TA/Prabhupada 0681 – நீங்கள் கிருஷ்ணரின்மேல் அன்புசெலுத்தினால், பின்னர் உமது உலக அன்பு கணக்கிடப்படும்

Revision as of 11:43, 24 June 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0681 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 6.30-34 -- Los Angeles, February 19, 1969

பக்தர்கள் : எல்லா புகழும் குரு மற்றும் கௌரங்கருக்கே.

பிரபுபாதா: அடுத்து?

விஷ்ணுஜன: ஸ்லோகம் முப்பது. " என்னை எல்லா இடங்களிலும், எல்லாவற்றையும் என்னிலும் காண்பவன் என்னை ஒரு போதும் இழப்பதில்லை. நானும் அவனை ஒருபோதும் இழப்பதில்லை.. (ப. கீ 6.30)

பிரபுபாதா: அவ்வளவு தான். நீங்கள் எப்படி கிருஷ்ணரை இழக்க முடியும்? இதுவே ஸதா3 தத்3-பா4வ-பா4வித: (ப. கீ 8.6) எனவே, இந்த வகையில் நீங்கள் உங்கள் வாழ்க்கையை பயிற்சி செய்தால், கிருஷ்ணரிடம் நீங்கள் இழக்க படமாட்டீர்கள். ஏனவே, மரணத்தின் போது நீங்கள் நிச்சயமாக கிருஷ்ணரை அடைவீர்கள். . நீங்கள் எங்கே செல்வீர்கள் ? நீங்கள் கிருஷ்ணரிடம் இழக்கப்பட மாட்டீர்கள். கௌந்தேய ப்ரதிஜானீஹி ந மே ப4க்த: ப்ரணஷ்2யதி (ப.கீ 9.31) க்ருஷ்ணர் உறுதியளிக்கிறார் : " எனது அன்பு அர்ஜுனா, எனது தூய பக்தன் என்றுமே என்னால் இழக்கப்படுவதில்லை." எனவே க்ருஷ்ணரிடமிருந்து இழக்கப்பட்டவர்களாக ஆகாதீர்கள். இதுவே வாழ்கையின் பக்குவ நிலை. இதுவே வாழ்கையின் பக்குவ நிலை. க்ருஷ்ணரிடமிருந்து விலகாமல் இருங்கள். நீங்கள் மற்றெல்லா விஷயங்களையும் மறக்கலாம். ஆனால் க்ருஷ்ணரை மறக்காதீர்கள். அதன் பிறகு நீங்கள் செல்வந்தர்கள் ஆவீர்கள். கோஸ்வாமிகளைப் போல , மக்களின் கண்களுக்கு நீங்கள் ஏழையைப் போல காட்சியளிக்கலாம். அவர்கள், யாசகனைப் போல , எளிமையான வாழ்கை வாழ்ந்தார்கள். அவர்கள் செல்வசெழிப்பு மிக்க அமைச்சர்களாக திகழ்ந்தவர்கள். ரூப கோஸ்வாமி யும் சனாதன் கோஸ்வாமி யும் , அமைச்சர்களாக, பெரும் செல்வந்தர்களாக, கௌரவமிக்க பண்டிதர்களாக இருந்தவர்கள். சமூகத்தில் எல்லா வகையிலும் அவர்கள் உயர்ந்த அந்தஸ்தை பெற்றிருந்தனர். ஆனால் யாசகனாக இருப்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர் : த்யக்த்வா தூர்ணம் அஷே2ஷ-மண்ட3ல-பதி-ஷ்2ரேணீம். இதை கோஸ்வாமிகளின் ப்ரார்தனைகளில் நீங்கள் பார்க்கலாம். த்யக்த்வா தூர்ணம் அஷே2ஷ-மண்ட3ல-பதி-ஷ்2ரேணீம்' ஸதா3 துச்ச2-வத். மிகவும் துச்சமானதைப் போல அவர்கள் எல்லாவற்றையும் துறந்தார்கள். பூ4த்வா தீ3ன-க3ணேஷ2கௌ கருணயா கௌபீன-கந்தா2ஷ்2ரிதௌ. பூ4த்வா தீ3ன-க3ணேஷ2கௌ கருணயா கௌபீன-கந்தா2ஷ்2ரிதௌ. வெறும் மற்றும் கோவணம் அரைத்துணி மட்டுமே. அவ்வளவு தான். அவர்கள் மிக மிக எளிமையான வாழ்கை வாழ்ந்தார்கள். ஆனால் , அவர்களால் எப்படி அவ்வாறு வாழ முடிந்தது. ஒரு மிகப் பெரிய செல்வந்தன், ஏழ்மையான வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்டானனென்றால் , அவனால் வாழ முடியாது .இதை நான் பார்த்திருக்கிறேன். மிக வசதியாக வாழ்ந்து பழக்கப் பட்டவர்களுக்கு, திடீரென்று எளிமையை கடைப் பிடிக்கச் சொன்னால் , அவனால் வாழ முடியாது. ஆனால் அவர்கள் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். அது எப்படி ? அது இங்கே கூறப்பட்டுள்ளது. கோ3பீ-பா4வ-ரஸாம்ரு'தாப்3தி4-லஹரீ-கல்லோல-மக்3னௌ முஹுர் வந்தே3 ரூப-ஸநாதனௌ ரகு4-யுகௌ3 ஸ்ரீ-ஜீவ-கோ3பாலகௌ. அவர்கள் மிக செல்வந்தர்களாக இருந்தாலும், கோபியர்களின் அன்பு பரிமாற்றம் எனும் கடலில் அவர்கள் தங்களை மூழ்கடித்து கொண்டனர். எனவே, நீங்கள், க்ருஷ்ணருக்கான கோபியர்களின் அன்புப் பரிமாற்றத்தை நினைத்துக் கொண்டிருந்தீர்களானால், நீங்கள் இழக்கப் படமாட்டீர்கள். பல வழிகள் உள்ளது. க்ருஷ்ணரிடம் இழக்கப்படாதவர்கள் ஆகுங்கள். பிறகு நீங்கள் வெற்றியடைவீர்கள். பிறகு, க்ருஷ்ணரும் இழப்பதில்லை, பக்தனும் இழப்பதில்லை. மேலே சொல்லுங்கள்

