TA/Prabhupada 0291 - நான் ஊழியனாக இருக்க விரும்பவில்லை, தலை வணங்க விருப்பம் இல்லை - அது உங்களுடைய நோய்

Revision as of 01:51, 23 April 2020 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0291 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture -- Seattle, September 30, 1968

பிரபுபாதர்: என்னது? வாலிபன்: கீழ்ப்படிவதைப் பற்றி மறுபடியும் விளக்குகிறீர்களா? தமால் கிருஷ்ண: கீழ்ப்படிவதைப் பற்றி மறுபடியும் விளக்க முடியுமா என்று கேட்கிறான். பிரபுபாதர்: கீழ்ப்படிதல், அது எளிதான விஷயம். நீ கீழ்ப்படிந்து இருக்கிறாய், தலை வணங்குகிறாய். கீழ்ப்படிதல் என்றால் என்னவென்று உனக்கு புரியவில்லையா? அது அவ்வளவு கடினமான விஷயமா என்ன? நீ யார்க்கும் கீழ்ப்படிந்து இல்லையா? வாலிபன்: ஆமாம், நீங்கள் அப்படி சொல்லலாம். பிரபுபாதர்: ஆம், நீ கீழ்ப்படிந்து தான் ஆகவேண்டும். எல்லோரும் கீழ்ப்படிந்து தான் ஆகவேண்டும். வாலிபன்: ஆனால் ஆன்மீக ரீதியாக என் எஜமானுக்கு நான் கீழ்ப்படிந்தவன் என்று நான் நினைக்கவில்லை. பிரபுபாதர்: முதலில் ஆன்மீக வாழ்க்கை என்றால் என்னவென்பதை புரிந்துகொள், பிறகு... ஆன்மீக ரீதியாகவும் நீ கீழ் நிலையில் உள்ளவன் தான், ஏனென்றால் கீழ்ப்படிவது தான் உன் இயல்பு. ஆன்மீக ரீதியாக, பௌதீக ரீதியாக என்றால் நீ என்ன சொல்ல வருகிறாய்? வாலிபன்: என்ன சொல்ல வருகிறேன் என்றால், என் உடல் ஒரு குறிப்பிட்ட இடத்திலும் காலத்திலும் இருக்கிறது மற்றும் இவை அனைத்தும் (மங்கிய ஒலி) நான் ஓரிடத்தில் வேலை பார்த்தால், அப்போது நான் என் முதலாளிக்கு கீழ்ப்படிந்தவன் தான், ஆனால் என் உண்மையான உள்ளம், என் ஆன்மா, கீழ் நிலையில் இல்லை என்று நான்... நான் என் முதலாளிக்கு கீழ்ப்படிந்தவன் என்று நான் நினைக்கவில்லை. நான் நினைக்கிறேன், நாங்கள் (ஆன்மீக ரீதியாக) கிட்டத்தட்ட சமமானவர்கள் தான். ஆனால் தற்காலிகமாக பார்த்தால்... பிரபுபாதர்: ஆம், இந்த உணர்வு மிகவும் நல்ல உணர்வு தான், அதாவது உன்னுடைய முதலாளியிடம் கீழ்ப்படிந்து நீ அதிருப்தியை உணர்கிறாய். சரி தானே? வாலிபன்: இல்லை, அது சரியல்ல. பிரபுபாதர்: பிறகு? வாலிபன்: நான் குறிப்பாக... பிரபுபாதர்: யாருக்கும் அப்படித்தான். வாலிபன்: நான் அவ்வாறு நினைக்கவில்லை, அதாவது... இந்த குறிப்பிட்ட சம்பவத்தைப் பற்றி பேசும் போது, இந்த ஆசாமியின்மீது பொறாமை கொள்வேன் என்பது உண்மையாக இருக்கவேண்டிய அவசியமில்லை ஏனென்றால் அவர் எனக்கு மேலதிகாரி. ஆனால் உயிர்வாழிகள் என்ற முறையில் நாம் அனைவரும் ஏறத்தாழ சமமானவர்கள் தான் என்று நினைக்கிறேன். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், இது என்னுடைய கருத்து. நான் யாருக்கும் தலை வணங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை மேலும் யாரும் என்னை வணங்க வேண்டும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. பிரபுபாதர்: ஏன்? ஏன்? என் தலை வணங்குவதில்லை? ஏன்? வாலிபன்: ஏனென்றால் நான் அவருக்கு எந்த விதத்திலேயும் கடன்பட்டிருப்பதாக எனக்கு தோன்றவில்லை