TA/Prabhupada 0473 - டார்வின் பரிணாம வளர்ச்சி தத்துவத்திற்கான யோசனைகளை பத்ம புராணத்திலிருந்து எடுத்திரு

Revision as of 15:39, 29 May 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0473 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture -- Seattle, October 7, 1968

டார்வின், பரிணாம வளர்ச்சியின் யோசனையை இந்த பத்ம புராணத்திலிருந்து எடுத்துள்ளார். வேத இலக்கியங்களுக்கு அப்பாற்பட்ட எந்த ஒரு தத்துவத்தையும், எந்தவொரு கோட்பாட்டையும் உலகில் கண்டுபிடிக்க முடியாது. இது மிகவும் பக்குவமானது, எல்லாம் இருக்கிறது. எனவே மானுடவியல் , அது என்ன? மானுடவியலா? டார்வினின் மானுடவியல் பத்ம புராணத்தில் உள்ளது. இது மிகவும் நேர்த்தியாக விவரிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு இனங்களின் எண்ணிக்கை விவரம் எவ்வளவு என்பதை டார்வின் விளக்க முடியாது, ஆனால் பத்ம புராணம், கூறுகையில், நீர்வாழ் உயிரினங்கள், கடலுக்குள் 900,000 உயிரினங்கள் உள்ளன என்று கூறுகிறது. மேலும் கடலுக்கு மேலே, கடல் நீர் வற்றியவுடன், நிலம் வெளியே வருகிறது, உடனடியாக தாவரங்கள் தொடங்குகின்றன. பின்னர் பல்வேறு வகையான தாவரங்களும் மரங்களும் வருகின்றன. எனவே ஜலஜா நவ-லக்ஷாணி ஸ்தா2வரா லக்ஷ-விம்'ஷ2தி. இருபது லட்சம் லக்ஷ- விம்ஷ2தி, இரு நூறாயிரம். அது இரண்டு மில்லியனா? எப்படியிருந்தாலும் ... ஸ்தாவரா லக்ஷ. ஸ்தாவாரா என்றால் அசைய முடியாதவர்கள் என்று பொருள். பல்வேறு வகையான உயிரினங்கள் உள்ளன. மரங்கள், தாவரங்கள், அவை நகர முடியாது. பறவைகள், மிருகங்கள், மனிதர்களைப் போன்ற மற்ற வகை உயிரினங்களால் நகர முடியும். எனவே ஸ்தாவரா மற்றும் ஜங்கமா. ஜங்கமா என்றால் நகரக்கூடியவர்கள், ஸ்தவாரா என்றால் அசைய முடியாதவர்கள் என்று பொருள். குன்றுகள், மலைகள், அவைகளும் ஸ்தாவரங்களுள் அடக்கம் . அவையும்கூட வாழும் உயிரினங்கள். பல குன்றுகள் உள்ளன, அவை வளர்கின்றன. அதாவது அதற்கு உயிர் இருக்கிறது, ஆனால் மிகத் தாழ்ந்த நிலையில் - கல்லாக. எனவே இந்த வழியில் நாம் முன்னேறுகிறோம். ஸ்தா2வரா லக்ஷ-விம்'ஷ2தி க்ரு'மயோ ருத்3ர-ஸங்க்2யகா:. ஊர்வன மற்றும் புழுக்கள். ருத்3ர-ஸங்க்2யகா: மேஅன்ஸ் ஏலேவேன் ஹுந்த்3ரேத்3 தோ2உஸந்த்3ஸ். பின்னர் ஊர்வன, புழுக்கள் இவற்றிலிருந்து, இறக்கைகள் வளரும் - பறவைகள். இறக்கைகள் வளரும் ... பின்னர் அது பறவையின் வாழ்க்கைக்கு வருகிறது. பக்ஷி2ணாம்' த3ஷ2-லக்ஷணம் : பத்து லட்சன் பறவை வகைகள். பின்னர் பஷ2வ: த்ரிம்'ஷ2ல்-லக்ஷாணி, நான்கு கால் விலங்குகள், முப்பது லட்சம் உள்ளன. எனவே ஒன்பது கூட்டல் இருபது, இருபத்தி ஒன்பது, பின்னர் பதினொன்று கூட்டினால், மொத்தம் நாற்பது. பின்னர் பறவைகள், பத்து , மொத்தம் ஐம்பது, மிருகங்கள், முப்பது, மொத்தம் : எண்பது - எண்பது இலட்சம். பின்னர் ... எட்டு மில்லியன் - மற்றும் மனித வாழ்வின் நான்கு இலட்சம் இனங்கள். மனித வாழ்க்கை பெரிய அளவில் இல்லை. அதில், பெரும்பாலும் அவர்கள் நாகரிகமற்றவர்கள், மற்றும் மிகக் குறைவான ஆரிய குடும்பங்கள். ஆரிய குடும்பம் - இந்தோ ஐரோப்பிய குடும்பம், அவர்களும் ஆரியர்கள் - அவர்கள் மிகக் குறைவு. ஐரோப்பியர்கள், அவர்கள் இந்தோ-ஐரோப்பிய குழுவைச் சேர்ந்தவர்கள். அமெரிக்கர்கள், அவர்களும் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள். எனவே மனித சமுதாயத்தின் இந்த குழு மிகக் குறைவு. வேறு, பல நாகரிகமற்ற குழுக்கள் உள்ளன. எனவே வேதாந்தம் கூறுகிறது, அத அதஹா: இப்போது நீங்கள் வளர்ச்சி பெற்ற மனித வடிவம், நாகரிக வாழ்க்கை பெற்றுள்ளீர்கள், வசதியான வாழ்க்கைக்கு நல்ல ஏற்பாடு கிடைத்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் உங்களுக்கு எல்லா பொந்திக வசதிகளும் கிடைத்துள்ளன. உங்களுக்கு கார்கள் கிடைத்துள்ளன, உங்களுக்கு நல்ல சாலை, நல்ல உணவு கிடைத்துள்ளது, நல்ல கட்டிடம், நல்ல உடை, உங்கள் உடலின் நல்ல அம்சம். கடவுள் உங்களுக்கு, அனைத்தையும் மிக அருமையாக வழங்கியுள்ளார்.