TA/Prabhupada 0829 - நீங்கள் ஜெபிப்பதை நான்கு சுவர்கள் கேட்கின்றன - இதுவே போதுமானது - ஏமாற்றம் கொள்ளாதீர்: Difference between revisions
(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0829 - in all Languages Category:TA-Quotes - 1972 Category:TA-Quotes - Lec...") |
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items) |
||
Line 8: | Line 8: | ||
<!-- END CATEGORY LIST --> | <!-- END CATEGORY LIST --> | ||
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE --> | <!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE --> | ||
{{1080 videos navigation - All Languages| | {{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0828 - எவரொருவர் தனது உடனிருப்போர் நலனில் கவனம் கொள்கிறாரோ - அவர் குரு ஆவார்|0828|TA/Prabhupada 0830 - நாம் வேவையாற்ற முயற்சிக்கிறோம் என்று எண்ணுவதே வைஷ்ணவ தத்துவம்|0830}} | ||
<!-- END NAVIGATION BAR --> | <!-- END NAVIGATION BAR --> | ||
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--> | <!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--> |
Latest revision as of 07:27, 4 August 2021
The Nectar of Devotion -- Vrndavana, November 7, 1972
பிரத்யும்ன: "ஸ்ரீல ரூப கோஸ்வாமி மங்களகரம் என்பதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். அவர் சொல்கிறார் உண்மையான மங்கலம் என்பது உலக மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும் செயல்களை செய்வது."
பிரபுபாதர்: ஆம் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை போல: இது உலக மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும் செயலாகும். இது வகுப்புவாத இயக்கம் கிடையாது மனிதனுக்கானது மட்டுமல்ல, மிருகங்கள், பறவைகள், மரங்கள் அனைத்துக்கும் ஆனது. இந்த உரையாடல் ஹரிதாஸ் தாகூரால் சைதன்ய மகாபிரபு உடன் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், ஹரிதாஸ் தாகூர் உறுதி செய்கிறார், ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை சத்தமாக ஜபம் செய்வதால், மரங்கள் பறவைகள், விலங்கினங்கள், அனைத்துமே நன்மை அடையும் என்று. இதுவே நாம ஆச்சாரியார் ஹரிதாஸ் தாகூரின் அறிக்கை. எனவே நாம் ஹரே கிருஷ்ணா மஹா மந்திரத்தை சத்தமாக ஜபிக்கும் பொழுது அனைவருக்கும் நன்மை தருகிறது. இந்த அறிக்கை மெல்போர்ன் நகரில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. நீதிமன்றம் கேட்டது, "நீங்கள் ஏன் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை சத்தமாக வீதிகளில் ஜெபம் செய்கிறீர்கள்?" என்று. அதற்கு எங்களுடைய பதில், "அனைவருக்கும் நன்மை பயக்கும் என்பதால்தான்" என்று இருந்தது. உண்மையில் அது வாஸ்தவம். ஆமாம் இப்போது அரசாங்கம் எந்த வழக்கும் தொடர வில்லை. வீதிகளில் நாங்கள் சுதந்திரமாக ஜெபம் செய்கிறோம். அதனால் நன்மை உண்டு. நாம் ஹரே கிருஷ்ண மந்திரம் ஜெபிப்பது, அனைவருக்கும் நன்மை பயக்கும் மனிதர்களுக்கு மட்டுமல்ல. என்னுடைய குரு மகராஜ் என்றும் சொல்வது உண்டு "நாங்கள் சென்று ஜெபம் செய்கிறோம் ஆனால் யாரும் அந்தக் கூட்டத்திற்கு வருவதில்லை" என்று யாராவது குறை கூறினால் அதற்கு குரு மகராஜ் சொல்வதுண்டு, "ஏன் அங்கு உள்ள நான்கு சுவர்களும் அதனை கேட்டு இருக்குமே? அதுவே போதுமானது. வருத்தப்படாதீர்கள். ஜெபித்துக் கொண்டே இருங்கள் 4 சுவர்கள் இருந்தால் அவை கேட்கும் அது போதும். விலங்குகள் மிருகங்கள் பறவைகள் பூச்சிகள் அனைத்து உயிரினங்களும் நன்மை அடையும் அளவிற்கு ஜெபமானது வலுவானது. தொடர் எண்கள் அதுவே சிறந்த நற்பணி செயல். மனித சமுதாயத்தில் நற்பணி செயல்கள் ஒரு சமூகத்திற்கோ நாட்டிற்கோ சமுதாயத்திற்கோ மனிதர்களுக்கு உள்ளது. ஆனால் இந்த நற்பணி செயலோ மனித சமுதாயத்திற்கு மட்டுமின்றி, பறவைகள், விலங்குகள், மரங்கள், அனைவருக்கும் பயனளிக்கின்றன. இதுவே சிறந்தது உலகிலேயே மிக உயர்ந்த நற்பணி செயல். கிருஷ்ண உணர்வினை பரப்புங்கள்.