TA/Prabhupada 0015 - நான் இந்த உடலல்ல: Difference between revisions
No edit summary |
(No difference)
|
Latest revision as of 13:08, 26 May 2021
Lecture on BG 9.34 -- New York, December 26, 1966
ஆன்மாவின் உள்ளமைக்கு ஆறு அறிகுறிகள் உள்ளன. அவற்றில் வளர்ச்சி முக்கியமான ஒன்று. ஆக வளர்ச்சி. ஆன்மா இந்த உடலை விட்டு வெளியேறியப்பிரகு வளர்ச்சி இருக்காது. ஒரு குழந்தை இறந்து பிறந்தால், ஓ, மேற்கொண்டு வளர்ச்சி இருக்காது. ஓ, பெற்றவர்கள் அதை பயனற்றது என்று சொல்வார்கள். அதை கைவிட வேண்டியது தான். ஆக அப்படித்தான் பகவான் கிருஷ்ணரும் அர்ஜுனருக்கு முதல் உதாரணம் வழங்கினார், அதாவது, உடலுக்குள் இருக்கும் அந்த ஆன்மீக சுடரால், இந்த உடல், ஒரு கைக்குழந்தையிலிருந்து ஒரு வவளர்ந்த சிறுவனாக மாறி, ஒரு சிறுவனின் உறுவதிலிருந்து வாலிபனாக மாறி, பிறகு வாலிப பருவத்திலிருந்து முதுமையை அடைகிறது. ஆக, இந்த உடல் பயனற்றதானவுடன், புலன்களுக்கு எட்டாதவகையில், ஆன்மா இந்த உடலை விட்டுச்செல்கிறது." வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய (பகவத் கீதை 2.22). நாம் பழைய ஆடையை கைவிட்டு மற்றொரு புதிய ஆடையை அணிவது போல், நாம் மற்றொரு உடலை ஏற்றுக்கொள்கிறோம். மேலும் நாம் பெற்ற அந்த மற்றொரு உடல் நாம் தேர்ந்து எடுத்ததல்ல. அந்த தேர்வு இயற்கையின் சட்டத்தை சார்ந்தது. அந்த தேர்வு இயற்கையின் சட்டத்தை சார்ந்தது. மரண நேரத்தில் உங்களுக்கு சுதந்திரம் இருக்காது, ஆனால் அதைப் பற்றி சிந்திக்க முடியும். அதாவது உங்களுக்கு என்ன உரிமை இருக்கும் என்றால், நான் சொல்ல முயல்வது என்னவென்றால், தனித் தன்மையும், அதை பொறுத்து தேருதல் செய்யும் திறன் எல்லாம் இருக்கும். யம் யம் வாபி ஸ்மரண லொகே த்யஜத்யந்தே கலேவரம் (பகவத் கீதை 8.6). மரண காலத்தில், உங்களுடைய மனப்பான்மை எப்படியோ, உங்களுடைய எண்ணங்கள் அமையும் வகையில், அடுத்த பிறவியில் அதன்படி ஒரு உடலைப் பெறுவீர்கள். ஆக ஒரு புத்திசாலியானவன், மனநிலை பாதிக்கப்படாதவன், இந்த உடல் என்னுடையதல்ல என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். முதல் விஷயம், நான் இந்த உடல் அல்ல. பிறகு அவனுடைய கடமை என்னவென்பதை அவன் புரிந்துக் கொள்வான். ஓ, ஒரு ஆன்மாவாக, அவனுடைய கடமை என்ன? அவன் கடமை என்னவென்பது பகவத்-கீதையில் கூறப்பட்டிருக்கிறருது. ஒன்பதாம் அத்தியாயம் கடைசி பதம். அந்த கடமை என்னவென்றால் மன்-மனா பவ (பகவத்-கீதை 9.34) நீங்கள் ஏதோ ஒன்றை யோசிக்கிறீர்கள். நாம் ஒவ்வொருவரும், தேகத்தை உடையவர்கள் , எதோ ஒன்றை சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். சிந்திக்காமல் ஒரு