TA/Prabhupada 0830 - நாம் வேவையாற்ற முயற்சிக்கிறோம் என்று எண்ணுவதே வைஷ்ணவ தத்துவம்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0830 - in all Languages Category:TA-Quotes - 1972 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0829 - The Four Walls Will Hear You Chant. That is Sufficient. Don't be Disappointed|0829|Prabhupada 0831 - We Cannot Follow Asadhu-marga. We Must Follow Sadhu-marga|0831}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0829 - நீங்கள் ஜெபிப்பதை நான்கு சுவர்கள் கேட்கின்றன - இதுவே போதுமானது - ஏமாற்றம் கொள்ளாதீர்|0829|TA/Prabhupada 0831 - நாம் சாது மார்க்கத்தை பின்பற்றவேண்டும் - அசாது மார்க்கத்தை அல்ல|0831}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:27, 4 August 2021



Lecture on SB 1.2.30 -- Vrndavana, November 9, 1972

கிருஷ்ணர் விபு; நாம் அனு. நம்மை கிருஷ்ணருக்கு இணையாக எண்ணவே கூடாது. அது பெரும் அபராதம். அதற்குப் பெயர்தான் மாயை. அதுவே மாயை என்னும் வலை. நாம் இந்த பௌதிக உலகத்திற்கு வந்ததே கிருஷ்ணருடன் இணைவதற்கு தான். கிருஷ்ணரைப் போல ஆவோம் என்று நாம் எண்ணினோம்.

க்ருஷ்ண-புலியா ஜீவ போக வாஞ்சா கரே
பஸேதே மாயா தாரே ஜாபடியா தரே
(ப்ரேம-விவர்த).

கிருஷ்ணருடன் ஒன்றாக வேண்டும் போட்டியிட வேண்டும் என்று நாம் நினைப்பதால், அதனால் தான் நாம் இந்த பௌதிக உலகத்திற்கு அனுப்பப்பட்டு இருக்கிறோம். மாயா தாரே ஜாபடியா தரே. இந்த பௌதிக உலகில் இது நடந்து கொண்டுதான் இருக்கிறது. அனைவரும் கிருஷ்ணராக முயற்சி செய்கின்றனர். அது மாயை. எல்லோரும். "நான் முதலில் பெரிய ஆளாக வேண்டும்; பின்பு மந்திரியாக, அதன்பின்பு ஆளுநராக ஆகவேண்டும்." என்று எண்ணுகின்றனர். இப்படியாக அனைத் தும் தோல்வியுறும் பொழுது கடவுளின் இருப்பு நான் இணைந்து கொள்கிறேன் என்று எண்ணுகின்றனர். அதாவது" நான் கடவுள் ஆகிறேன்." என்கின்றனர் இது நடந்து கொண்டுதான் இருக்கிறது. வாழ்வதற்காக பௌதிக உலகில் நடக்கும் போராட்டம் இது. அனைவரும் கிருஷ்ணராக முயற்சி செய்கின்றனர்.

ஆனால் நம்முடைய தத்துவம் வேறு. நமக்கு கிருஷ்ணராக வேண்டாம். கிருஷ்ணருடைய சேவகனாக வேண்டும். அதுவே மாயாவாத கொள்கைக்கும் வைஷ்ணவ கொள்கைக்கும் உள்ள வேறுபாடு. கிருஷ்ணனுடைய சேவகனுக்கு சேவகனுக்கு சேவகனுக்கு சேவகனாக எவ்வாறு ஆவது என்று சைதன்ய மஹாபிரபு கற்றுத் தருகிறார். கோபீ-பர்து: பத-கமலயோர் தாஸ-தாஸ-தாஸாநுதாஸ: (சி.சி. மத்திய 13.08). யார் ஒருவன் கிருஷ்ண சேவகர்களின் கீழ்நிலையில் இருக்கிறானோ அவனே முதல்தர வைஷ்ணவன். அவனே முதல்தர வைஷ்ணவன். எனவே ஸ்ரீ சைதன்ய மகாபிரபு:

த்ருணாத் அபி ஸுநீசேன
தரோர் அபி ஸஹிஷ்ணுனா
அமானினா மாநதேன
கீர்தனீய: ஸதா ஹரி:
(சி.சி. ஆதி 17.31)

கூறுகிறார். இதுவே வைணவ தத்துவம். நாம் சேவகனாக இருக்கவே முயற்சிக்கிறோம். நாம் எந்த பௌதிக பொருளுடனும் நம்மை அடையாளம் காண்பதில்லை. பௌதிகப் பொருளுடன் அடையாளம் காண தொடங்கியவுடன் மாயையின் பிடியில் அகப்பட்டுக் கொண்டு விடுவோம். கிருஷ்ணர் உடனான எனது உறவை நான் மறந்த உடன்.... நான் கிருஷ்ணருடைய நித்ய சேவகன். சைதன்ய மஹாபிரபு சொல்கிறார், ஜீவேர ஸ்வரூப ஹய நித்ய-க்ருஷ்ண-தாஸ (சி.சி. மத்திய 20.108-109). கிருஷ்ணருடைய சேவகனாக இருப்பதுதான் உயிர் வாழியின் நிரந்தர அடையாளம். இதனை மறப்பது தான் மாயை எனப்படும். என்னை "நானே கிருஷ்ணர்" என்று எண்ணுவது மாயை. மாயையை விரட்டுவது ஞானத்தில் முதிர்ச்சி அடைவதன் மூலம். அதுவே ஞானி. தன்னுடைய உண்மையான நிலையை உணர்ந்து உண்மையான அறிவில் இருப்பவனே ஞானி. "நான் கடவுளுக்கு இணையானவன் நானே கடவுள்" என்று நினைப்பது அறிவல்ல. நான் கடவுள் ஆனால் நான் கடவுளின் மாதிரி. முழுமுதற்கடவுள் கிருஷ்ணர் ஈஷ்வர: பரம: க்ருஷ்ண: (பிஸ. 5.1).