TA/Prabhupada 0965 - யாருடைய வாழ்க்கை கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதோ அவரிடம் அடைக்கலம் பெற வேண்ட

Revision as of 07:30, 16 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


720000 - Lecture BG Introduction - Los Angeles

மாயாவாத தத்துவவாதிகள், பரம்பொருள் அருவமானது என்று நினைக்கின்றனர்.

மய்யாஸக்த-மனா: பார்த
யோகம் யுஞ்ஜன் மத்-ஆஷ்ரய:
அஸம்ஷயம் ஸமக்ரம் மாம்
யதா ஜ்ஞாஸ்யஸி தச் ச்ருணு
(ப.கீ. 7.1).

"கடவுள் என்பது என்ன?" என்பதைப் பற்றி அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் அறிவுரை செய்கிறார். கடவுள் என்ற கருத்தானது, நாம் எவ்வளவு அனுமானங்கள் செய்தாலும் முழுமையாக இருக்காது, ஏனெனில் கடவுள் எல்லையற்றவர், எங்கும் வியாபித்திருப்பவர். நாம் எல்லைக்கு உட்பட்டவர்கள். ஆகவே கடவுளே தானாகத் தன்னை பக்தனிடம் வெளிப்படுத்திக்கொள்ளா விட்டால், கடவுள் என்ன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. எனவே, கடவுளே கிருஷ்ணரே, தன்னைப் பற்றி பேசுகிறார். மய்யாஸக்த-மனா:. என்பதை முறை. கிருஷ்ணர் உடனான தன் ஈடுபாட்டை ஒருவர் உயர்த்திக்கொள்ள வேண்டும். நாம் இப்போது பௌதிகப் பொருட்களில் பற்றுதல் கொண்டுள்ளோம், அதனை திசை திருப்ப வேண்டும். ஏதாவது ஒன்றில் பற்றுதல் கொள்வதுதான் நமது நிலைமை. அதுவே உண்மை. இப்போது, உடல் சார்ந்த நமது வாழ்க்கையில், நம்முடைய பற்றுதல் எல்லாம் உடல் மேலேயே உள்ளது, உடல் சம்பந்தப்பட்ட அனைத்திலும், நாம் பற்றுதல் கொண்டுள்ளோம். நான் என் மனைவியிடம் பற்றுதல் கொண்டுள்ளேன். ஏன்? ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கான பெண்கள், அழகிய பெண்கள் இருக்கின்றனர். அவர்களிடம் எல்லாம் எனக்கு பற்றில்லை. ஆனால் எனது மனைவி அவ்வளவு அழகாக இல்லாவிட்டாலும், நான் பற்று வைத்து இருக்கிறேன் என்பது உண்மை. ஏன்? ஏனெனில், அவளுடன் என் உடல் கொண்டுள்ள உறவினால். அது போலதான், நான் என் நாட்டின் மீது பற்றுதல் கொண்டுள்ளேன், எனது வீட்டின் மீது பற்றுக் கொண்டுள்ளேன், அதுபோல் பல விஷயங்கள், காரணம் நான் என்னை இந்த உடலாக நினைக்கின்றேன், இந்த உடலுடன் சம்பந்தப்பட்ட அனைத்தையும், நான் எனது என்று நினைக்கின்றேன். ஆக தற்போது "நான்" மேலும் "எனது" என்ற என்னுடைய கருத்துக்கள் தவறானது. ஆகையினால், அந்த பற்றுதலை நாம் கிருஷ்ணரின் பால் திசை திருப்பினால், கடவுளை, கிருஷ்ணரை புரிந்துகொள்ளலாம். கிருஷ்ணர் சூரியனை போன்றவர். சூரிய ஒளி இருக்கும் பொழுது, சூரியனையும் பார்க்கலாம் நம்மையும் பார்க்கலாம். சூரிய ஒளி இல்லாமல், இரவு நேர இருட்டில், சூரியனையும் பார்க்க முடியாது நம்மையும் பார்க்க முடியாது. எனவே கிருஷ்ண உணர்வை வளர்த்துக் கொள்வதுதான் முறை. மய்யாஸக்த-மனா: பார்த யோகம் யுஞ்ஜன் மத்-ஆஷ்ரய:.

இதுதான் யோகம். யோகம் என்றால் இணைந்திருத்தல். யோகம் யுஞ்ஜன்... இந்த யோகம் கிருஷ்ணருடன் இணைந்து பயிற்சி செய்யப்பட வேண்டும். அதனால் தான் அவர் கூறினார், மத் ஆஸ்ரய. மத் என்றால் நான், அல்லது எனது என்பதை குறிக்கும். ஆஸ்ரய என்றால் அடைக்கலம் கொள்வது. எனவே கிருஷ்ணர் அல்லது கிருஷ்ணரின் பிரதிநிதியிடம் அடைக்கலம் எடுத்துக்கொள்ள வேண்டும். கிருஷ்ணரிடம் அடைக்கலம் கொள்வது நமக்கு சாத்தியமில்லை தான், ஏனெனில் கிருஷ்ணர் இப்போது இங்கு இல்லை. ஆனால் அவருடைய பிரதிநிதிகள் இருக்கிறார்கள். எனவே அவருடைய பிரதிநிதிகளிடம் அடைக்கலம் கொள்ள வேண்டும். மனதை கிருஷ்ணர் மேல் ஒருநிலைப்படுத்தி, பக்தி யோகத்தை பயிற்சி செய்ய வேண்டும். அதற்குப் பெயர்தான் கிருஷ்ணபக்தி. யாருடைய வாழ்க்கை கிருஷ்ணரிடம் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளதோ அவரிடம் அடைக்கலம் கொள்ள வேண்டும், அவருடைய வழிகாட்டுதல்களின் கீழ் பயிற்சி செய்ய வேண்டும், கிருஷ்ண உணர்வை வளர்த்துக் கொண்டால் அதன்பின் கிருஷ்ணர் தன்னை வெளிப்படுத்திக் கொள்வார். நாம் எந்த அளவுக்கு முன்னேறுகிறோமோ அந்த அளவிற்கு தன்னை வெளிப்படுத்திக் கொள்வார்.