TA/Prabhupada 1008 - எனது குரு மகாராஜா 'மேற்கத்திய நாடுகளில் சென்று இந்த வழிபாட்டை போதியுங்கள்' என்று கட்டள: Difference between revisions
(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Tamil Pages - 207 Live Videos Category:Prabhupada 1008 - in all Languages Category:TA...") |
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items) |
||
Line 9: | Line 9: | ||
<!-- END CATEGORY LIST --> | <!-- END CATEGORY LIST --> | ||
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE --> | <!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE --> | ||
{{1080 videos navigation - All Languages| | {{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 1007 - கிருஷ்ண உணர்வைப் பொறுத்தவரை, நாங்கள் சமமாக விநியோகிக்கிறோம்|1007|TA/Prabhupada 1009 - ஆன்மீக குருவை நீங்கள் கடவுளாக மதிக்கிறீர்கள் என்றால், நீங்கள் அவருக்கு கடவுளின் வசதி|1009}} | ||
<!-- END NAVIGATION BAR --> | <!-- END NAVIGATION BAR --> | ||
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--> | <!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--> |
Latest revision as of 07:36, 16 August 2021
750713 - Conversation B - Philadelphia
சாண்டி நிக்சன்: எதிர்மறையை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்? வெளி உலகில் ... பக்தர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்மறையை எதிர்கொள்கிறார்கள், ஆர்வமில்லாத மக்களை. எப்படி, வெளி உலகில் மட்டுமல்ல, ஒருவர் தன்னுள் இருக்கும் எதிர்மறையை எவ்வாறு எதிர்கொள்கிறார்? அந்த எதிர்மறையிலிருந்து ஒருவர் எவ்வாறு தன்னை விடுவித்துக் கொள்கிறார்?
பிரபுபாதர்: எதிர்மறை என்றால் ... "சட்டவிரோத பாலுறவு இல்லை" என்று நாம் சொல்வது போல. "சட்டவிரோத பாலுறவு இல்லை" என்று நாங்கள் எங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கிறோம். இது எதிர்மறையானது என்று நினைக்கிறீர்களா? (ஒதுக்கி :) அவர் சொல்வதன் அர்த்தம் என்ன....?
ஜயதீர்தா: நிலைமை என்னவென்றால், அது எதிர்மறையானது என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள், எனவே அவர்கள் நம்மை எதிர்மறையாக உணர்கிறார்கள். எனவே நாம் அதற்கு எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும், அவர் சொல்கிறார்.
சாண்டி நிக்சன்: சரி,எப்படி... , நீங்கள் எப்படி அதை உங்களுக்குள் சமாளிக்கிறீர்கள்? ரவீந்த்ர-ஸ்வரூப: உங்களுக்கு என்ன எதிர்மறை, நீங்கள் சொல்வதன் அர்த்தம் என்ன?
சாண்டி நிக்சன்: இல்லை, இல்லை, விமர்சனம் மட்டுமல்ல, ஆனால்... எல்லா நேரத்திலும் உங்களுக்கு எதிராக செயல்படும் நிறைய நபர்களை நீங்கள் பெற்றால் ... இங்கே நீங்கள் நேர்மறையான மற்றும் வலுவூட்டும் நபர்களால் சூழப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் வெளி உலகில் இருக்கும் போது, உங்களை சக்தியிழக்க செய்யும் நபர்கள் இருக்கிறார்கள் உங்கள் சக்தியை குறைத்தால், அந்த சக்தியை எவ்வாறு நிரப்புவது? நீங்கள் எப்படி ... ரவீந்த்ர-ஸ்வரூப: நமக்கு எதிராக பலர் இருக்கும்போது நாம் எப்படி உறுதியாக இருக்கிறோம்?
பிரபுபாதர்: ஹூ? ரவீந்த்ர-ஸ்வரூப: நமக்கு எதிராக நிறைய பேர் இருக்கும்போது நாம் எப்படி உறுதியாக இருக்கிறோம் என்பதை அவள் அறிய விரும்புகிறார்.
பிரபுபாதர்: அப்படியானால் யாரும் உங்களுக்கு எதிராக இல்லையா? யாரும் உங்களுக்கு எதிராக இல்லை என்று நினைக்கிறீர்களா? நான் உங்களை கேட்கிறேன்.
சாண்டி நிக்சன்: யாரும் எனக்கு எதிராக இல்லை என்று நான் நினைக்கிறேனா? ஓ, நிச்சயமாக, எனக்கு ஆதரவாக, எனக்கு எதிராக, என்னைப் பற்றி கவலைப்படாதவர்கள் இருக்கிறார்கள்.
