TA/Prabhupada 0178 - கிருஷ்ணரின் ஆணையே தர்மம்

Revision as of 14:43, 4 July 2016 by SenthilKumar (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0178 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on SB 1.10.1 -- Mayapura, June 16, 1973

தர்மம் என்பது முழுமுதற் கடவுள் அருளுவதாகும். அது தான் தர்மம். நீங்கள் தர்மத்தை தயாரித்துவிட முடியாது. இப்போதெல்லாம் பல தர்மங்கள் தயாரிக்கப்படுவது போல. அவை எல்லாம் தர்மம் இல்லை. தர்மம் என்பது இறைவன் பிறப்பிக்கும் ஆணை. அது தான் தர்மம். கிருஷ்ணர், சர்வ தர்மம் பரித்யஜ மாம் ஏகம் சரணம் வ்ரஜ (BG 18.66), என்று கூறியதைப் போலவே. நாம் பல தர்மங்களைத் தயாரித்துள்ளோம்: இந்து தர்மம், இஸ்லாமிய தர்மம், கிறித்துவ தர்மம், பார்சி தர்மம், பௌத்த தர்மம், இந்தத் தர்மம், அந்தத் தர்மம் என்று பல. அவை எல்லாம் தர்மம் இல்லை. அவை மனஞ்சார்ந்த கட்டுக்கதைகளாகும், மனஞ்சார்ந்த கட்டுக்கதைகளே. இல்லையெனில், முரண்பாடாகிவிடும். உதாரணத்திற்கு, இந்துக்கள் பசு வதையை அதர்மமாகக் கருதுகின்றனர். இஸ்லாமியர்கள் பசு வதையை தங்கள் தர்மமாகக் கருதுகின்றனர். ஆக, இதில் எது சரி? பசு வதை என்பது அதர்மமா அல்லது தர்மமா? எனவே இவை எல்லாம் மனஞ்சார்ந்த கட்டுக்கதைகளாகும்.

சைதன்ய சரிதாம்ருத கரசா, எயி பல எயி மந்த சப மனோ தர்மா என்கிறது, “மனஞ்சார்ந்த கட்டுக்கதைகள்” உண்மையான தர்மம் என்பது முழுமுதற்கடவுள் எதை ஆணையிடுகிறாரோ அதுவே ஆகும். அது தான் தர்மம். ஆகவே கிருஷ்ணர், சர்வ தர்மான் பரித்யஜ மாம் ஏகம் சரணம் வ்ரஜ : (BG 18.66) என்று சொல்கிறார். "உன்னுடைய அனைத்து தர்மங்களையும் கைவிட்டு என்னை சரணடை.. இது தான் உண்மையான தர்மம்”. சரணம் வ்ர்ஜ. “என்னைச் சரணடைந்துவிடு, அது தான் உண்மையான தர்மம்.“ தர்மம் து சாக்ஷாத் பகவத் ப்ரணீதம் (SB 6.3.19) சட்டத்தைப் போலவே. சட்டம் தயாரிக்கப்படலாம், அரசாங்கத்தால் பிறப்பிக்கப்படலாம். வீட்டிலிருந்து ஒரு சட்டத்தைப் பிறப்பிக்க முடியாது. அது சட்டமாகாது. சட்டம் என்பது அரசு இடும் ஆணை. உச்ச நிலை அரசாங்கமே முழுமுதற்கடவுள். அஹம் சர்வஸ்ய ப்ரபவோ மத்தஹ பரதரம் நான்யத(BG 10.8). கிருஷ்ணரை விடச் பெரியவர யாருமில்லை. ஆகையால், கிருஷ்ணர் இடும் ஆணையே தர்மமாகும். நம் இந்த கிருஷ்ண பக்தி இயக்கமும் அதே தர்மம் தான் கிருஷ்ணர் சர்வ தர்மம் பரித்யஜ மாம் ஏகம் சரணம் வ்ரஜ : (BG 18.66) என்று சொல்கிறார். "தர்மம் என்று அழைக்கப்படுவதை எல்லாம் விட்டு விடு. இந்தத் தர்மம், அந்தத் தர்மம், என்று பல வகை தர்மங்களை விட்டுவிடு. என்னிடம் சரணடைந்துவிட்டால் மட்டும் போதும். என்னிடம் வந்து சரணடைந்துவிட்டால் மட்டுமே போதும்.”

