TA/Prabhupada 1004 - பூனைகள், நாய்கள் போல வேலை செய்து இறப்பது புத்திசாலித்தனம் அல்ல: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 1003 - One has Approached God, God is Spiritual, But One is Asking for Material Profit|1003|Prabhupada 1005 - Without Krsna Consciousness, You Will Have Simply Rubbish Desires|1005}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 1003 - ஒருவர் கடவுளை அணுகியுள்ளார், கடவுள் ஆன்மீக தன்மை கொண்டவர், ஆனால் ஒருவர் பௌதிக லாபத்தைக|1003|TA/Prabhupada 1005 - கிருஷ்ண உணர்வு இல்லாவிட்டால், உனக்கு வெறும் அர்த்தமற்ற ஆசைகள் தான் ஏற்படும்.|1005}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:31, 28 August 2021



750713 - Conversation B - Philadelphia

சாண்டி நிக்சன்: கிருஷ்ண உணர்வை அடைய பயன்படுத்தப்படும் முறைகள் யாவை? ஒருவர் எப்படி அதனை அடைவார் ...

பிரபுபாதா: ஆம், கிருஷ்ண உணர்வால், நீங்கள் வாழ்க்கையின் இலக்கை அடைகிறீர்கள். தற்போதைய நிலையில் நாம் ஒரு உடலை ஏற்றுக்கொள்கிறோம், சில நாட்களுக்குப் பிறகு நாம் இறக்கிறோம், பின்னர் மற்றொரு உடலை ஏற்றுக்கொள்கிறோம். அந்த உடல் உங்கள் செயல்பாட்டிற்கு ஏற்ப உள்ளது. 8,400,000 வெவ்வேறு வகையான உடல்கள் உள்ளன. அவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பெறலாம். நீங்கள் ஒரு உடலை ஏற்கவே வேண்டும். அது ஆன்மாவின் பரிமாற்றம் என்று அழைக்கப்படுகிறது. ஆகவே, "நான் நித்தியமானவன், நான் ஏன் உடலை மாற்றுகிறேன்? அதை எவ்வாறு தீர்ப்பது?" அது புத்திசாலித்தனம். மேலும் பூனைகள், நாய்கள் போல வேலை செய்து இறக்கக்கூடாது. அது புத்திசாலித்தனம் அல்ல. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பவர், அவர் புத்திசாலி. எனவே இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் வாழ்க்கையின் அனைத்து பிரச்சினைகளுக்கும் இறுதி தீர்வாகும்.

சாண்டி நிக்சன்: கிருஷ்ண உணர்வு பாதையில் ஒருவர் என்ன மாற்றங்களுக்கு உள்ளாகிறார்?

பிரபுபாதா: மாற்றம் இல்லை. உணர்வு இருக்கிறது. இது இப்போது அனைத்து குப்பைகளாலும் நிரம்பியுள்ளது. நீங்கள் இதை சுத்தப்படுத்த வேண்டும், பின்னர் கிருஷ்ண உணர்வு ... தண்ணீரைப் போல. நீர், இயற்கையால், தெளிவானது, வெளிப்படையானது. ஆனால் அது குப்பைகளால் நிரப்பப்படும்போது, ​​அது அழுக்காகும்; நீங்கள் மிக தெளிவாக பார்க்க முடியாது. ஆனால் நீங்கள் அதை வடிகட்டினால், அனைத்து சேற்று விஷயங்களும், அழுக்கான விஷயங்களும், அசுத்தம் நீங்கி, மீண்டும் அசல் நிலைக்கு வரும்- தெளிவான, வெளிப்படை தன்மை கொண்ட நீர்.

சாண்டி நிக்சன்: கிருஷ்ண உணர்வுடன் இணைந்ததன் விளைவாக ஒருவர் சமூகத்தில் சிறப்பாக செயல்படுகிறாரா?

பிரபுபாதா: என்ன? குருதாசா: கிருஷ்ண உணர்வு பெற்ற பிறகு சமூகத்தில் ஒருவர் சிறப்பாக செயல்படுகிறாரா?

பிரபுபாதா: இதன் பொருள் என்ன?

ரவீந்திர-ஸ்வரூபா: அவர் சிறந்த குடிமகனா?

சாண்டி நிக்சன்: மேலும் சமூகவியல் ரீதியாகவோ அல்லது கலாச்சார ரீதியிலோ.. அவர் சமூகத்தில் சிறப்பாக செயல்பட முடியுமா?

