TA/Prabhupada 0451 - நமக்கு பக்தர் யார், அவரை எப்படி வழிபடுவது என்பது தெரியாதவரை நாம் கணிஷ்டர்களாகத் தான் இ
Lecture on SB 7.9.4 -- Mayapur, February 18, 1977
ஆகையால் தூய்மையான பக்தன் எனும் இந்த சிறந்த தகுதியே ஒருவரை மஹா-பாகவதனாக மாற்றுகிறது. ஆனால் அதில் பல நிலைகள் உள்ளன. பிறப்பிலிருந்தே சிறந்த மஹா-பாகவதனாக இருக்கும் நிலை நித்ய-சித்த என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் நித்திய சித்த, பூரணமானவர்கள். அவர்கள் சில குறிக்கோளுக்காக வந்தவர்கள். ஆகையால் ப்ரஹலாத மஹாராஜ் இந்த குறிக்கோளுடன் வந்தார், அதாவது அரக்கர்கள், அவன் தந்தை கூட, அவனுக்கு பல தொல்லைகள் கொடுத்தார் ஏனென்றால் அவன் கிருஷ்ண உணர்வில் இருந்தான். இதுதான் அந்த அறிவுரை. கிருஷ்ணரின் கட்டளைப்படி பிரகலாதர் இதை காண்பிக்க விரும்பினார். ஹிரண்யகஷிபுவும் வந்தான் - எவ்வாறு கிருஷ்ணரின் எதிரியாவது; மேலும் எவ்வாறு ஒரு பக்தனாக வருவது என்று காண்பிக்க பிரகலாதர் வந்தார். இது நடந்து கொண்டிருக்கிறது. ஆகையால் மஹா-பாகவத... கனிஷ்ட-அதிகாரி, மத்யம-அதிகாரி மேலும் மஹா-பாகவதர், அல்லது உத்தம-அதிகாரி. கனிஷ்ட-அதிகாரி, ஆரம்பத்தில் அவர்களுக்கு குற்றமில்லாமல் திரு விக்கிரகத்தை வழிபடுவது எவ்வாறு என்று கற்றுத்தரப்பட வேண்டும். சாஸ்திரத்தின் விதிமுறைகளின்படி, குருவின் வழிமுறைகளின்படி, ஒருவர் திரு விக்கிரகத்தை எவ்வாறு வழிப்படுவது என்று கற்றுக் கொள்ள வேண்டும். அர்ச்சாயாம் ஏவ ஹரயே பூஜாம் ய: ஸ்ரத்தயேஹதே ந தத்-பக்தேஷு சான்யேஷு ஸ பக்த: ப்ராக்ருத: ஸ்ம்ருதி: (ஸ்ரீமத் பாகவதம் 11.2.47) ஆனால் ஒருவர் முன்னேற வேண்டும். இதுதான் பக்தித்தொண்டின் முன்னேற்றம். நாம் வெறுமனே திரு விக்கிரகத்தை வழிபடுவதில் மட்டும் இருந்தால், நாம் மற்றவர்களைப் பற்றி உணர்வதில்லை - ந சான்யேஷு ந தத்- பக்த - உங்களுக்கு பக்தர் யார் என்று தெரியாது, அவரை எவ்வாறு வணங்குவது, என்று தெரியாதென்றால், பிறகு நாம் கனிஷ்ட அதிகாரியாகவே இருப்போம். மேலும் மத்யம-அதிகாரி என்றால் அவர் தன் நிலையையும் மற்றவர்களுடைய நிலையையும் அறிந்திருக்க வேண்டும், பக்தரின் நிலை மற்றும் பகவானின் நிலை அதுதான் மத்யம-அதிகாரி. ஈஸ்வரே தத் அ தீனேஷு பாலிசேஷு த்விஷத்ஸு ச (ஸ்ரீமத் பாகவதம் 11.2.46). அவருக்கு நான்கு வகையான கண்ணோட்டம் இருக்கும்: பகவான், ஈஸ்வர; தத்-அதீனேஷு, அதாவது பகவானிடம் தஞ்சம் அடைந்தவர்- அப்படி என்றால் பக்தர் - ஈஸ்வரே தத் அ தீனேஷு; பாலிஷு, அப்பாவி பிள்ளைகள், இந்த பிள்ளைகளைப் போல், பாலிச, அர்பகஹ; மேலும் த்விஷத்ஸு, பொறாமையுள்ள. ஒரு மத்யம-அதிகாரி, இந்த நான்கு வேறுபட்ட நபர்களையும் காண முடியும், அதனால் அவர்களை வேறுபட்ட விதத்தில் நடத்துவார். அது என்ன? ப்ரேம-மைத்ரி-க்ருபோபேக்ஷா. ஈஸ்வர, பகவானை நேசிப்பது, க்ருஷ்ண, ப்ரேமை. மேலும் மைத்ரி. மைத்ரி என்றால் நட்பு ஏற்படுத்திக் கொள்வது. பக்தனாக இருக்கும் ஒருவருடன், நாம் நட்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் பொறாமை