TA/Prabhupada 1043 - நாங்கள் கொக்கோகோலா குடிக்க மாட்டோம், பெப்சி கோலா குடிக்க மாட்டோம், நாங்கள் புகை பிடிக்: Difference between revisions
(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Tamil Pages - 207 Live Videos Category:Prabhupada 1043 - in all Languages Category:TA...") |
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items) |
||
Line 8: | Line 8: | ||
<!-- END CATEGORY LIST --> | <!-- END CATEGORY LIST --> | ||
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE --> | <!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE --> | ||
{{1080 videos navigation - All Languages| | {{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 1042 - உங்கள் மொரிஷியஸ் நாட்டில் தானியங்கள் விளைக்க நிறைய நிலம் இருக்கிறது இந்த|1042|TA/Prabhupada 1044 - நான் சிறுவனாக இருந்த போது மருந்துகளை சாப்பிடமாட்டேன்|1044}} | ||
<!-- END NAVIGATION BAR --> | <!-- END NAVIGATION BAR --> | ||
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--> | <!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--> |
Latest revision as of 08:31, 19 August 2021
751002 - Lecture SB 07.05.30 - Mauritius
ஒருவன், இந்த வகையான பௌதிக வாழ்க்கைக்கு அடிமைப்பட்டால் பிறகு அவனால், கிருஷ்ண உணர்வை ஏற்றுக் கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முடியாது. பகவத் கீதையிலும் கூறப்பட்டுள்ளது,
- போ4கை3ஷ்2வர்ய-ப்ரஸக்தானாம்'
- தயாபஹ்ரு'த-சேதஸாம்'
- வ்யவஸாயாத்மிகா பு3த்3தி:4
- ஸமாதௌ4 ந விதீ4யதே
பௌதிக வாழ்க்கையில் மிகுந்த பற்றுள்ளவர்கள், அதாவது புலன் இன்பத்தில்... பௌதிக வாழ்க்கை என்றால் புலனின்பம். ஆன்மீக வாழ்க்கைக்கும் பௌதிக வாழ்க்கைக்கும் வேறுபாடு என்ன? இந்தப் பையன்கள், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருந்து வந்த இந்தப் பையன்கள், இந்த ஆன்மீக வாழ்க்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றால் அவர்கள் புலன் நுகர்ச்சி வழிமுறையை நிறுத்தியுள்ளனர். தவறான பாலுறவை தவிர்த்தல், மாமிசம் உண்பதைத் தவிர்த்தல், சூதாட்டத்தை தவிர்த்தல் மற்றும் போதைப் பொருட்களை தவிர்த்தல். இதுதான் பௌதிக வாழ்க்கை. இல்லையெனில் இந்த வாழ்க்கைக்கும் அந்த வாழ்க்கைக்கும் எங்கே வேறுபாடு இருக்கிறது?
எனவே நாம் பௌதிக வாழ்க்கையின் மீது பற்று கொண்டால், பிறகு கிருஷ்ண உணர்வு இயக்கத்தை புரிந்துகொள்வது மிக மிகக் கடினமாக இருக்கும். மதிர் ந க்ரு'ஷ்ணே பரத: ஸ்வதோ வா மிதோ2 'பி4பத்3யேத க்3ரு'ஹ-வ்ரதானாம் (SB 7.5.30). ஏன்? இப்போது அதா3ந்த-கோ3பி:4. அதா3ந்த என்றால் கட்டுப்பாடற்ற. கட்டுப்பாடற்றவை. நமது புலன்கள் கட்டுப்பாடற்றவையாக உள்ளன. இன்று காலை, நான் கடற்கரையில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த போது நாம் பல விஷயங்களையும் பார்த்தோம். கொக்கோகோலா பாட்டில்கள், சிகரெட் துண்டுகள் மற்றும் பல. கொக்கோ கோலாவின் தேவை என்ன? எங்கள் சமூகத்தில் நீங்கள் இதையெல்லாம் பார்க்க மாட்டீர்கள். நாங்கள் கொக்கோகோலா குடிக்க மாட்டோம். பெப்சி கோலா குடிக்க மாட்டோம். நாங்கள் புகைப்பதில்லை. சந்தையில், பல விஷயங்கள் மிகப்பெரிய அளவிலான விளம்பரங்களினால் விற்கப்பட்டு, பாவப்பட்ட நுகர்வோர் பலியாகின்றனர். ஆனால் இவையெல்லாம் தேவையற்ற விஷயங்கள். இவற்றிற்கு எந்த தேவையும் இல்லை. ஆனால், இந்தப் புலன்கள் கட்டுப்பாடற்றவையாக இருக்கும் காரணத்தினால், அவர்கள் இந்த வியாபாரத்தை செய்கின்றனர். தேவையற்ற விஷயங்களை அவர்கள் வியாபாரம் செய்கின்றனர். எனவே நாம் புலன்களை கட்டுப்படுத்த வேண்டும். நாம் உண்மையில் ஆன்மீக வாழ்க்கையை விரும்பினால், உண்மையில் நாம் பௌதிகத்தின் பிடியிலிருந்து தப்பிக்க விரும்பினால், பிறகு புலன்களை கட்டுப்படுத்துவது எப்படி என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் தேவைப்படுகிறது. அதுவே மனித வாழ்வின் குறிக்கோள். அதுவே மனித வாழ்வின் குறிக்கோள். மனித வாழ்க்கை, பூனை, நாய் மற்றும் பன்றியின் வாழ்க்கையை போல வாழ்வதற்கு அல்ல, அது மனித வாழ்க்கையே அல்ல.