TA/Prabhupada 1026 - அனுபவிப்பாளர் நாம் அல்ல, கிருஷ்ணர் தான் என்று புரிந்து கொண்டால், அதுதான் ஆன்மீக உலகம்

Revision as of 07:37, 16 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


731129 - Lecture SB 01.15.01 - New York

நாம் மகிழ்ச்சியாக இருக்க விரும்பி பல யோசனைகளை செய்கிறோம். ஒவ்வொருவரும் தமது சொந்த யோசனையை வைத்துள்ளனர், "இப்போது இது..." ஆனால் இந்த அயோக்கியர்கள், இவர்கள், மகிழ்ச்சியை பெறுவதற்கான உண்மையான வழிமுறை கிருஷ்ணர் தான் என்பதை அறியமாட்டார்கள். அதை அவர்கள் அறிய மாட்டார்கள். ந தே விது:3 ஸ்வார்த2-க3திம்' ஹி விஷ்ணும்' து3ராஷ2யா யே ப3ஹிர்-அர்த2-மானின: (ஸ்ரீமத் பா 7.5.31). நீங்கள், நீங்கள் உங்கள் நாட்டில் பார்க்கலாம், அவர்கள் பல விஷயங்களை முயற்சி செய்கிறார்கள். பல வானளாவிய கட்டடங்கள், பல மோட்டார் கார்கள், பற்பல பெரிய பெரிய நகரங்கள், ஆனால் மகிழ்ச்சியே இல்லை. ஏனெனில் என்ன குறைபாடு என்று அவர்களுக்கு தெரியாது. அந்தக் குறையும் விஷயத்தை நாம் இங்கு வழங்குகிறோம். இதோ "நீங்கள் கிருஷ்ணரை எடுத்துக்கொள்ளுங்கள். மகிழ்ச்சியாக இருப்பீர்கள்." இதுதான் நமது கிருஷ்ண உணர்வு. கிருஷ்ணரும் உயிர்வாழியும் மிக நெருங்கிய தொடர்புடையவர்கள். தந்தை- மகன் அல்லது நண்பர்கள் அல்லது எஜமானன்- சேவகன்... அதைப்போல நாம் மிக நெருங்கிய தொடர்புடையவர்கள். ஆனால் கிருஷ்ணருடனான நமது நெருங்கிய தொடர்பை நாம் மறந்து விட்டு, இந்த ஜட உலகத்தில் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யும் காரணத்தினால் நாம் பலவகையான தொந்தரவுகளுக்கு உட் பட வேண்டியிருக்கிறது. இதுதான் நிலை. க்ரு'ஷ்ண பு4லிய ஜீவ போ4க3 வஞ்ச2 கரே. உயிர்வாழிகளாகிய நாம், இந்த பௌதீக உலகத்தில் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்கிறோம்... "ஏன் ஆன்மீக உலகத்தில் இல்லாமல், இந்த பௌதீக உலகத்தில் இருக்கிறாய்?" ஆன்மீக உலகில் யாரும் அனுபவிப்பாளராக ஆக முடியாது, போ4க்தா. அது உன்னதமானவர் மட்டும்தான்.போ4க்தாரம்' யஜ்ஞ-தபஸாம்' ஸர்வ (ப்3க்3 5.29)...அதில் எந்த தவறும் இல்லை. அங்கே உயிர்வாழிகளும் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் உண்மையான அனுபவிப்பாளர், உரிமையாளர், கிருஷ்ணர் தான் என்பதை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். இதுதான் ஆன்மீக உலகம் அதைப்போலவே இந்த பௌதீக உலகத்திலும் நாம் மிகச்சரியாக, நாம் அனுபவிப்பாளர் அல்ல என்பதையும், கிருஷ்ணரே அனுபவிப்பாளர் என்பதையும் புரிந்து கொண்டால், அதுதான் ஆன்மீக உலகம். இந்த கிருஷ்ண பக்தி இயக்கம், நாம் அனுபவிப்பாளர் அல்ல என்பதையும் கிருஷ்ணரே அனுபவிப்பாளர் என்பதையும், எல்லோரையும் ஒப்புக்கொள்ள வைக்க முயற்சி செய்கிறது. இந்த முழு உடலை போல. அனுபவிப்பாளர், வயிறுதான். மேலும் இந்த கைகள், கால்கள், கண்கள், காதுகள், மூளை என எல்லாமே அனுபவிக்க வேண்டிய விஷயங்களை கண்டுபிடிப்பதில் ஈடுபட்டு, அவற்றை வயிற்றிற்கு அளிக்க வேண்டும். இது இயற்கையானது. அதைப்போலவே நாம், கடவுள் அல்லது கிருஷ்ணரின் அங்க துணுக்கு. நாம் அனுபவிப்பாளர் அல்ல. எல்லா மதங்களிலும் இது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கிறிஸ்துவ மதத்திலும், "ஓ, கடவுளே எங்களுடைய தினசரி உணவை தாரும்." என்று கூறுவதைப் போல. உணவை நம்மால் உருவாக்க முடியாது. அது கடவுளிடம் இருந்து தான் வரவேண்டும். இது வேதங்களின் கருத்தும் கூட நித்யோ நித்யானாம்' சேதனஷ் சேதனானாம் ஏகோ ப3ஹூனாம்' யோ வித3தா4தி காமான் (கட2 உபனிஷத்3 2.2.13). கடவுள் அல்லது கிருஷ்ணர், அவரே எல்லாவற்றையும் அளிக்கிறார், வாழ்வின் அத்தியாவசியங்களை, நீங்கள் விரும்புவதைப் போல, ஆனால், அனுபவிக்கக் கூடிய விஷயங்களை, உங்கள் விருப்பம் போல ஏற்றுக்கொண்டால், பிறகு சிக்கிக் கொள்வீர்கள். ஆனால் நீங்கள் அனுபவிப்பதற்காக கிருஷ்ணர் அளிப்பவற்றை நீங்கள் ஏற்றுக் கொண்டால், தேன த்யக்தேன பு4ஞ்ஜீதா2 (ஸ்ரீ ஈஷோபனிஷதம் மந்த்ர 1), பிறகு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள்.... ஒரு நோயாளியைப் போல அவன் தன் இஷ்டத்திற்கு வாழ்க்கையை அனுபவிக்க விரும்பினால், அவன் நோயாளியாகவே தொடர வேண்டும். ஆனால் மருத்துவரின் வழிகாட்டுதலின்படி, தன் வாழ்க்கையை நடத்த ஒப்புக் கொண்டால், பிறகு அவன் நோயிலிருந்து விடுபடுவான்.... இரண்டு வழிகள் உள்ளன, ப்ரவ்ருதி மற்றும் நிவ்ருதி. ப்ரவ்ருதி என்றால், "இதை சாப்பிடுவதற்கு அல்லது அனுபவிப்பதற்கு எனக்கு விருப்பம் இருக்கிறது. ஏன் கூடாது? நான் அதைச் செய்வேன். எனக்கு சுதந்திரம் இருக்கிறது." "ஆனால் உங்களுக்கு சுதந்திரம் இல்லை, நீங்கள் வெறுமனே...." இதுதான் மாயை. உங்களுக்கு சுதந்திரம் இல்லை. நமக்கு அனுபவம் இருக்கிறது. ஒரு நல்ல சுவையான உணவு இருப்பதாக வைத்துக் கொள்வோம். எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சாப்பிடலாம் என்று நினைத்தால், அதன் பிறகு அடுத்த நாள் நாம் பட்டினி கிடக்க வேண்டும். உடனேயே அஜீரணம் அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படும்.