எனவே நாங்களும் அதே கொள்கையைத் தான் போதிக்கிறோம். சைதன்ய மஹாபிரபுவும் இதையே தான் உறுதி செய்கிறார். ஸ்ரீ சைதன்யமஹா.. அமார அஞாய குரு ஹன தார ஏயி தேஷ, யாரே தேக தாரே கஹ கிருஷ்ண-உபதேஷ (CC Madhya 7.128). இது தான் தர்மம். சைதன்ய மஹாபிரபு தர்மத்தின் எந்த ஒரு புது அமைப்பையும் உருவாக்கிவிடவில்லை. இல்லை. சைதன்ய மஹாபிரபுவே கிருஷ்ணர் தானே. நமோ மஹா-வதன்யய கிருஷ்ண பிரேம-ப்ரதாய தே,, கிருஷ்ணாய-கிருஷ்ண-சைதன்ய-நாம்னே (CC Madhya 19.53). ஆகவே, இதில் ஒரே வித்தியாசம் தான்..அவரும் சாக்ஷாத் கிருஷ்ணர் தான். ஒரே வித்தியாசம் என்னவென்றால், முழுமுதற்கடவுள் என்ற முறையில் கிருஷ்ணர் நேரடியாக இவ்விதம் ஆணையிடுகிறார் ”மற்ற அபத்தங்களை எல்லாம் விட்டுவிடு; என்னைச் சரணடைந்து விட்டால் மட்டுமே போதும்” இது தான் கிருஷ்ணர். அவர் முழுமுதற்கடவுள். ஆகையால் அவர் நேரடியாக ஆணையிடுகிறார். அதே கிருஷ்ணர், மக்கள் அவரைத் தவறாக புரிந்து கொண்டதனால்… பெரிய பெரிய அறிஞர்கள் கூட, “கிருஷ்ணர் இப்படி ஆணையிடுவது சற்று அதிகப்படியானது தான்” என்று சொல்கின்றனர். ஆனால் அவர்கள் பாதகர்கள். அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு கிருஷ்ணரைப் புரிந்து கொள்ள முடியாது. ஆகையால், மக்கள் தவறாக புரிந்து கொண்டதால், கிருஷ்ணர் தானே ஒரு பக்தனாகி வந்து கிருஷ்ணரிடம் எப்படிச் சரணடைவது என்பதைக் கச்சிதமாகக் கற்பித்தார். கிருஷ்ணரே வந்தார். என் வேலைக்காரன் சில சமயம் எனக்கு மசாஜ் செய்வதைப் போல். நான் அவனுக்குத் தலையில் மசாஜ் செய்து காண்பித்து, “இது போல செய்” என்று சொல்வேன். ஆக, நான் அவனுடைய வேலைக்காரன் இல்லை. ஆனால் அவனுக்குக் கற்றுத் தருகிறேன். அதே போல், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் சாக்ஷாத் கிருஷ்ணரே தான், ஆனால் அவரே கிருஷ்ணரை அணுகுவது எப்படி, கிருஷ்ணருக்கு சேவை செய்வது எப்படி என்று கச்சிதமாகக் கற்றுத் தருகிறார், அதே கொள்கை தான். கிருஷ்ணர் “என்னிடம் சரணடைந்து விடு” என்றார். சைதன்ய மஹாபிரபு “கிருஷ்ணரிடம் சரணடைந்து விடு” என்கிறார். எனவே கொள்கை அடிப்படையில் பார்த்தால், எந்த மாற்றமும் இல்லை.