TA/730813 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பாரிஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1973 Category:TA/அமிர்தத் துளிகள் - பாரிஸ் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/73...")
 
(No difference)

Latest revision as of 14:12, 1 October 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உண்மையான தீர்வு யாதெனில்: கிருஷ்ண உணர்வு. ஆகையினால் வேதாந்த-ஸூத்ர கூறுகிறது, அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா: 'இப்பொழுது நீங்கள் மற்ற விஷயங்களைப் பற்றி விசாரிக்க வேண்டியதில்லை'. நீங்கள் ஏன் விசாரிக்க வேண்டும்? உங்களுக்குத் தேவையான மற்ற பொருள்கள் அனைத்தும், ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. அது வழங்கப்படும். நீங்கள் ஏன் வேதனைப்படுகிறீர்கள்? நீங்கள் சும்மா கிருஷ்ண உணர்வில், உங்கள் வாழ்க்கையின் மதிப்பை புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அதுதான் உங்களுடைய ஒரே வேலை. தஸ்யைவ ஹேதோ꞉ ப்ரயதேத கோவித꞉. கோவித: 'புத்திசாலியாக இருப்பவர்கள்', தஸ்யைவ ஹேதோ꞉, 'அந்த பொருளுக்காக', ப்ரயதேத 'முயற்சி'. எனவே அந்த பொருளை அடைய முயற்சி செய்யுங்கள். அந்த பொருளுக்காக... ந லப்யதே யத் ப்ரமதாம் உபர்ய் அத꞉ (SB 1.5.18). எவ்வாறு என்றால் மக்கள் போராடுவதுப் போல். பௌதிக உலகில், நீங்கள் எங்கு சென்றாலும், லண்டனுக்கு அல்லது பாரிஸ்க்கு அல்லது கல்கத்தாவுக்கு அல்லது பம்பாய்க்கு, எங்கு சென்றாலும், அங்கு என்ன வேலை? எல்லோரும் போராடுகிறார்கள்: உஷ்-உஷ்-உஷ்-உஷ்-உஷ்-உஷ்-உஷ். இரவு பகலாக மோட்டார் வாகனம் இந்த வழி, அந்த வழி, இந்த வழி, அந்த வழி என்று போய்க் கொண்டிருக்கிறது. நேற்று இரவு நான் ஷ்ருதகீர்தியுடன் பேசிக் கொண்டிருந்தேன். நாம் எங்கு சென்றாலும் , இந்த முட்டாள்தனமான விஷயத்தை பார்க்கிறோம், உஷ்-உஷ்-உஷ்-உஷ்-உஷ்-உஷ்-உஷ். நீங்கள் எந்த நகரத்திற்குச் சென்றாலும், அதே தெரு, அதே மோட்டார் வாகனம், அதே உஷ்-உஷ், அதே பெட்ரோல், அவ்வளவுதான்." (சிரிப்பொலி)
730813 - சொற்பொழிவு BG 13.05 - பாரிஸ்