கொள்ளக் கூடாது; நாம் நட்பு கொள்ள வேண்டும். மைத்ரி. மேலும் அப்பாவி, இந்த பிள்ளைகளை போல், க்ருப - அவர்களுக்கு இரக்கம் காட்டுதல், அவர்கள் எவ்வாறு பக்தர்கள் ஆவார்கள்,, எவ்வாறு உச்சாடனம் சொல்ல அவர்கள் கற்றுக் கொள்வார்கள், நடனம், அவர்களுக்கு உணவு அளிப்பது, கல்வி கற்பித்தல். இதைத்தான் க்ருப என்றழைக்கிறோம். இறுதியாக, உபேக்ஷா. உபேக்ஷா என்றால் பொறாமைப்படுபவர்கள், ஏற்றுக் கொள்ளாதீர்கள், அவர்களுடன் சேர்ந்து பழகாதீர்கள். உபேக்ஷா. "இல்லை, அவனை விடுங்கள்..." ஆனால் மஹா-பாகவதர், அவருக்கு உபேக்ஷா ஏதும் இருக்காது. த்விஷத்ஸுவாக இருப்பவர்களைக் கூட அவர் நேசிப்பார். ப்ரகலாதரைப் போல். ப்ரகலாதர், அவருடைய தந்தை மிக மிகப் பொறாமைக்காரராக இருந்தார். இருப்பினும், ப்ரகலாதர் தன் சுய தேவைக்கு எந்த ஆசீர்வாதத்தையும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார், ஆனால் அவர் நரசிம்மதேவரிடம், தன் தந்தையை மன்னித்துவிடும்படி வேண்டினார், அதாவது "என் தந்தைக்கு ...." அவர் தனக்கென்று எதுவும் கேட்கவில்லை. ஆனால் இருப்பினும், அவருக்கு தெரியும் அதாவது "என் வாழ்க்கை முழுவதிலும் என் தந்தை ஒரு எதிரியாகவே இருந்தார், பல விதத்தில் புண்படுத்தினார் .... ஆகையால் இதுதான் வாய்ப்பு. என் தந்தையை மன்னிக்கும்படி பகவானிடம் வேண்டுகிறேன்." ஆனால் அது கிருஷ்ணருக்குத் தெரிந்திருந்தது. அவன் தந்தை ஏற்கனவே மன்னிக்கப்பட்டுவிட்டார். ஏனென்றால் அவன் ப்ரகலாதரின் தந்தையாக இருந்ததினால் அவன் ஏற்கனவே ஆசீர்வாதம் பெற்றுவிட்டான். இத்தகைய அருமையான மகனை அடைவது சாதாரண விஷயம் அல்ல. ஆகையால் ப்ரகலாதர் நரசிம்மதேவரிடம் "என் தந்தையை கருணையுடன் மன்னிக்க வேண்டுகிறேன்," என்று வேண்டிக் கொண்ட உடனேயே, அவர் உடனடியாக கூறினார், "உன் தந்தை மட்டும் அல்ல - அவருடைய தந்தை, அவருடைய தந்தை, அவருடைய தந்தை; அனைவரும் விடுதலை பெற்றுவிட்டார்கள்." ஆகையால் நாம் பரகலாதரிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் அதாவது ஒரு பிள்ளை குடும்பத்தில் பக்தனாக இருந்தால், அவன்தான் மிகச் சிறந்த பிள்ளை, மிகச் சிறந்தவன். குடும்பத்திற்கு சிறந்த தொண்டு அளித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் போக்கிரிகள், அவர்கள் வேறு விதமாக எடுத்துக் கொள்கிறார்கள், அதாவது "என் மகன் பக்தனாகிவிட்டான். கடத்துவதன் மூலம் திரும்ப அழைத்து வந்து மனதை எதிர்மறையாக இயக்குவிக்கிறார்கள்." மக்கள் மிகவும் போக்கிரிகளாக இருக்கிறார்கள். பார்த்தீர்களா? அவர்கள் அதை ஒரு சிறந்த பாக்கியமாக எடுத்துக் கொள்வதில்லை அதாவது "என் அதிர்ஷ்டசாலியான மகன் ஒரு பக்தனாகிவிட்டான். என் குடும்பத்தில் அனைவரும் விடுதலை பெற்றுவிடுவார்கள்." ஆனால் அவர்களுக்கு அறிவில்லை. அவர்களுக்கு மூளை இல்லை. ஆகையினால் நான் கூறுகிறேன் இது வலுக்கட்டாய போதனையல்ல, இது மூளை கொடுப்பது. அவர்களுக்கு மூளை இல்லை. (சிரிப்பு) ஆகையால் இதை மனப் பூர்வமாக ஏற்றுக் கொண்டு மேலும் சரியாகச் செய்யுங்கள். மிக்க நன்றி. பக்தர்கள்: ஜெய!