுந்து, அதிலிருந்து வெளியேற முயற்சி செய்தால், அது தனிமையான இடமானதால், அங்கு யாரும் இல்லை, கூப்பிட்டாலும் யாருக்கும் கேட்காது, மேலும் நீங்கள் உதவியின்றி, வெறுமனே இறக்க நேரிடும். எனவே இந்த ஜடவாத வாழ்க்கை முறை, வெளி உலகைப்பற்றிய அறிவு இல்லாமல் அல்லது எந்தவித அறிவும் இல்லாமல்... வெளி உலகம் என்றால், நாம் இந்த பிரபஞ்சத்தினுள் இருப்பது போல். அது மூடப்பட்டுள்ளது. வானில் நாம் பார்க்கும் உருண்டையான பொருள், அதுதான் உறை. ஒரு தேங்காய் மூடி போல்: ஒரு தேங்காய் மூடி, உள்ளேயும் மேலும் வெளியேயும். தேங்காய் மூடிக்குள் இருளாக இருக்கும், அது இல்லாமல் வெளிச்சமாக இருக்கும். அதேபோல், இந்த பிரபஞ்சம் ஒரு தேங்காய் போன்றது. நாம் அதனுள் இருக்கின்றோம்."
710824 - சொற்பொழிவு SB 01.02.03 - இலண்டன்