பிரபுபாதர்: எனவே எதிராகவும் ஆதரவாகவும் உள்ளனர். எதிராக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? எங்களுக்கு எதிராக சிலர் இருப்பது போல, எங்களுக்கு ஆதரவாக நிறைய பேர் இருக்கிறார்கள். எனவே ஒவ்வொரு துறையிலும் இதுதான் நிலை. எனவே யாராவது எங்களுக்கு எதிராக இருந்தால், அதைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? நம் நேர்மறையான வேலையைத் தொடருவோம்.
சாண்டி நிக்சன்: உதாரணமாக, நாட்கள் செல்ல செல்ல, பக்தர் தனக்கு எதிரான நபர்களுடன் மட்டுமே சந்தித்தால், அவர் மோசமான தொடர்புகளை பெறுகிறார், மேலும் அவர் சக்தி இழந்ததாக உணர்கிறார். அவர் எப்படி ...?
பிரபுபாதர்: எங்கள் பக்தர் மனதளவில் அவ்வளவு பலஹீனமானவர்கள் அல்ல. (சிரிப்பு) அவர்கள் எங்களுக்கு எதிரான நபரிடம் சென்று ஒரு புத்தகத்தை வாங்க தூண்டுகிறார்கள். நாங்கள் தினமும் புத்தகங்களை விற்பனை செய்கிறோம், பெரிய அளவில். எனவே எங்களுக்கு எதிராக என்று எந்த கேள்வியும் இல்லை. எங்களுக்கு எதிராக எவரும், அவர் ஒரு புத்தகத்தை வாங்க தூண்டப்படுகிறார். அப்படியானால் அவர் நமக்கு எதிராக எப்படி இருக்கிறார்? அவர் எங்கள் புத்தகத்தை வாங்குகிறார். (பக்கத்தில்:) நம் புத்தகங்களின் தினசரி விற்பனை எவ்வளவு? ஜயதீர்த: நாங்கள் ஒரு நாளுக்கு சுமார் இருபத்தைந்தாயிரம் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் விற்கிறோம்.
பிரபுபாதர்: விலை என்ன? ஜயதீர்த: விற்பனை ஒரு நாளுக்கு முப்பத்தைந்து முதல் நாற்பதாயிரம் டாலர்கள் வரை இருக்கும்.
பிரபுபாதர்: புத்தகங்களை விற்று ஒரு நாளுக்கு நாற்பதாயிரம் டாலர்களை சேகரிக்கிறோம். அவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள் என்று நான் எப்படி சொல்ல முடியும்?
சாண்டி நிக்சன்: நீங்கள் மிகவும் நேர்மறையானவர். எனக்கு அது பிடித்திருக்கிறது.
பிரபுபாதர்: ஒரு நாளுக்கு நாற்பதாயிரம் டாலர்களை விற்கக்கூடிய வேறு நிறுவனம் எங்கே? எனவே அவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள் என்று எப்படி சொல்வது?
சாண்டி நிக்சன்: எனது கடைசி கேள்வி. ஹரே கிருஷ்ணா மந்திரத்தைப் பற்றி என்னிடம் சொல்ல முடியுமா, ஏனெனில் இது கிருஷ்ண பக்திக்கு மிகவும் முக்கியமானது, உங்கள் வார்த்தைகளில் பெற விரும்புகிறேன்...
பிரபுபாதர்: இது மிகவும் எளிது. ஹரே என்றால் "கடவுளின் ஆற்றல்", மற்றும் கிருஷ்ணா என்றால் "கடவுளே" என்று பொருள். "நீங்கள் இருவரும் தயவுசெய்து என்னை உங்கள் சேவையில் ஈடுபடுத்துங்கள்." அவ்வளவுதான். "நீங்கள் இருவரும், கிருஷ்ணர் மற்றும் அவரது ஆற்றல் ... " இங்குள்ளதைப் போலவே ஆண், பெண் என்ற கருத்தாக்கம் கிடைத்துள்ளது, இதேபோல், ஆதியில், கடவுள் மற்றும் அவரது ஆற்றல், கடவுள் ஆண் மற்றும் ஆற்றல் பெண், ப்ரக்ருதி மற்றும் புருஷா. ஆண் மற்றும் பெண் பற்றிய இந்த யோசனை, அது எங்கிருந்து வருகிறது? கடவுள் பல ஆண், பெண் ஆகியோரை உற்பத்தி செய்கிறார். ஆண், பெண் என்ற யோசனை எங்கிருந்து வருகின்றது? இது கடவுளிடமிருந்து வருகிறது. எல்லாவற்றின் தோற்றமும் அவர்தான். எனவே பெண், அல்லது ப்ரக்ருதி, அல்லது கடவுளின் ஆற்றல், கடவுள் அவரே ... புருஷா என்று அழைக்கப்படுகிறார். ஆகவே, கடவுளையும் அவருடைய ஆற்றலையும் ஒன்றாக, அவர்களின் சேவையில் நம்மை ஈடுபடுத்த கேட்கிறோம். இது ஹரே கிருஷ்ணா ஓ ஹரே என்றால் " ஓ கடவுளின் ஆற்றல்," ஓ கிருஷ்ணா, "கடவுளே, நீங்கள் இருவரும் என்னை கவனித்து, என்னை உங்கள் சேவையில் ஈடுபடுத்துங்கள். " அவ்வளவுதான். இது பொருள்.
