TA/Prabhupada 0137 - வாழ்க்கையின் இலக்கு என்ன: Difference between revisions
(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0137 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Lec...") |
(No difference)
|
Revision as of 08:51, 18 March 2016
Lecture on BG 7.4 -- Nairobi, October 31, 1975
ஹரிகேஷ்: "மொழிபெயர்ப்பு - பூமி, நீர், காற்று, நெருப்பு, வான்வெளி, மனம், அறிவும் மேலும் நேர்மையற்ற தற்பெருமை - மொத்தத்தில் இந்த எட்டும் சேர்ந்து என்னுடைய தனியாக பிரிக்கப்பட்ட பௌதிக சக்திகள்."
பிரபுபாதர்:
- bhūmir āpo 'nalo vayuḥ
- khaṁ mano buddhir eva ca
- ahaṅkāra itīyaṁ me
- bhinnā prakṛtir aṣṭadhā
- (BG 7.4)
பகவான் தானே விளக்குகிறார். பகவான் யார் என்பதை பகவானே சொல்லிக் கொடுக்கிறார். அதுதான் உண்மையான அறிவு. நீங்கள் பகவானை யூகம் செய்தால், அது சாத்தியமல்ல. இறைவன் எல்லையற்றவர். உங்களால் புரிந்துக் கொள்ள முடியாது. பகவான் கிருஷ்ணர், ஆரம்பத்தில் கூறினார், அசம்ஸயம் ஸமக்ரம் மாம் யதா ஞாஸ்யஸி தச்ருனு (BG 7.1). ஸமக்ரம். ஸமக்ரம் என்றால் ஏதாவது...அல்லது ஸமக்ரம் என்றால் முழுமையான. ஆகையால் படிப்பிற்கும் அறிவிற்கும் ஏற்ற எதாவது பொருள் அங்கிருந்தாலும், அனைத்தின் மொத்தக் கூட்டுத்தொகையும், ஒன்றே. அனைத்து மொத்தக் கூட்டுத்தொகையும் இறைவனே. ஆகையினால் அவர் தானே விவரிக்க துவங்குகிறார். முதிலாவதாக, ஏனென்றால் நமக்கு இறைவனைப் பற்றிய செய்திகள் இல்லை. ஆனால் நடைமுறையில் நாம் இந்த மிகப் பெரிய அளவிலான நிலம், நீர், சமுத்திரம், வானம், பிறகு நெருப்பும் பார்க்கிறோம். பல பொருள்கள், ஜட பொருள்கள். ஜட பொருள்களும்... மனமும் ஒரு ஜட பொருளாகும். அதன் பிறகு தற்பெருமை. எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அதாவது "நான் ஏதோ ஒன்று. நான் ஏதோ ஒன்று." கர்தாஹமிதி மன்யதே. அஹங்கார-விமூடாத்மா. இந்த நேர்மையற்ற தற்பெருமை. இந்த தற்பெருமை என்றால் நேர்மையற்ற தற்பெருமை. மேலும் அங்கே களங்கமற்ற தற்பெருமை உள்ளது. அந்த களங்கமற்ற தற்பெருமை தான், அஹம் ப்ரமாஸ்மி, மேலும் நேர்மையற்ற தற்பெருமை: "நான் இந்தியன்," "நான் அமெரிக்கன்," "நான் ஆப்பிரிக்கன்," "நான் பிராமணன்," "நான் ஷத்ரியன்," "நான் இது." நேர்மையற்ற தற்பெருமை இது நேர்மையற்ற தற்பெருமை, அஹங்கார. ஆகையால் இந்த தருணத்தில், இந்த தருணத்தில் அல்ல, எப்பொழுதும், நாம் இது போன்ற காரியங்களால் சூழப்பட்டுள்ளோம். அதுவே நம்முடைய மெய்யியலின் ஆரம்பம்: இந்த நிலம் எங்கிருந்து வந்தது? இந்த நீர் எங்கிருந்து வந்தது? இந்த நெருப்பு எங்கிருந்து வந்தது? இது இயல்பான கேள்வி. இந்த வானம் எங்கிருந்து வந்தது? பல லட்ச லட்சமாக, இந்த நட்சத்திரங்கள் எவ்வாறு வைக்கப்பட்டது? ஆகையால் இவை தான் புத்திசாலிகளின் கேள்விகள். அதுதான் தத்துவ ஞானத்துக்குரிய வாழ்க்கையின் ஆரம்பம். ஆகையினால் சிந்திக்க கூடிய மனித இனத்தைச் சேர்ந்தவர்கள், படிப்படியாக, முழுமுதற் கடவுள், கிருஷ்ணரை புரிந்துக் கொள்ள அவர்கள்மிக ஆர்வமுடையவர்களாக இருக்கிறார்கள்.
ஆகையால் கிருஷ்ணர் அங்கிருக்கிறார், மேலும் கிருஷ்ணர் தானே விளக்கம் அளிக்கிறார். "நான் தான் இவ்வாறு இருக்கிறேன்." ஆனால் துரதிஷ்டவசமாக நாம் கிருஷ்ணரை புரிந்துக் கொள்ள மாட்டோம், ஆனால் பகவான் யார் என்று நாம் அனுமானிக்க முயற்சி செய்கிறோம். இதுதான் நம்முடைய நோய். கிருஷ்ணர் தானே விளக்கம் கொடுக்கிறார்; பகவான் தானே விளக்கம் கொடுக்கிறார். நாம் அந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டாம், ஆனால் மறுக்கவும் கூடாது அல்லது நாம் பகவானை தலை, கால் மற்றும் பலவின்றி ஏற்றுக் கொள்ளலாம், இன்னும் பல விஷயங்கள். இதுதான் நம்முடைய நோய். ஆகையினால் முன்னைய பதத்தில் அது விளக்கப்பட்டு இருக்கிறது,
- manuṣyāṇāṁ sahasreṣu
- kaścid yatati siddhaye
- yatatām api siddhānāṁ
- kaścin māṁ vetti tattvataḥ
- (BG 7.3)
பல லட்சக்கணக்கான மக்களில், உண்மையிலேயே அவர்கள் கடுமையாக புரிந்துக் கொள்ள விரும்புவது, "வாழ்க்கையின் இலக்கு என்ன? பகவான் என்பவர் யார்? என்னுடைய உறவுமுறை என்ன...?" ஒருவருக்கும் ஆர்வம் இல்லை. எவ்வாறு என்றால் ஸ ஏவ கோ-கர: (SB 10.84.13). அனைவரும் ஆர்வம் காட்டுவது வாழ்க்கையின் உடல் சார்ந்த எண்ணம், புனைகளும் நாய்களும் போல். இதுதான் நிலைமை, இப்போது மட்டுமல்ல, எப்பொழுதுமே, இது பௌதிக நிபந்தனை. ஆனால் யாரோ, மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷூ, லட்சத்தில் ஒருவர், புரிந்துக் கொள்ள முயற்சிக்கிறார், அவர் வாழ்க்கையில் புரணமடைய. மேலும் அத்தகைய பூரணத்துவத்திலும்....,
பூரணத்துவம் என்றால் அவருடைய உண்மையான அடிப்படை நிலையை புரிந்துக் கொள்ள வேண்டும், அதாவது அவர் இந்த ஜட உடல் அல்ல; அவர் ஆன்மீக ஆத்மா, ப்ரமன். அதுதான் பூரணத்துவம், அறிவின் பூரணத்துவம், ப்ரம-ஞான.