விஷ்ணுஜன : பொருளுரை: " கிருஷ்ண பக்தன், கிருஷ்ணரை எங்கும் காண்பதும், கிருஷ்ணரில் எல்லாவற்றையும் காண்பதும் நிச்சயமே. பௌதீக இயற்கையின் தனித்தனி தோற்றங்களை அவன் காண்பது போல இருந்தாலும், எல்லாம் கிருஷ்ண சக்தியின் தோற்றங்களே என்பதை அறிந்து, ஒவ்வொன்றிலும் அவன் கிருஷ்ணரை உணர்கிறான்.

பிரபுபாதா: "சக்தி". ஒரு தத்துவவாதி, க்ருஷ்ண உணர்விலிருப்பவன், க்ருஷ்ண உணர்விலிருப்பனே ஒரு தத்துவவாதி. அவன் ஒரு மரத்தை பார்த்தால், " இது என்ன?" என்று ஆராய்ந்தால், இந்த மரம் , இது பௌதீகம், இதற்கு ஒரு பௌதீக உடல் உள்ளது என்று பார்ப்பான். எனக்கு எப்படி ஒரு ஜட உடல் உள்ளதோ , அது போல. ஆனால் அவன் ஒரு உயிர்வாழி. அவனது கடந்த கால பாவ செயல்களால், நகரக் கூட முடியாதபடியான ஒரு இழிந்த உடல் அவனுக்கு கிடைத்துள்ளது. ஆனால், அவனது பௌதீகமான உடல், பௌதீகம் என்றால் ஜட சக்தி, இந்த ஜட சக்தி யாருடையது? க்ருஷ்ணருடைய சக்தி. எனவே இந்த மரம் க்ருஷ்ணருடன் சம்மந்தப்பட்டது. மேலும், இந்த மரம் ஒரு உயிர்வாழி என்ற வகையில் , க்ருஷ்ணரின் அம்சமாவான். எனவே, நீங்கள், இந்த வகையில் கிருஷ்ண உணர்வு தத்துவத்தை ஆராய்ந்து பார்த்தீர்களானால், இந்த மரத்தை பார்க்க மாட்டீர்கள் . நீங்கள் இங்கே கிருஷ்ணரை பார்ப்பீர்கள். இதுவே கிருஷ்ண உணர்வு . நீங்கள் மரத்தைப் பார்க்க மாட்டீர்கள். நீங்கள் கிருஷ்ணரை பார்ப்பீர்கள். இதுவே கிருஷ்ண உணர்வு. இவ்வகையில் நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும். இதுவே யோக பயிற்சி. இதுவே சமாதி . மேலே சொல்லுங்கள்.

