TA/Prabhupada 0561 - தேவர்கள் என்றால் கிட்டத்தட்ட கடவுளைப் போன்றவர்கள் - கடவுளின் குணங்களைப் பெற்றவர்கள்
Press Interview -- December 30, 1968, Los Angeles
பத்திரிகையாளர்: நான் இதை, உங்கள் அனுமதியுடன் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். நிலாவில் மக்கள் இருப்பதாக நீங்கள் சொல்கிறீர்களா ?
பிரபுபாதா: ஆம்.
பத்திரிகையாளர்: உள்ளனர். அவர்கள் தேவர்களா ?
பிரபுபாதா: ஆம்.
பத்திரிகையாளர்: அவர்கள் தேவர்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?
பிரபுபாதா: நமது வேதத்திலிருந்து, வேத இலக்கியத்திலிருந்து.
பத்திரிகையாளர்: எந்த இலக்கியத்திலிருந்து?
பிரபுபாதா: வேத இலக்கியம்.
பத்திரிகையாளர்: அதை எப்படி உச்சரிப்பீர்கள்?
பிரபுபாதா: வே-த-ம்.
பத்திரிகையாளர்: ஓ, வேதம். உங்கள் மன்னிப்பை நான் வேண்டுகிறேன். பத்திரிகையாளர்: நான் கேட்டால் நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் ...
பிரபுபாதா: அது சரி ...
பத்திரிகையாளர்: நான் உங்களை புண்படுத்த விரும்பவில்லை.
பிரபுபாதா: சில நேரங்களில் நான் உங்கள் உச்சரிப்பைப் பின்பற்ற முடிவதில்லை.
பத்திரிகையாளர்: எனக்குத் தெரியும்.
பிரபுபாதா: அது நாட்டின் வேறுபாடு. அது ஒரு பொருட்டல்ல. ஆம்.
பத்திரிகையாளர்: மேலும் அந்த இலக்கியத்திலிருந்து, வேத இலக்கியத்திலிருந்து, அதில் கூறப்பட்டுள்ளது, நிலாவில் மக்கள் இருக்கிறார்கள் என்று.
பிரபுபாதா: ஓ ஆமாம்.
பத்திரிகையாளர்: ஆனால் அவர்கள் தேவர்கள்.
பிரபுபாதா: தேவர்கள் என்றால் இந்த மனிதர்களை விட அவர்கள் மிகவும் மேம்பட்டவர்கள். எனவே ... அவர்கள் நம்மை போன்ற உயிருள்ள பிறவிகள், ஆனால் அவர்களின் வாழ்க்கை காலம், அவர்களின் வாழ்க்கைத் தரம், அவர்களின் நாகரிகம், ஆன்மீக அறிவு, மிகவும் மேம்பட்டவை, எனவே அவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். கிட்டத்தட்ட கடவுள். அவர்கள் மிகவும் மேம்பட்டவர்கள். தேவர்கள் என்றால் கிட்டத்தட்ட கடவுள் என்று பொருள். அவர்கள் எல்லா தெய்வீக குணங்களையும் பெற்றிருக்கிறார்கள், மேலும் அவர்கள் காற்றுமண்டல விவகாரங்களைக் கட்டுப்படுத்துகிறார்கள். அவர்களில் சிலர் மழைக்காலத்தை கட்டுப்படுத்துகின்றனர், அவர்களில் சிலர் வெப்பத்தை கட்டுப்படுத்துகின்றனர். நீங்கள் இங்கே கட்டுப்பாட்டைப் பெற்று இருப்பது போல், இந்த துறையின் இயக்குநர், அந்த துறையின் இயக்குநர் என்று... இதே போல தான் இந்த அண்ட வெளிப்பாடு என்று நீங்கள் ஏன் நினைக்கவில்லை, அதன் பின்னால் ஒரு பெரிய மூளை உள்ளது மற்றும் வெவ்வேறு இயக்குநர்கள் உள்ளனர் மற்றும் மேலாண்மை இருக்கிறது. மக்கள் அதை ஏற்றுக்கொள்வதில்லை. இயற்கை. இயற்கை என்று நீங்கள் எதை சொல்கிறீர்கள்? இது போன்ற நல்ல விஷயங்கள், இது போன்ற அற்புதமான விஷயங்கள் தானாகவே நடக்கின்றன என்று எந்த கட்டுப்பாடும் இல்லாமல் ? நீங்கள் இதனை உணர்கிறீர்களா?
