TA/Prabhupada 0949 - நாம் கல்வியில் முன்னேறி வருகிறோம், ஆனால் நம் பற்களைப் பற்றி கூட அறிந்து கொள்ளவில்லை: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0948 - This Age Called Kali, it is Not Very Good Time. Simply Disagreement and Fighting|0948|Prabhupada 0950 - Our Neighbor May Starve, But We Don't Care For It|0950}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0948 - இந்த யுகம் கலியுகம் என்று அழைக்கப்படுகிறது, இது மிகவும் நல்ல யுகம் அல்ல. கருத்து வேறுப|0948|TA/Prabhupada 0950 - நம் பக்கத்துக்கு வீட்டுக்காரர் பட்டினி கிடப்பார், ஆனால் நாம் அதைப்பொருட் படுத்துவதில|0950}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:28, 16 August 2021



720831 - Lecture - New Vrindaban, USA

எனவே நான் ஒரு பாடலை மேலும் விளக்குகிறேன், இது நரோத்தம தாஸ டாகுர பாடியது. நரோத்தம தாஸ டாகுர நம் முன்னோடி ஆச்சார்யர்களில் ஒருவர், குரு, அவரது பாடல்கள் நமது வைஷ்ணவ சமுதாயத்தில் வேத உண்மையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அவர் எளிய மொழியில் எழுதியுள்ளார், ஆனால் அதில் வேத உண்மை உள்ளது. எனவே அவர் பல பாடல்கள் இயற்றி உள்ளார். பாடல்களில் ஒன்று: ஹரி ஹரி பிபலே ஜனம கோஙாஇனு. அவர் கூறுகிறார், "என் அன்பான கடவுளே, நான் என் வாழ்க்கையின் மதிப்புமிக்க நேரத்தை வீணடிக்கிறேன்." பிபலே ஜனம கோஙாஇனு . எல்லோரும் மனிதனாக பிறக்கிறார்கள், ஆனால் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது அவருக்குத் தெரியாது. அவர் அதை விலங்கு போலவே பயன்படுத்துகிறார். விலங்கு சாப்பிடுகிறது; இயற்கைக்கு மாறான உணவை நாம் ஏற்பாடு செய்கிறோம். அதுதான் நம் முன்னேற்றம். விலங்கு இராச்சியத்தில், ஒவ்வொரு குறிப்பிட்ட விலங்குக்கும் ஒரு குறிப்பிட்ட வகை உணவு என்று உள்ளது. புலி போல. ஒரு புலி சதை மற்றும் இரத்தத்தை சாப்பிடுகிறது, ஆனால் நீங்கள் ஒரு புலிக்கு நல்ல ஆரஞ்சு அல்லது திராட்சை கொடுத்தால், அது அதைத் தொடாது, ஏனெனில் அது அதனுடைய உணவு அல்ல. இதேபோல், ஒரு பன்றி. ஒரு பன்றி மலத்தை சாப்பிடுகிறது. நீங்கள் பன்றிக்கு நல்ல ஹல்வாவைக் கொடுத்தால், அது தொடாது. (சிரிப்பு) நீங்கள் பார்க்கிறீர்களா? எனவே ஒவ்வொரு குறிப்பிட்ட விலங்குக்கும் ஒரு குறிப்பிட்ட வகை உணவு கிடைத்துள்ளது. இதேபோல், மனிதர்களான நமக்கு குறிப்பிட்ட வகை உணவுகளையும் பெற்றுள்ளோம். அது என்ன? பழங்கள், பால், தானியங்கள். நமக்கு பற்கள் கொடுக்கப்பட்டுள்ளதைப் போலவே - நீங்கள் ஒரு பழத்தை எடுத்துக்கொள்கிறீர்கள், இந்த பல்லால் அதை எளிதாக துண்டுகளாக கடிக்க முடியும். ஆனால் நீங்கள் ஒரு துண்டு மாமிசத்தை எடுத்துக் கொண்டால், இந்த பற்களால் கடித்து வெட்டுவது கடினம். ஆனால் ஒரு புலிக்கு குறிப்பிட்ட வகை பற்கள் உள்ளன, அது உடனடியாக மாமிசத்தை துண்டுகளாக வெட்டலாம். எனவே நாம் கல்வியில் முன்னேறி வருகிறோம், ஆனால் நாம் நம் பற்களைக் கூட அறிந்து கொள்ளவில்லை. நாம் வெறுமனே பல் மருத்துவரிடம் செல்கிறோம். அவ்வளவுதான். இது நமது நாகரிகத்தின் முன்னேற்றம். புலி ஒருபோதும் பல் மருத்துவரிடம் செல்வதில்லை. (சிரிப்பு) அதன் பற்கள் மிகவும் வலிமையானவை, உடனடியாக அதனால் துண்டுகளாக ஆக்க முடியும், ஆனால் அதற்கு பல் மருத்துவர் தேவையில்லை, ஏனென்றால் அது இயற்கைக்கு மாறான எதையும் சாப்பிடுவதில்லை. ஆனால் நாம் எதையும் சாப்பிடுகிறோம்; எனவே நமக்கு பல் மருத்துவரின் உதவி தேவை.

எனவே மனிதனுக்கு ஒரு குறிப்பிட்ட வகை வேலை கிடைத்துள்ளது. அந்த வேலை பாகவத வாழ்க்கையைப் பற்றி படிப்பது அல்லது விவாதிப்பது ஆகும். அதுவே நம்முடைய இயல்பானது. பாகவத-தர்மம். நாம் பகவானைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். பாகவத-தர்மம், நான் ஏற்கனவே விளக்கினேன். பகவான் மற்றும் பக்தன் அல்லது பாகவதா, அவர்களின் உறவு, இது பாகவத-தர்மம் என்று அழைக்கப்படுகிறது. எனவே இது மிகவும் எளிதானது. எப்படி? இப்போது வெறுமனே நீங்கள் கிருஷ்ணரைப் பற்றி கேட்க வேண்டும்.