TA/Prabhupada 0964 - கிருஷ்ணர் இந்த கிரகத்தில் இருக்கும் பொழுது கோலோக விருந்தாவனத்தில் இல்லாமல் இருந்தார

Revision as of 07:30, 16 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


720000 - Lecture BG Introduction - Los Angeles

இந்த மண்டலத்தின் முதன்மையான கிரகம் பிரம்மலோகம், அதுபோல, ஆன்மிக வானில், முதன்மையான கிரகம் கோலோக விருந்தாவனம். அதுவே கிருஷ்ணருடைய இடம். கிருஷ்ணர் அங்கு இருக்கிறார். ஆனால் அவர் தனது பல்வேறு சக்திகளாலும் அவதாரங்களாலும் தன்னை விரிவாக்கிக் கொள்கிறார். கிருஷ்ணர் இந்த கிரகத்தில் இருக்கும் பொழுது விருந்தாவனத்தில், இருக்கவில்லை என்று அர்த்தமில்லை. அது அப்படி அல்ல. நான் இங்கு இருக்கும் பொழுது, எனது வீட்டில் காணப்படுவதில்லை. கிருஷ்ணர் அப்படியல்ல கிருஷ்ணர். அவர் அனைத்து இடங்களிலும் இருக்க முடியும்; ஒரே நேரத்தில் அவர் தனது இருப்பிடத்தில் இருக்க முடியும். அதுவே பிரம்மம் சம்ஹிதையில்: கோலோக ஏவ நிவஸத்யகிலாத்ம-பூத: (பிச. 5.37). அவர் கோலோக பிருந்தாவனம் எனப்படும் தனது இருப்பிடத்தில் இருந்தாலும், அவர் தன்னை எல்லாருமாகவும் எல்லா இடத்திலும் விரிவாக்கிக் கொள்ள முடியும். உண்மையில் அவர் அதனை செய்திருக்கிறார். எனவே அவர் எப்படி தன்னை விரிவாக்கிக் கொள்கிறார் என்பதை நாம் உணர வேண்டும். நம்முடன் எந்தவகையில் தொடர்பு கொண்டிருக்கிறார். அதுவே விஞ்ஞானம். பகவத்கீதையில் இவைதான் விளக்கப்பட்டிருக்கின்றன.

ஆகவே கிருஷ்ணர் இங்கே பரந்தாமன் என்று அழைக்கப்படுகிறார். அதாவது அனைத்தும் சஞ்சரிக்கும் இடம். அனைத்தும் இருக்கின்றன கிருஷ்ணர் சொல்கிறார், மத்-ஸ்தானி ஸர்வ-பூதானி (ப.கீ. 9.4). அனைத்து, பௌதீக படைப்புகளும், அவரில் இருக்கின்றன. ந சாஹம் தேஷ்வவஸ்தித: ஆனால் நான் அவற்றில் இருப்பதில்லை. இது முரண்பாடாக உள்ளது. அனைத்தும் அவரில் உள்ளது ஆனால் அவர் அவற்றில் இல்லை. ஆனால் இதில் முரண்பாடு இல்லை. இதனை எளிதாக புரிந்து கொள்ளலாம். அனைத்து கிரகங்களும், சூரிய ஒளியில் சஞ்சரித்து இருப்பது போல். ஆனால் சூரியனோ கிரகங்களுக்கு எல்லாம் மிகத் தொலைவில், பல கோடி மைல் தொலைவில்.... சூரிய ஒளியில் சஞ்சரித்தல் என்றால் சூரியனில் சஞ்சரித்தல். அது உண்மை. எனவே கிருஷ்ணர் சொல்கிறார், மத்-ஸ்தானி ஸர்வ-பூதானி ந சாஹம் தேஷ்வவஸ்தித: (ப.கீ.9.4). பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் (ப.கீ. 10.12)... பவித்திரம் என்றால் களங்கமற்றது. இந்த பௌதிக உலகத்திற்கு நாம் வரும்பொழுது... நாமும் ஆன்மீக ஆத்மா, பிரம்மன், என்றாலும் பரப்பிரம்மம் கிருஷ்ணரைப் போல நாம் சிறந்தவர்கள் அல்ல, ஆனாலும் நாம் கிருஷ்ணரின் அங்கங்களாக இருப்பதால், நாமும் பிரம்மன் தான். பவித்ரம் என்றால் தூய்மையானது. தங்கத்தின் துகள்கள் கூட தங்கம்தான். தங்கம் தூய்மையாக இருந்தால், அந்த துகளும் தூய்மையாக தான் இருக்கும்.

ஆகவே கிருஷ்ணரும் இந்த உலகத்திற்கு வருகிறார், நாமும் இந்த உலகத்திற்கு வருகிறோம். நாம் களங்கம் அடைகிறோம் ஆனால் கிருஷ்ணர் களங்கம் அடையவில்லை. உதாரணத்திற்கு சிறைச்சாலையில், பல கைதிகள் இருக்கின்றனர், ஆனால் ஒரு மன்னரோ, மன்னரின் பிரதிநிதியான அமைச்சரோ, எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை மேற்பார்வை செய்ய சிறைச்சாலைக்குள் சென்றால், மன்னரோஅவரது மந்திரியோ கைதி என்பதல்ல. அவன் கைதி இல்லை. ஆனால் உயிர் வாழிகளான நாம், இந்த இயற்கையின் முக்குணங்களுக்கு ஆட்பட்டுள்ளோம். இயற்கையின் முக்குணங்களுக்கு கிருஷ்ணர் ஆட்படுவதில்லை. ஆகவே அவர் பவித்ரம் பரமம் என்று அழைக்கப்படுகிறார். முற்றிலும் தூய்மையானவர். பவன, பவன் என்பது பகவானை குறிக்கும். புருஷம். புருஷம் அவன் மனிதனாகவே அழைக்கப்படுகிறான். கடவுள் எப்போதும் அருவம் அல்ல. உருவம்தான். உன்னையும் என்னையும் போன்ற மனிதர் தான். அவர் இந்த கிரகத்தில் தோன்றிய போது, மனிதனைப் போல இரண்டு கைகளுடன், இரண்டு கால்களுடனும் தான் தோன்றினார்... மனிதனைப் போல நடந்து, பேசி, அனைத்தும் செய்தார். எனவே கடவுள் புருஷம். புருஷன் என்றால் மனிதன். ஆண்பால். பெண்ணல்ல. ஆண். ஆணாக இல்லாமல் ஒருவரால் அனுபவிக்க முடியாது. இன்னொரு இடத்தில் கிருஷ்ணரே பரமமான அனுபவிப்பாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அனுபவிப்பவர், என்று சொன்னாலே புருஷன்தான், ஆண் தான். அதுவே இங்கு விளக்கப்பட்டுள்ளது. அர்ஜுனன் அதைப் புரிந்து கொண்டான். அவன் புருஷன். பரம புருஷன், முழுமுதற் கடவுள். மற்றோரிடத்தில் கிருஷ்ணர் புருஷோத்தமன்- ஆண்களில் சிறந்தவன் என்று அழைக்கப்படுகிறார். புருஷம் சாஸ்வதம். சாஸ்வதம் என்றால் நிலையானது.