சாண்டி நிக்சன்: சரி, நன்றி. நான் வழியில் சிலவற்றை இழந்தேன், நான் நினைக்கிறேன்.
பிரபுபாதர்: நன்றி.
சாண்டி நிக்சன்: நான் வீட்டிற்கு சென்றபோது, இவை இருந்தன ... பூமியிலிருந்து தோன்றியது, அவற்றைப் பார்ப்பது மிகவும் அழகாக இருந்தது.
பிரபுபாதர்: எனவே உங்கள் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பபட்டதா?
ஆனி ஜாக்சன்: நான் உங்களிடம் சில கேள்விகளைக் கேட்கலாமா? தயவுசெய்து உங்கள் வாழ்க்கையைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா கிருஷ்ணா பக்தி இயக்கத்திற்கான ஆன்மீக குரு நீங்கள் என்பதை நீங்கள் எப்படி அறிந்தீர்கள்?
பிரபுபாதர்: என் வாழ்க்கை எளிது. நான் கிரஹஸ்தனாக இருந்தேன். எனக்கு இன்னும் என் மனைவி, என் குழந்தைகள், என் பேரன்கள் உள்ளனர். எனவே எனது குரு மஹாராஜா "மேற்கத்திய நாடுகளில் சென்று இந்த வழிபாட்டை போதிக்கவும்" என்று எனக்கு உத்தரவிட்டார். எனவே எல்லாவற்றையும் எனது குரு மஹாராஜாவின் உத்தரவினால் விட்டுவிட்டேன், நான் உத்தரவை நிறைவேற்ற முயற்சிக்கிறேன். அவ்வளவுதான்.
ஆனி ஜாக்சன்: இந்த படம் இங்கே இந்த மனிதரா?
பிரபுபாதர்: ஆம், அவர் என் குரு மஹாராஜா. அன்னே ஜாக்சன்: மேலும் அவர் இப்போது உயிருடன் இல்லை.
பிரபுபாதர்: இல்லை.
ஆனி ஜாக்சன்: அவர் உங்களுடன் ஆன்மீக ரீதியில் பேசினார்?
பிரபுபாதர்: எனவே இது என்னுடைய (தெளிவற்றது). அவ்வளவுதான்.
ஆனி ஜாக்சன்: இதைச் செய்ய எந்த கட்டத்தில் அவர் சொன்னார்? உங்கள் வாழ்க்கையில் மிகவும் தாமதமாக நீங்கள் ...?
பிரபுபாதர்: ஆம். எனக்கு இருபத்தைந்து வயதாக இருந்தபோது முதலில் அவரை சந்தித்தேன். முதல் கூட்டத்தில் அவர் இவ்வாறு என்னிடம் கட்டளையிட்டார். எனவே அந்த நேரத்தில் நான் திருமணமான மனிதன். எனக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. எனவே, "நான் அதை பின்னர் செய்வேன்" என்று நினைத்தேன். ஆனால் நான் குடும்ப வாழ்க்கையிலிருந்து வெளியேற முயற்சித்தேன். இதற்கு சிறிது காலம் பிடித்தது. ஆனால் அவரது உத்தரவை நிறைவேற்ற நான் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். 1944 ஆம் ஆண்டில் நான் க்ரிஹஸ்தனாக இருந்தபோது 'பேக் டு காட்ஹெட்' என்ற பத்திரிகையைத் தொடங்கினேன். பின்னர் நான் 1958 அல்லது '59 இல் புத்தகங்களை எழுத ஆரம்பித்தேன். இப்படி தான், 1955 இல் (1965) நான் உங்கள் நாட்டுக்கு வந்தேன்.