விஷ்ணுஜன: " கிருஷ்ணரின்றி எதுவுமே இருக்க முடியாது, கிருஷ்ணரே எல்லாவற்றின் இறைவன். இதுவே கிருஷ்ண உணர்வின் அடிப்படை கொள்கையாகும். கிருஷ்ண உணர்வு கிருஷ்ணரின் மீதான அன்பை வளர்ப்பதாகும்--இது படத்திலிருந்து முக்தி அடைவதை விட உயர்ந்த நிலையாகும்.

பிரபுபாதா: ஆம், இந்த உணர்வு, இந்த மரத்தை க்ருஷ்ணரின் சக்தியாகவும், க்ருஷ்ணரது அம்சமாகவும் பார்ப்பது, இந்த மரத்தைப் பற்றி ஏன் நீங்கள் நல்ல விதத்தில் பார்க்கிறீர்கள்? ஏனென்றால், உங்களுக்கு க்ருஷ்ணரிடத்தில் அன்பு இருக்கிறது. நீங்கள் உங்கள் குழந்தையின் மீது அன்புடன் இருக்கிறீர்கள். அந்தக் குழந்தை வெளியே சென்றிருக்கிறது. நீங்கள் உங்கள் குழந்தையின் செருப்பைக் கண்டவுடன், " ஒ, இது என் குழந்தையுடைய செருப்பு " என்று நினைப்பீர்களல்லவா, அது போல நீங்கள் அந்த செருப்பின் மீதா அன்பு செலுத்துகிறீர்கள்? இல்லை அந்த குழந்தை மீது தானே. அதைப் போலவே, கிருஷ்ணருடைய சக்தி வேறு வகையில் வெளிப்படுவதை பார்த்தால், உடனே அதன் மீது நீங்கள் அன்பு கொள்கிறீர்கள். ஏனென்றால் , நீங்கள் கிருஷ்ணர் மீது அன்பு வைத்துள்ளீர்கள். எனவே நீங்கள் கிருஷ்ணர் மீது அன்பு செலுத்தும் செலுத்தும் போது உங்களுடைய உலகளாவிய அன்பும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இல்லையென்றால் அது முட்டாள் தனமே. உங்களால் அன்பு செலுத்த முடியாது. அது சாத்தியமல்ல. நீங்கள் கிருஷ்ணர் மீது அன்பு செலுத்தும் போது தான் , உலகளாவிய அன்பு என்கிற வார்த்தை. பல விஷயங்கள் மிகவும் விளம்பரப்படுத்தப்படுகிறது. நீங்கள் கிருஷ்ணர் மீது அன்பு செலுத்த வில்லை என்றால், எப்படி பார்ப்பீர்கள் என்றால், "இதோ எனது அமெரிக்க சகோதரன், இந்த பசு எனக்கு உணவாகும்." ஏனென்றால் பசுவின் மீது நீங்கள் அன்பு செலுத்த வில்லை. இந்த பசுவும் அமெரிக்க பசு எனது சகோதரனும் அமெரிக்கன் இந்த உலகளாவிய அன்பு எப்படிப்பட்டது என்றால் , "அமெரிக்கன் எனது சகோதரன் ஆனால் பசு எனது உணவு" ஏன்? ஆனால், ஒரு கிருஷ்ண உணர்வு உள்ள மனிதன் எப்படி பார்ப்பான் என்றால், ஓ , இது ஒரு பசு . இது ஒரு நாய் . இது கிருஷ்ணரின் அம்சமாகும். ஏதோ ஒரு காரணத்தால், என்னுடைய உடலை விட வேறுபட்ட வகையில் இவனுக்கு ஒரு உடல் கிடைத்துள்ளது. அதனால் அவன் என் சகோதரன் அல்ல என்று அர்த்தமல்ல. எனவே நான் எப்படி என்னுடைய சகோதரனை கொல்ல முடியும்? இதுவே கிருஷ்ணர் மேல் உள்ள அன்பு. இதற்குக் காரணம் கிருஷ்ணர் மேல் இருக்கும் அன்பே.

எனவே கிருஷ்ணர் மீதான அன்பு மிகவும் அருமையானது. அனைத்துமே பூரணம். க்ருஷ்ணர் மீது அன்பு இல்லாவிட்டால், அன்பு என்ற கேள்விக்கே இடமில்லை , இது எல்லாம் முட்டாள்தனமே ஆகும். க்ருஷ்ண உணர்வில்லாமல் எந்த அன்பும் இல்லை. ஆம்