பத்திரிகையாளர்: நல்லது, இந்த ஒரு கேள்வி எனக்குத் தெரியும், நிச்சயமாக, ஒருவர் தன்னைத்தானே எப்போதும் கேட்டு கொள்கிறார் என்று நான் நினைக்கிறேன். தன்னைக் கண்டுபிடிப்பதற்கான மனிதனின் தேடலின் ஒரு பகுதி இது ...
பிரபுபாதா: ஆனால் அவர்களுக்கு பொது அறிவு இருக்க வேண்டும். நீங்கள் ஒரு ஸ்பூட்னிக் செயற்கைக்கோளை மிதக்க முயற்சிக்கிறீர்கள், பல அறிவியல் மூளை வேலை செய்கிறது. மற்றும் கிரகங்கள் என்று அழைக்கப்படும் மில்லியன் கணக்கான அற்புதமான ஸ்புட்னிக், அவை காற்றில் மிதக்கின்றன, அதன் பின்னால் மூளை இல்லை. இது என்ன? அது மிகவும் நல்ல புரிதலா?
பத்திரிகையாளர்: எனக்குத் தெரியாது. நான் அதை சிந்திக்க வேண்டும்.
பிரபுபாதா: நீங்கள் அதை தெரிந்து கொள்ள வேண்டும். அது எப்படி இருக்க முடியும். இதற்குப் பின்னால் மிகப் பெரிய மூளை இருக்க வேண்டும். அவர்கள் உழைக்கிறார்கள்.
பத்திரிகையாளர்: இப்போது நிலா என்று சொல்கிறீர்களா, ஒரு பேச்சிற்கு ...? நான் என்ன சொல்ல ? தலைமையகம், இந்த தேவர்கள் வசிக்கும் இடம்?
பிரபுபாதா: இல்லை, ஒரே அளவில் பல கிரகங்கள் உள்ளன. பல கிரகங்கள் உள்ளன. அவற்றில் நிலாவும் ஒன்று.
பத்திரிகையாளர்: இந்த தேவர்களில் யாரேனும் உயிரினங்களில் ஏதேனும் பூமிக்கு வருகை தந்தார்களா அல்லது ...
பிரபுபாதா: முன்பு அவர்கள் வருகை தந்தனர், ஏனென்றால் அந்த நேரத்தில் மக்கள் அவர்களைப் பார்க்கத் தகுதியானவர்களாக இருந்தனர். பத்திரிகையாளர்: நீங்கள் முன்பு என்று கூறும்போது, அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பா அல்லது ...?
பிரபுபாதா: இல்லை குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு.
பத்திரிகையாளர்: குறைந்தது, ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கடைசியாக, அவர்கள் மனித வடிவத்தில் இருக்கிறார்களா?
பிரபுபாதா: ஆம். அறிந்தவரை... சில நேரங்களில் பெரிய யாகங்கள் செய்யப்பட்டன, மற்ற கிரகங்களிலிருந்து தேவர்கள் அழைக்கப்பட்டனர், அவர்களும் வருவார்கள்.
பத்திரிகையாளர்: எங்கே ...? எங்கே...? இந்த அறிக்கைக்கான ஆதாரம் வேத இலக்கியத்தில் அமைந்ததா?
பிரபுபாதா: ஆம்.
பத்திரிகையாளர்: சரி. சரி.
பிரபுபாதா: இது என்னால் தயாரிக்கப்படவில்லை.
பத்திரிகையாளர்: ஓ, எனக்குத் தெரியும்! இல்லை ! நான் அதைக் குறிக்கவில்லை. ஆனால் நான் எங்கே என்று அறிய விரும்புகிறேன் ...