TA/Prabhupada 0696 – பக்தியோகமானது கலப்படமற்ற பக்தியாகும்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0696 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0695 - Cheaply They Select God. God Has Become So Cheap - "I am God, you are God"|0695|Prabhupada 0697 - Please Engage Me in Your Service, That's All. That Should Be The Demand|0697}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0695 – நான் கடவுள், நீ கடவுள் என்று அற்பமாக கடவுளை தேர்வு செய்கிறார்கள்- கடவுள் மிக அற்பமாகிவ|0695|TA/Prabhupada 0697 – என்னை உனது சேவையில் ஈடுபடுத்து என்பதே கோரிக்கையாய் இருக்கவேண்டும்|0697}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:52, 28 June 2021



Lecture on BG 6.46-47 -- Los Angeles, February 21, 1969

பக்தர்: "உண்மையில், பக்தி-யோகா தான் இறுதி இலக்கு, பக்தி-யோகாவை நுணுக்கமாக பகுப்பாய்வு செய்யுங்கள், இந்த சிறிய யோகங்களை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். எனவே முற்போக்கான யோகி நித்திய சுபத்தன்மையுடைய உண்மையான பாதையில் செல்கிறார் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் ஒட்டிக்கொண்டு மேலும் முன்னேறாத ஒருவர் அந்த குறிப்பிட்ட பெயரால் அழைக்கப்படுகிறார்

பிரபுபாதா: ஆம். இப்போது, ​​யாராவது ஞான-யோகா பயிற்சி செய்தால், இது முடிந்துவிட்டது என்று அவர் நினைத்தால், அது தவறு. நீங்கள் மேலும் முன்னேற வேண்டும். நாம் பல முறை உதாரணம் கொடுத்தது போல, ஒரு படிக்கட்டு உள்ளது. நீங்கள் மிக உயர்ந்த மாடிக்கு செல்ல வேண்டும், அதாவது நூறாவது மாடி என்று வைத்து கொள்ளுங்கள் எனவே யாரோ ஐம்பதாம் மாடியில் இருக்கிறார்கள், யாரோ முப்பதாம் மாடியில் இருக்கிறார்கள், யாரோ எண்பதாவது மாடியில் இருக்கிறார்கள். ஆகவே, குறிப்பிட்ட, எண்பதாவது, ஐம்பதாம் அல்லது எண்பதாவது மாடிக்கு வருவதன் மூலம், "இது முடிந்தது" என்று ஒருவர் நினைத்தால் பின்னர் அவர் முன்னேற மாட்டார். ஒருவர் இறுதிவரை செல்ல வேண்டும். அது யோகாவின் மிக உயர்ந்த தளம். முழு படிக்கட்டையும் ஒரு யோகா அமைப்பு அல்லது ஒரு இணைப்பு என்று அழைக்கலாம். ஆனால் உங்களை ஐம்பதாம் மாடியில் அல்லது எண்பதாவது மாடியில் வைத்து திருப்தி அடைய வேண்டாம். மிக உயர்ந்த தளமான நூறாவது அல்லது நூற்று ஐம்பதாவது மாடிக்குச் செல்லுங்கள் அது பக்தி-யோகா.

பக்தர்: "ஆனால் ஒருவர் பக்தி-யோகா நிலைக்கு வரும் அளவுக்கு அதிர்ஷ்டசாலி என்றால், அவர் வெவ்வேறு யோகங்களை எல்லாம் மிஞ்சிவிட்டார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். "

பிரபுபாதா: இப்போது, ​​படிகளை கடப்பதற்கு பதிலாக யாராவது , லிஃப்ட் வசதி இருக்கிறது என்று வைத்து கொள்வோம், ஒரு நொடிக்குள் அவர் மேலே வருகிறார். எனவே யாராவது, "இந்த லிஃப்டை நான் ஏன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? என்று சொன்னால் நான் படிப்படியாக செல்வேன், " என்று சொன்னால், அவர் போகலாம், ஆனால் அதை விட எளிய வாய்ப்பு உள்ளது. இந்த பக்தி-யோகாவை நீங்கள் எடுத்துக் கொண்டால், உடனடியாக நீங்கள் லிஃப்ட் உதவியைப் பெறுவீர்கள் ஒரு நொடிக்குள் நீங்கள் நூறாவது மாடியில் இருக்கிறீர்கள். இது வழிமுறை. நேரடி வழிமுறை. மற்ற எல்லா யோகா முறைகளையும் பின்பற்றி நீங்கள் படிப்படியாக செல்லலாம். ஆனால் நீங்கள் நேரடியாகவும் செல்லலாம் சைதன்யா பிரபு பரிந்துரை: இந்த யுகத்தில், மக்கள் மிகக் குறுகிய காலம் வாழ்கிறார்கள் அவர்கள் கலங்கி போய் இருக்கிறார்கள், அவர்கள் பதட்டத்துடன் இருக்கிறார்கள், ஆகையால், அவருடைய அருளால், அவருடைய சுயமான கருணையால் அவர் உடனடியாக உங்களுக்கு லிப்ட் தருகிறார் - ஹரே கிருஷ்ணா என்று கீர்த்தனம் செய்வதன் மூலம் பக்தி-யோகாவுக்கு வாருங்கள். உடனே. நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. உடனே எடுத்துக் கொள்ளுங்கள். அதுதான் சைதன்யா பிரபுவின் சிறப்பு பரிசு. ஆகையால், ரூப கோஸ்வாமி பிரார்த்தனை செய்கிறார், சைதன்யா மஹாப்ரபுவுக்கு மரியாதை அளிக்கிறார் நமோ மஹா-வதான்யாய க்ருஷ்ண-ப்ரேம-ப்ரதாய தே (சை.ச மத்ய 19.53). "ஓ, நீங்கள் மிகவும் அற்புதமான அவதாரம், ஏனென்றால் நீங்கள் நேரடியாக கிருஷ்ணரை நேசிக்கிறீர்கள். கிருஷ்ணரின் அன்பை அடைய ஒருவர் யோகா அமைப்பின் பல படிகள் மற்றும் கட்டங்களை கடந்து செல்ல வேண்டும், நீங்கள் நேரடியாக கொடுக்கிறீர்கள். எனவே நீங்கள் மிகவும் அற்புதமானவர். " எனவே உண்மையில் அதுவே நிலை. மேலே சொல்லுங்கள்.