நிமிடம் கூட நம்மால் இருக்க முடியாது. அது சாத்தியம் அல்ல. ஆக இதுதான் நம் கடமை. கிருஷ்ணரைப் பற்றி சிந்திக்கவேண்டும். கிருஷ்ணரைப் பற்றி சிந்திக்கவேண்டும். ஏதாவது ஒன்றை யோசித்து தான் ஆகவேண்டடியிருக்கும். அந்த பட்சத்தில் கிருஷ்ணரைப் பற்றி சிந்திப்பதில் உங்களுக்கு என்ன நஷ்டம் ? கிருஷ்ணர் ஏராளமான லீலைகளை செய்திருக்கிறார், அவரைப் பற்றி ஏராளமான இலக்கியங்கள் இருக்கின்றன, இப்படி பல விஷயங்கள் இருக்கின்றன. கிருஷ்ணர் இவ்வுலகில் வருகிறார். அதைப் பற்றி நம்மிடம் பல புத்தகத் தொகுதிகள் இருக்கின்றன. கிருஷ்ணரைப் பற்றி நீங்கள் சிந்திக்க விரும்பினால், எங்களால் நிறைய இலக்கியங்களைக் வழங்க முடியும். அதை வாழ்க்கை முழுவதும் இருபத்தி-நான்கு மணி நேரமும் படித்தாலும் உங்களால் படித்து முடிக்க முடியாது. ஆக கிருஷ்ணரைப் பற்றி சிந்திப்பதற்கு போதுமான அளவுக்கு இருக்கிறது. கிருஷ்ணரைப் பற்றி நினையுங்கள். மன-மனா பவ. ஓ, என்னால் தங்களைப் பற்றி சிந்திக்க முடியும். ஒரு முதலாளிகளுக்கு வேலை செய்பவனைப் போல் தான். ஓ, அவன் எப்பொழுதும் அந்த எஜமானைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பான். ஓ, நான் அங்கு ஒன்பது மணிக்கு ஆஜராக வேண்டும், இல்லாவிட்டால் எஜமானுக்கு என்மேல் நல்ல அபிப்பிராயம் ஏற்படாது. அவன் ஏதோ ஒரு சுயநலத்துடன் சிந்திக்கிறான். அப்படிப்பட்ட நினைப்பு உதவாது. ஆக அவர் கூறுகிறார், பவ மத்-பக்த: (பகவத்-கீதை 9.34). "என்னை அன்புடன் சிந்தித்தால் போதும்." எஜமானர் எப்பொழுது, அதாவது, ஒரு வேலைக்காரன் தன் எஜமானரைப் பற்றி நினைக்கும்பொழுது அதில் எந்த விதமான அன்பும் இருப்பதில்லை. அவன் வெறும் காசு பணத்தைப் பற்றி தான் நினைக்கின்றான். "ஏனென்றால், நான் சரியாக ஒன்பது மணிக்கு அலுவலகம் செல்லாவிட்டால், ஓ, அங்கே தாமதமாகிவிடும்; பிறகு இரண்டு காசு இழக்க வேண்டியிருக்கும்." ஆக அவன் தன் எஜமானரைப் பற்றி சிந்திப்பதில்லை. அவன் சிந்திப்பது காசு பணத்தைப் பற்றி தான். அப்படிப்பட்ட சிந்தனை உங்களைக் காப்பாற்றாது. எனவே, பவ மத்- பக்த:, என அவர் கூறுகிறார். "நீ வெறும் என்னுடைய பக்தன் ஆகிவிடு. அதற்கு பிறகு நீ என்னைப் பற்றி நினைத்தால் நல்லது." அது என்ன பக்தி? மத்-பக்த:. பக்தி என்றால் சேவை. மத்-யாஜீ (பகவத்-கீதை 9.34). இறைவனுக்கு ஏதாவது சேவை செய்ய வேண்டும். அதாவது நாங்கள் இங்கு எப்பொழுதும் ஈடுபட்டிருப்பதைப் போல் தான். நீங்கள் இங்கு வரும் பொழுதெல்லாம் நாங்கள் ஏதாவது சேவையில் ஈடுபட்டிருப்பதைக் காண்பீர்கள். ஆக நாங்கள் எங்களுக்காகவே சில கடமைகளை ஏற்படுத்தி இருக்கிறோம். கிருஷ்ணரைப் பற்றி சிந்திப்பதற்காகவே தான்.