TA/721001 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 16:06, 17 August 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"தீட்சை எடுக்கும் போது 'தவறான பாலுறவு செய்ய மாட்டோம், போதை வஸ்து பாவிக்க மாட்டோம், மாமிசம் உண்ண மாட்டோம், சூதாட மாட்டோம்' என்று சத்தியம் செய்கிறீர்கள். ஆனால் அந்தரங்கமாக இந்த விஷயங்களில் ஈடுபட்டால் எத்தகைய மனிதர் நீங்கள்? ஏமாற்றுக்காரனாக இருக்காதீர்கள். எளிமையாக இருங்கள். 'இந்த விஷயங்களை நாம் செய்ய மாட்டோம்' என்று வாக்குறுதி கொடுத்த பின்னர், மீண்டும் செய்யாதீர்கள். அப்போது நற்குணத்தில் நிலைத்திருப்பீர்கள். அவ்வளவுதான். யாரும் உங்களை தொந்தரவு செய்ய முடியாது. ஆனால் உங்களை நீங்களே ரகசியமாக மாசுபடுத்திக் கொண்டால், நற்குணம் போய்விடும். இது ஒரு எச்சரிக்கை. இந்த முட்டாள்தனங்களை செய்ய மாட்டோம் என்று வாக்குறுதி அளித்து தீட்சை பெற்ற பின்னர் நற்குணத்தில் பூரணமாக நிலைத்திருப்பீர்கள். மாம் ஏவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி (BG 7.14). மாயையால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் நீங்கள் உங்களையே ஏமாற்றிக் கொண்டால், ஆன்மீக குருவை ஏமாற்றினால், கடவுளை ஏமாற்றினால், மாயையால் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள்."
721001 - சொற்பொழிவு SB 01.03.26 - லாஸ் ஏஞ்சல்ஸ்