பக்தர்: "ஆகையால், கிருஷ்ண பக்தியாக மாறுவது யோகாவின் மிக உயர்ந்த கட்டமாகும், நாம் இமயமலையைப் பற்றி பேசும்போது, உலகின் மிக உயர்ந்த மலைகளை நாம் குறிப்பிடுகிறோம், அவற்றில் மிக உயர்ந்த சிகரம் எவரெஸ்ட் சிகரம், உச்சமாக கருதப்படுகிறது. பக்தி-யோகாவின் பாதையில், ஒருவர் கிருஷ்ணா பக்திக்கு வருவது பெரும் அதிர்ஷ்டத்தால் ஆகும், மேலும் வேதத்தின்படி நன்கு அமைந்துள்ளது. சிறந்த யோகி தனது கவனத்தை மேகம் போல அழகான வண்ணம் கொண்ட, ஷியாம்சுந்தரா என்று அழைக்கப்படும் கிருஷ்ணர் மீது செலுத்துகிறார், அவரது தாமரை போன்ற முகம் சூரியனைப் போல பிரகாசமாகவும், அவரது ஆடை, காதணிகளோடு , அவரது உடல் பூ-மாலைகளோடு இருக்கும். எல்லா திசைகளையும் ஒளிரச் செய்வது அவரது அழகிய ஒளிர்வு, இது பிரம்மஜோதி என்று அழைக்கப்படுகிறது. அவர் ராமா, நரசிம்ஹா, வராஹா போன்ற வெவ்வேறு வடிவங்களில் அவதாரம் எடுக்கிறார் மற்றும் கிருஷ்ணர், முழுமுதற் கடவுள் ஆவார் அவர் ஒரு மனிதனைப் போல, தாய் யசோதாவின் மகனாக இறங்குகிறார், கிருஷ்ணா, கோவிந்தா மற்றும் வாசுதேவா என்று அழைக்கப்படுகிறார். அவர் பூரணமான குழந்தை, கணவர், நண்பர், எஜமானர்; அவர் எல்லா செழிப்பும் ஆழ்நிலை குணங்களும் நிறைந்தவர். இறைவனின் இந்த அம்சங்களை ஒருவர் முழுமையாக உணர்ந்தால், அவர் மிக உயர்ந்த யோகி என்று அழைக்கப்படுகிறார் யோகாவில் மிக உயர்ந்த முழுமையான இந்த கட்டத்தை பக்தி-யோகா மட்டுமே அடைய முடியும், அனைத்து வேத இலக்கியங்களிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. "

பிரபுபாதா: அந்த பக்தி, பகவத்-கீதையில் நீங்கள் காணலாம், தத் பக்த்யா மாம் அபிஜாநாதி யாவான் யஷ் சாஸ்மி தத்த்வத: (ப.கீ 18.55) கிருஷ்ணர் கூறுகிறார், மில்லியன் கணக்கான மக்களில், ஒருவர் உண்மையில் என்னை புரிந்து கொள்ளலாம் அதே உண்மை சொல் பதினெட்டாம் அத்தியாயத்தில் பயன்படுத்தப்படுகிறது, "ஒருவர் என்னை அறிய விரும்பினால்," கிருஷ்ணர் அல்லது கடவுள், பின்னர் அவர் பக்தி-யோகா வழிமுறைக்கு செல்ல வேண்டும். " பக்த்யா மாம் அபிஜாநாதி யாவான் யஷ் சாஸ்மி தத்த்வத: ([[Vanisource:BG 18.55 (1972)|ப.கீ 18.55]). வேதங்களிலும் இது கூறப்படுகிறது: பக்தி, பக்தி சேவை மூலம் நீங்கள் மிக உயர்ந்த நிலைக்கு வரலாம். மற்ற யோகா அமைப்பில் பக்தி கலப்படம் இருக்கும். ஆனால் பக்தி-யோகா என்பது கலப்படமற்ற பக்தி. எனவே பக்தி-யோகாவின் இந்த நேரடி வழிமுறை இந்த காலத்திற்கு பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் இந்த காலத்தில் அவர்களிடம் போதுமான நேரம் இல்லை ......யோகாவின் வேறு எந்த அமைப்பையும் செயல்படுத்துவதற்கு. மிக்க நன்றி.