TA/Prabhupada 0928 - கிருஷ்ணர் மீதான உங்களது கலப்படமற்ற அன்பை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். அதுவே வாழ்வின்: Difference between revisions
(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Tamil Pages - 207 Live Videos Category:Prabhupada 0928 - in all Languages Category:TA...") |
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items) |
||
Line 9: | Line 9: | ||
<!-- END CATEGORY LIST --> | <!-- END CATEGORY LIST --> | ||
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE --> | <!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE --> | ||
{{1080 videos navigation - All Languages| | {{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0927 - நீங்கள் எப்படி கிருஷ்ணரை ஆராய முடியும்? அவர் எல்லையற்றவர். இது அசாத்தியமானது|0927|TA/Prabhupada 0929 - குளிப்பது, அதுவும் பழக்கத்திலேயே இல்லை. வாரத்திற்கு ஒரு முறை வேண்டுமானாலும் இருக்கலா|0929}} | ||
<!-- END NAVIGATION BAR --> | <!-- END NAVIGATION BAR --> | ||
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--> | <!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--> |
Latest revision as of 07:36, 7 August 2021
730423 - Lecture SB 01.08.31 - Los Angeles
பிரபுபாதர்: இந்த மனம், நாம் அனைவரும் அறிவோம் மனதின் வேகம் என்ன என்று. ஒரு நொடியின் பத்தாயிரத்தில் ஒரு பகுதியில் கூட, நாம் கோடிக்கணக்கான மைல்கள் சென்றுவிடலாம். மனதின் வேகம். அது அவ்வளவு வேகமானது. நீங்கள் இப்போது இங்கு அமர்ந்து இருக்கிறீர்கள், கோடிக்கணக்கான மைல் தொலைவில் உள்ள ஏதாவது ஒன்றை நீங்கள் பார்த்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம், நீங்கள் உடனேயே..... உங்கள் மனம் அதனை உடனேயே சென்றடையும். எனவே இந்த இரண்டு உதாரணங்களும் அளிக்கப்பட்டுள்ளன. எவ்வளவு விஞ்ஞானப் பூர்வமாக உள்ளது என்று பார்த்துக் கொள்ளுங்கள். இந்த அயோக்கியர்கள், முன்னேறிய மனமோ அல்லது முன்னேறிய விஞ்ஞானிகளோ இருந்ததில்லை என்று கூறுகிறார்கள். பிறகு எங்கிருந்து இந்த வார்த்தைகளெல்லாம் வருகின்றன? காற்றின் வேகம், மனதின் வேகம். அவர்களுக்கு சில அனுபவங்களும், சில அறிவோ இல்லாமல், எதற்காக, ஏன் இந்த புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன?
பந்தாஸ் து கோடி-ஷத-வத்ஸர-ஸம்ப்ரகம்யோ வாயோர் அதாபி மனஸ: (பி.சம் 5.34). எப்படி இந்த வேகமான, வேகமான விமானங்கள் தயாரிக்கப்பட்டன? உயர்ந்த விஞ்ஞானிகளாலும், உயர்ந்த விவேகிகளாலும் தான். அவர்களால் உருவாக்கப்பட்டது. எனவே அது பக்குவமானவையா? இல்லை. ஸோ 'ப்யஸ்தி யத் ப்ரபத-ஸீம்ன்யவிசிந்த்ய-தத்த்வே. இருந்தாலும், நீங்கள், இந்தப் படைப்பு என்றால் என்ன எனும் புரிதலில் கற்பனைக் கெட்டாதவராகவே இருக்கிறீர்கள். நீங்கள் இந்த வேகத்தில் ஓடும் அளவிற்கு முன்னேறியவராக இருந்தாலும், நீங்கள் மிகப் பெரிய விஞ்ஞானியாகவும், பெரும் தத்துவ வாதியாகவும் இருந்தாலும்கூட, நீங்கள் இதே நிலையிலேயே இருப்பீர்கள், தெரிந்து கொள்ளாமலேயே.
எனவே நாம் எப்படி கிருஷ்ணரைப் புரிந்து கொள்வது? மேலும் கிருஷ்ணர் இந்த எல்லா விஷயங்களையும் படைத்துள்ளார். கிருஷ்ணரின் படைப்புகளையே உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், எப்படி உங்களால் கிருஷ்ணரை புரிந்து கொள்ள முடியும்? இது சாத்தியமே அல்ல. இது சாத்தியமல்ல எனவே, பக்தர்களின் இந்த விருந்தாவன மனநிலைதான் பக்குவமானது. அவர்களுக்கு கிருஷ்ணரை புரிந்துகொள்ள வேண்டிய வேலையே இல்லை. அவர்கள், எந்தக் கட்டுப்பாடும் இன்றி கிருஷ்ணர் மீது அன்பு செலுத்தவே விரும்புகின்றனர். "கிருஷ்ணர் கடவுள் என்ற படியால், நான் அன்பு செலுத்துகிறேன்...." அவர்கள் மனநிலை அப்படிப்பட்டதல்ல. கிருஷ்ணர் விருந்தாவனத்தில் கடவுளாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அங்கே அவர் சாதாரண ஒரு இடைச் சிறுவனாக தான் இருக்கிறார். ஆனால் சில சமயங்களில், அவர், தான் முழுமுதற் கடவுள் என்பதை நிரூபிக்கிறார். ஆனால் அதைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு அவர்கள் அக்கறை கொள்வதில்லை. விருந்தாவனத்திற்கு வெளியே......
குந்திதேவியைப் போல். குந்திதேவி விருந்தாவன வாசியல்ல. அவள் விருந்தாவனத்திற்கு வெளியே, ஹஸ்தினாபுர வாசி. வெளியே இருக்கும் பக்தர்கள், விருந்தாவனத்திற்கு வெளியே இருக்கும் பக்தர்கள், அவர்கள் விருந்தாவனவாசிகளை ஆராய்கிறார்கள், அவர்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள். ஆனால் விருந்தாவன வாசிகள் கிருஷ்ணர் எவ்வளவு உயர்ந்தவர் என்பதை பற்றி தெரிந்து கொள்வதில் அக்கறை காட்ட மாட்டார்கள். இதுதான் வித்தியாசம். எனவே நமது வேலை கிருஷ்ணர் மீது அன்பு செலுத்துவது மட்டும்தான். எந்த அளவிற்கு கிருஷ்ணன் மீது அன்பு செலுத்துகிறீர்களோ, அந்த அளவிற்கு நீங்கள் பக்குவம் அடைவீர்கள். கிருஷ்ணரை பற்றியோ, அவர் எவ்வாறு படைத்தார் என்பதை பற்றியோ புரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவையெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளன. பகவத்கீதையில் கிருஷ்ணர் தன்னைப் பற்றி விளக்கியுள்ளார். கிருஷ்ணரைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு மிகவும் கவலைப் படாதீர்கள். அது சாத்தியமானதல்ல. கிருஷ்ணர் மீதான உங்களது கலப்படமற்ற அன்பை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். அதுவே வாழ்வின் பக்குவம்.
மிக்க நன்றி.
பக்தர்கள் : ஹரே கிருஷ்ணா, ஜெய!