TA/730722b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1973 Category:TA/அமிர்தத் துளிகள் - இலண்டன் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops...")
 
(No difference)

Latest revision as of 13:59, 13 February 2024

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பெங்காலி மொழியில் அது சொல்லப்பட்டுள்ளது, ஹஜன கர ஸாத⁴ன கர மூர்தி யாங்ரே ஹய. அதன் பொருள் என்னவென்றால் நீங்கள் ஒரு சிறந்த பக்தனாக இருக்கலாம். அதனால் பரவாயில்லை. ஆனால் அது உங்கள் மரண நேரத்தில் சோதனை செய்யப்படும், நீங்கள் கிருஷ்ணரை எவ்வாறு நினைவில் வைத்திருக்கிறீர்கள் என்று. அது சோதிக்கும் பரிட்சையாக இருக்கும். மரண நேரத்தில், நாம் மறந்துவிட்டால், நாம் ஒரு கிளியைப் போலாகிவிட்டால்... ஒரு கிளியைப் போல், அதுவும் ஜெபிக்கும், "ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா." ஆனால் பூனை அதன் கழுத்தைப் பிடிக்கும் பொழுது, "த்யன்ஹ்! த்யன்ஹ்! த்யன்ஹ்! த்யன்ஹ்!" இனி கிருஷ்ணா இல்லை. இனி கிருஷ்ணா இல்லை. எனவே செயற்கையான பயிற்சி நம்மை காப்பாற்றாது. பிறகு "த்யன்ஹ், த்யன்ஹ்." அந்த கப-பித்த-வாதை꞉, கண்டாவரோதன-விதௌ ஸ்மரணம்ʼ குதஸ் தே (ம்ம் 33). எனவே நாம் உண்மையில் வீடுபேறு அடைய, பரமபதம் அடைவதில் தீவிரமாக இருந்தால் ஆரம்பத்திலிருந்து கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறல்லாமல் மரணத்திற்கு இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன் செய்யலாம் என்று இருக்கக் கூடாது. ஓ, அது அவ்வளவு எளிதானது அல்ல. அது அவ்வளவு எளிதானது அல்ல."
730722 - சொற்பொழிவு BG 01.28-29 - இலண்டன்