TA/Prabhupada 0014 - பக்தர்கள் மிக உன்னதமானவர்கள்: Difference between revisions

No edit summary
 
(No difference)

Latest revision as of 13:06, 26 May 2021



The Nectar of Devotion -- Calcutta, January 30, 1973

ஒரு பக்தருக்கு, கிருஷ்ணர் பக்தரின் உள்ளங்கைக்குள் இருக்கிறார். அஜித, ஜிதொ (அ)பி அசெள. கிருஷ்ணரை யாரும் வெல்ல முடியாது, ஆனால் தன் பக்தரிடம் பணிய அவருக்கு விருப்பம் உண்டு. அதுதான் நிலை. எப்படி என்றால், அவரே ஆசைப்பட்டு தனது தாயார் யசோதை, ராதாராணி, அவருடை நண்பர்கள், இவர்களிடம் பணிந்தார், இவர்களால் வெல்லப்பட்டார். தோற்கடிக்கப்பட்டதால் கிருஷ்ணர் தன் நண்பரை தன் தோளில் சுமந்துச் செல்ல நேர்ந்தது. சிலசமயங்களில் நாம் பார்த்திருக்கிறோம், அரசன் தன் சபையில் ஒரு கோமாளியை வைத்திருப்பான், மற்றும் சில சமயங்களில் அந்த கோமாளி அரசனை அவமதிப்பான். அரசனும் அதைக் கண்டு ரசிப்பான். அந்த கோமாளி சில சமயங்களில்... வங்காளத்தில் கோபால் பொன் என்ற புகழ்பெற்ற கோமாளி ஒருவன் இருக்கிறான். ஒரு நாள் அரசர் அவனிடம் கேட்டார், "கோபால, உங்களுக்கும் ஒரு கழுதைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?" அவன் உடனேயே தனக்கும் அரசருக்கும் இடையே உள்ள தூரத்தை அளந்தான். அவன் பதில் அளித்தான், "மூன்று அடி தான் ஐயா. அந்த வித்தியாசம் மூன்று அடி தான்." ஆக எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். அரசரும் அந்த அவமதிப்பை ரசித்தார். ஏனென்றால் சில சமயங்களில் இதுவும் தேவைப்படுகிறது . ஆக கிருஷ்ணரும் அப்படியே... எல்லோரும் கிருஷ்ணரின் உன்னத நிலையைக் கருதி அவர் புகழை பாடுவார்கள். எல்லோரும். அதுதான் கிருஷ்ணரின் பதவி - முழுமுதற்கடவுள். வைகுண்டத்தில் வெறும் பாராட்டுதல் தான். இது போன்ற எதுவும் கிடையாது. ஆனால் விருந்தாவனத்தில் தன் பக்தர்களிடமிருந்து அவமதிப்பைப் பெற கிருஷ்ணருக்கு எந்த தடையம் கிடையாது. விருந்தாவன வாழ்க்கை என்றால் என்னவென்று மக்களுக்குத் தெரியாது. ஆக பக்தர்கள் அவ்வளவு உன்னதமானவார்கள். ராதாராணி உத்தரவு இடுவாள், "கிருஷ்ணரை இங்கு வர அனுமதிக்காதீர்கள்." கிருஷ்ணர் உள்ளே வரக்கூடாது. அவர் மற்ற கோபியர்களை முகஸ்துதி செய்து: "தயவு செய்து என்னை அங்குச் செல்ல அனுமதியுங்கள்." எனக் கேட்பார். "இல்லை, இல்லை எங்களுக்கு உத்தரவு கிடையாது. தாங்கள் போக முடியாது." ஆக கிருஷ்ணருக்கு அது பிடிக்கும்.