TA/710912 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மொம்பாசா இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:43, 27 May 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எல்லோரும் வாழ முயற்சி செய்கிறார்கள், வாழ்வுக்கு போராடுகிறார்கள், ஆனால் இந்த வாழ்க்கையின் நிலை உடலைப் பொறுத்தவரை வேறுபட்டது. இந்த உடல் அவனுடைய மகிழ்ச்சி மேலும் துன்பம் ஆகியவற்றின் இலக்கிற்கு ஏற்ப அவனுடைய உயர்ந்த அதிகாரிகளால் அமைக்கப்பட்டது. அடுத்த பிறவியில் நான் இத்தகைய உடலை பெறுவேன் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் ஒரு வகையில், நான் அறிவாளியாக இருந்தால், நான் என் அடுத்த உடலுக்கு தயார் படுத்திக் கொள்ளலாம். குறிப்பிட்ட கிரகத்தில், குறிப்பிட்ட சமூகத்தில் வாழ நான் உடலை தயார்படுத்தலாம். நீங்கள் உயரமான கிரகத்திற்கு கூட செல்லலாம். மேலும் நான் விரும்பினால், கிருஷ்ணர் லோகத்திற்கு, கோலோக வ்ருʼந்தாவனத்திற்குச் செல்ல என் உடலை தயார்படுத்திக் கொள்ளலாம். இதுதான் செயல்பாடு. மனித உடல் அந்த அறிவுக்கானது, அதாவது 'என் அடுத்த பிறவியில் நான் எத்தகைய உடலை பெறுவேன்?"
710912 - சொற்பொழிவு SB 07.07.30-31 - மொம்பாசா