TA/Prabhupada 0396 - ராஜா குலசேகரனின் பாடல் பொருள்: Difference between revisions

 
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
Line 5: Line 5:
[[Category:TA-Quotes - Purports to Songs]]
[[Category:TA-Quotes - Purports to Songs]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0395 - La teneur et portée de Parama Koruna|0395|FR/Prabhupada 0397 - La teneur et portée de Radha-Krishna Bol|0397}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0395 - பரம கருணா பொருள்விளக்கம்|0395|TA/Prabhupada 0397 - ராதா-கிருஷ்ண போல் பொருள்விளக்கம்|0397}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 16: Line 16:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|hFmn27f1VqQ| ராஜா குலசேகரனின் பாடல் பொருள் <br />- Prabhupāda 0396}}
{{youtube_right|t3jP7AeVvuI| ராஜா குலசேகரனின் பாடல் பொருள் <br />- Prabhupāda 0396}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


<!-- BEGIN AUDIO LINK -->
<!-- BEGIN AUDIO LINK -->
<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/clip/C14_06_prayers_of_king_kulasekhara_purport.mp3</mp3player>
<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/purports_and_songs/C14_06_prayers_of_king_kulasekhara_purport.mp3</mp3player>
<!-- END AUDIO LINK -->
<!-- END AUDIO LINK -->



Latest revision as of 19:38, 29 June 2021



Purport to Prayers of King Kulasekhara, CD 14

இந்த ஸ்லோகம், பிரார்த்தனை, முகுந்த்-மாலா-ஸ்தோத்திரம் என்கிற புத்தகத்தில் இருக்கிறது. இந்த பிரார்த்தனை குலசேகரன் என்ற ஒரு அரசனால் செய்யப்பட்டது. அவன் ஒரு மிக சிறந்த அரசன், அதே நேரத்தில் ஒரு மிக சிறந்த பக்தனும் ஆவான். வைதீக இலக்கியத்தில் இதைப் போன்ற பல உதாரணங்கள் இருக்கின்றன. அரசர்கள் மாபெரும் பக்தர்களாகவும் இருந்தார்கள், ஆகையால் அவர்கள் ராஜரிஷி என அழைக்கப்படுவார்கள். ராஜரிஷி என்றால் ராஜ சிம்மாசனத்தின் அமர்ந்திருந்தாலும், அவர்கள் தெய்வத்தன்மை உடையவர்கள்.

ஆக இந்த குலசேகரன், ராஜா குலசேகரன், கிருஷ்ணரிடம் வேண்டுகிறார் "என் அன்புக்குரிய கிருஷ்ணா, என் மனம் என்னும் அன்னப்பறவை உன் தாமரைப் பாதங்கள் அடியில் விடுவிக்க முடியாதபடி சிக்கியிருக்க வேண்டும். ஏனென்றால், மரண நேரத்தில், உடல் செயல்பாட்டின் மூன்று நாடிகள், அதாவது கபம், வாதம் மற்றும் பித்த வாயு, அவை கலந்து தொண்டையை நெரிக்கின்றன, ஆகையால் என்னால் உன் இனிதான திருநாமத்தை மரண நேரத்தில் உச்சரிக்க முடியாது." இதை இவ்வகையில் ஒப்பிட்டுரிக்கிறார்; ஒரு வெள்ளை அன்னப்பறவை, எப்பொழுது ஒரு தாமரைப் பூவை காண்கிறதோ, அது அருகில் சென்று நீரில் முழுகி ஜல க்ரீடை செய்கிறது, மற்றும் இதனால் அது தாமரையின் தண்டில் சிக்கி விடுகிறது.

ஆக குலசேகர அரசனர், தன் மனதின் மற்றும் உடலின் திடமான நிலையில், பகவானின் தாமரை பாதங்களின் தண்டில் உடனேயே சிக்கி, மரணம் அடைய விரும்புகிறார். தாத்பரியம் என்னவென்றால் ஒருவர் கிருஷ்ண உணர்வில் பணிகளை, தனது மனதின் மற்றும் உடலின் திடமான நிலையிலேயே செய்ய வேண்டும். உன் வாழ்க்கையின் கடைசி காலம் வரை காத்திருக்காதே. மனமும் உடலும் திடமாக இருக்கையிலேயே கிருஷ்ண உணர்வில் பணிபுரிய பழக்கப்படுத்திக் கொள். பிறகு மரண நேரத்தில் உன்னால் கிருஷ்ணரையும் அவரது லீலைகளையும் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும் மற்றும் உடனேயே ஆன்மீக சாம்ராஜ்யத்திற்கு அழைத்துச் செல்லப் படுவாய்.