பிரபுபாதா: நீங்கள் நடைமுறையில் பார்க்க முடியும். அவர்கள் குடிகாரர்கள் அல்ல, அவர்கள் இறைச்சி சாப்பிடுபவர்கள் அல்ல. உடலியல் பார்வையில், அவர்கள் மிகவும் சுத்தமாக இருக்கின்றார்கள். அவர்கள் ஒருபோதும் பல நோய்களால் தாக்கப்பட மாட்டார்கள். பின்னர் அவர்கள் இறைச்சியை சாப்பிடுவதில்லை, அதாவது மிகவும் பாவமான செயல் - நாவின் திருப்திக்காக மற்ற உயிர்களைக் கொல்வது. கடவுள் மனித சமுதாயத்திற்கு சாப்பிட பல விஷயங்களை வழங்கியுள்ளார்: நல்ல பழங்கள், நல்ல பூக்கள், நல்ல தானியங்கள், முதல் தரமான பால். மேலும் பாலில் இருந்து நூற்றுக்கணக்கான சத்தான உணவுகளை நீங்கள் தயாரிக்கலாம். ஆனால் அவர்களுக்கு அந்த கலை தெரியாது. அவர்கள் பெரிய, பெரிய இறைச்சிக் கூடத்தை பராமரித்து இறைச்சி சாப்பிடுகிறார்கள். பாகுபாடு இல்லை. அதாவது அவர்கள் நாகரிகம் கூட இல்லை. மனிதன் நாகரிகமாக இல்லாதபோது, ​​அவன் ஒரு விலங்கைக் கொன்று சாப்பிடுகிறான், ஏனென்றால் அவனுக்கு உணவை வளர்ப்பது தெரியாது. நியூ பிருந்தாபனில் எங்களுக்கு ஒரு பண்ணை நிலம் கிடைத்ததைப் போல. எனவே பாலில் இருந்து முதல் தரமான தயாரிப்பை நாங்கள் தயார் செய்கிறோம், அங்கே வரும் அயலவர்கள், பாலில் இருந்து இதுபோன்ற நல்ல தயாரிப்புகளை செய்ய முடியுமா என்று அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள், நூற்றுக்கணக்கானவர்கள். எனவே அவர்கள் நாகரிகமாக கூட இல்லை, பாலில் இருந்து சத்தான உணவை எவ்வாறு தயாரிப்பது என்று தெரியாது. பால் ... பசு மாமிசமும் இரத்தமும் மிகவும் சத்தானவை என்பதை ஏற்றுக்கொள்வது ... நாமும் ஒப்புக்கொள்கிறோம், ஆனால் ஒரு நாகரிக மனிதன் இரத்தத்தையும் இறைச்சியையும் வேறு வழியில் பயன்படுத்துகிறான். பால் இரத்தத்தைத் தவிர வேறில்லை. ஆனால் அது பாலாக மாற்றப்படுகிறது. மீண்டும், பாலில் இருந்து நீங்கள் பல விஷயங்களை உருவாக்குகிறீர்கள். நீங்கள் யோகுர்ட் செய்கிறீர்கள், தயிர் செய்கிறீர்கள், நெய்யை உருவாக்குகிறீர்கள், பல விஷயங்கள். இந்த பால் தயாரிப்புகளை தானியங்களுடன், பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து, நீங்கள் இதேபோன்ற நூற்றுக்கணக்கான தயாரிப்புகளை செய்கிறீர்கள். எனவே இது நாகரிக வாழ்க்கை, ஒரு விலங்கை நேரடியாகக் கொன்று சாப்பிடுவது அல்ல. அது நாகரிகமற்ற வாழ்க்கை. பசுவின் மாமிசமும் இரத்தமும் மிகவும் சத்தானவை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்- நீங்கள் அதை நாகரிக வழியில் எடுத்துக்கொள்கிறீர்கள். நீங்கள் ஏன் கொல்ல வேண்டும்? அது அப்பாவி விலங்கு. இது கடவுள் கொடுத்த புல்லை சாப்பிட்டு, சத்துள்ள பாலை வழங்குகிறது. மேலும் பாலில் நீங்கள் வாழலாம். அவற்றின் தொண்டையை வெட்டுவது, அவற்றிக்கு நாம் காட்டும் நன்றியுணர்வா? அது நாகரிகமா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

ஜெயதீர்த்தா: அது நாகரிகமா?

சாண்டி நிக்சன்: இல்லை, நான் உங்களுடன் நூறு சதவீதம் உடன்படுகிறேன். இந்த விஷயங்களை நீங்கள் எனக்கு பதிலாக சொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் உங்களிடம் கேள்விகளைக் கேட்கிறேன், அதனால் நான் எதையும் விவரிக்கவில்லை. வெறும் குறுகிய கேள்விகள் ...

பிரபுபாதா: ஆகவே இவை நாகரிகமற்ற வாழ்க்கை முறை, கடவுளைப் பற்றி அவர்கள் என்ன புரிந்துகொள்வார்கள்? அது சாத்தியமில்லை.

சாண்டி நிக்சன்: நான் இந்த கேள்விகளை மற்றவர்களுக்காகக் கேட்கிறேன், நிச்சயமாக, கிருஷ்ண உணர்வைப் புரிந்து கொள்ளாத ஒரு துறையினருக்கு.

பிரபுபாதா: கடவுளைப் புரிந்துகொள்வது என்றால் ஒருவர் முதல் தர நாகரிக மனிதராக இருக்க வேண்டும். பல்கலைக்கழகம் என்பது முதல் தரமான மாணவருக்கானது போலவே, அதேபோல், கடவுள் உணர்வு என்பது முதல் தரமான மனிதனுக்கானது.