அல்லது அவரும் என்னிடம் எதுவும் கடன்படவில்லை. பிரபுபாதர்: ஆக அது தான் பிழை, நோய். நாம் தலை வணங்கும் நிர்ப்பந்தனையில் இருக்கிறோம், ஆனால், "எனக்கு தலை வணங்க விருப்பமில்லை," என்று நினைக்கிறோம். இது தான் அந்த நோய். வாலிபன்: அவரை வணங்குமாறு அவர் ஒன்றும் என்னை கட்டாயப் படுத்தவில்லை. பிரபுபாதர்: சரி. வாலிபன்: அவர் என்னை எதையும் செய்யக் கட்டாயப் படுத்துவதில்லை. நான் பாட்டுக்கு இருக்கிறேன், அவரும் தன் போக்கில் இருக்கிறார். பிரபுபாதர்: இல்லை. புரிந்துகொள்ள முயற்சி செய். இது மிகவும் அருமையான கேள்வி. "நான் தலை வணங்க விரும்பவில்லை," என்று நீ கூறுகிறாய், அல்லவா? வாலிபன்: அதுதான் உண்மை, ஆமாம். பிரபுபாதர்: சரி. ஏன் அப்படி? வாலிபன்: ஏனென்றால் நான் அவரைவிட தாழ்ந்தவன் என்று நான் நினைக்கவில்லை. பிரபுபாதர்: அது தான் நம் நோய். உன் நோயை நீயே கண்டுபிடித்துவிட்டாய். அதுதான் பௌதிகவாதிகளின் நோய். "நான் எஜமான் ஆக வேண்டும். நான் தலை வணங்க விரும்பவில்லை," என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள். எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், நீ மட்டுமல்ல. சும்மா முயற்சி செய், என்னை பேச விடு. இதுதான் அந்த நோய், பௌதிகவாதம் எனும் நோய். முதலில் புரிந்துகொள்ள முயற்சி செய். இது, உன் நோயோ அல்லது என் நோயோ அல்ல. எல்லோருடைய நோயும் இதுதான், அதாவது "நான் ஏன் தலை வணங்க வேண்டும்? நான் ஏன் கீழ்ப்படிய வேண்டும்?" ஆனால் இயற்கை என்னை கீழ்ப்படிய வைக்கிறது. யார் மரணத்தை சந்திக்க விரும்புவார்கள்? மக்கள் ஏன் மரணம் அடைகிறார்கள்? உன்னால் இதற்கு பதில் அளிக்க முடியுமா? வாலிபன்: மக்கள் ஏன் மரணம் அடைகிறார்களா? பிரபுபாதர்: ஆம். யாரும் மரணம் அடைய விரும்புவதில்லை. வாலிபன்: அது உடலின் இயற்கை... பிரபுபாதர்: புரிந்துக் கொள்ள முயற்சி செய். அப்படியென்றால் இயற்க்கை சக்தி. நீ இயற்க்கைக்கு கீழ்ப்படிந்தவன். பிறகு நீ சுதந்திரமானவன் என்று எப்படி சொல்லலாம்? வாலிபன்: எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்... பிரபுபாதர்: நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். அதுதான் என்னுடைய கருத்து. அதுதான் உன்னுடைய நோய். வாலிபன்: என்னது, தனியாகவா? பிரபுபாதர்: ஆம், தவறாக. வாலிபன்: தவறாகவா? பிரபுபாதர்: ஆம். நீ கீழ்ப்படிந்தவன் தான். நீ தலை வணங்கியே ஆக வேண்டும். மரணம் வரும் போது, "ஓ, நான் உனக்கு தலை வணங்கமாட்டேன்," என்று சொல்ல முடியாது. ஆகவே நீ கீழ்ப்படிந்தவன். வாலிபன்: நான் இறைவனுக்கு கீழ்ப்படிந்தவன் என்பதை நான் மறுக்கவில்லை. பிரபுபாதர்: இல்லை, இல்லை, அதுவல்ல... இறைவனைப் பற்றி நாம் பேசவில்லை. இப்பொழுது நாம் பொதுவாக பேசுகிறோம். வாலிபன்: கிருஷ்ணர்... எனக்கு... பிரபுபாதர்: இல்லை. கிருஷ்ணரைப் பற்றி பேச வேண்டாம். அது வேறு விஷயம். நீ இதை மட்டும் புரிந்துகொள்ள முயற்சி செய், அதாவது நீ மரணமடைய விரும்பவில்லை, பிறகு ஏன் மரணத்திற்கு நீ தள்ளப்படுகிறாய்? வாலிபன்: நான் ஏன் மரணத்திற்கு தள்ளப்படுகிறேனா ? பிரபுபாதர்: ஆம். ஏனென்றால் நீ அதற்கு கீழ்ப்படிந்தவன். வாலிபன்: சரி தான். பிரபுபாதர்: ஆம். ஆக நீ கீழ்ப்படிந்தவன் என்ற உன் நிலையை, இந்த வாஸ்தவத்தை நீ புரிந்துகொள். "நான் சுதந்திரமானவன். நான் கீழ்ப்படிந்தவன் அல்ல," என்று உன்னால் சொல்லவே முடியாது. "நான் கீழ்ப்படிந்து இருக்க விரும்பவில்லை, எனக்கு தலை வணங்க விருப்பம் இல்லை," என்று நீ நினைத்தால் அது தான் உன் பிழை, நோய். வாலிபன்: நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள்... என்ன... பிரபுபாதர்: இல்லை, முதலில் உன் நோயை புரிந்துகொள்ள முயற்சி செய். பிறகு நாம் அதற்கான மருந்தை, தீர்வை தேடுவோம். வாலிபன்: நான் தவறாக நினைக்கிறேன் சரி, ஆனால் யாரை நான்... குறிப்பாக யாரிடம் நான் தலை வணங்குவது, அதாவது... பிரபுபாதர்: நீ எல்லோருக்கும் தலை வணங்குகிறாய். நீ மரணத்திற்கு தலை வணங்குகிறாய், நோய்க்குத் தலை வணங்குகிறாய், முதுமைக்கு தலை வணங்குகிறாய். இப்படி பல விஷயங்களுக்கு நீ தலை வணங்குகிறாய். நீ அத்தகைய நிபந்தனைக்கு ஆளாகிறாய். அப்படி இருந்தும், "நான் தலை வணங்க முடியாது. எனக்கு விருப்பமில்லை," என்று நீ நினைக்கிறாய். "எனக்கு விருப்பமில்லை," என்று நீ சொல்கிறாய், அப்படி என்றால் நீ கட்டாயப்படுத்தப் பட்டிருக்கிறாய் என்று தான் அர்த்தம், கீழ்ப்படிந்தவன் என்று தான் அர்த்தம். நீ தலை வணங்கியே ஆகவேண்டும். உன் நிலைமையை எதற்காக மறக்கிறாய்? அதுதான் நம்முடைய நோய். ஆக அடுத்து நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், "நான் தலை வணங்க கட்டாயப்படுத்தப் படுகிறேன்." இப்போது நாம் கண்டுபிடிக்க வேண்டியது என்னவென்றால், "எவ்விடத்தில், தலை வணங்கியப் பிறகும், என்னால் சந்தோஷமாக இருக்க முடியும்?" அதுதான் கிருஷ்ணர். நீ தலை வணங்குவது நிற்காது, ஏனென்றால் நம் படைப்பே அதற்காகத் தான். ஆனால் நீ கிருஷ்ணருக்கும் அவருடைய பிரதிநிதிக்கும் தலை வணங்கினால், நீ மகிழ்ச்சியை அடைவாய். இதை சோதித்துப் பார். நீ தலை வணங்கியே ஆகவேண்டும். நீ கிருஷ்ணருக்கும் அவருடைய பிரதிநிதிக்கும் தலை வணங்க மறுத்தால், பிறகு நீ ஏதோ ஒன்றுக்கு, மாயாவுக்கு தலை வணங்க கட்டாயப்படுத்தப்படுவாய். அதுதான் உன் நிலைமை. ஒரு கணம் கூட உன்னால் சுதந்திரமாக இருக்க முடியாது. ஆனால் நீ நினைக்கிறாய்... உதாரணமாக, ஒரு குழந்தை தன் பெற்றோர்களுக்கு இருபத்திநான்கு மணி நேரமும் தலை வணங்குகிறது. அவன் சந்தோஷமாக இருக்கிறான். அவன் சந்தோஷமாக இருக்கிறான். தாய் கூறுகிறார்கள், "என் அன்பு குழந்தையே, தயவுசெய்து கீழே என்னிடம் வந்து உட்கார்." "சரி." அவன் சந்தோஷமாக இருக்கிறான். அதுதான் இயல்பு. எங்கே தலை வணங்குவது என்பதை நீ தேடி கண்டுபிடிக்க வேண்டியது தான், அவ்வளவு தான். அதுதான் கிருஷ்ணர். நீ தலை வணங்குவதை நிறுத்த முடியாது, ஆனால் எங்கே தலை வணங்க வேண்டும் என்பதை நீ பார்க்க வேண்டும். அவ்வளவு தான். "நான் யாருக்கும் தலை வணங்கப் போவதில்லை. நான் சுதந்திரமானவன்," என்று நீ செயற்கையாக நினைத்தால், பிறகு நீ துன்பப்படுவாய். நீ தலை வணங்க வேண்டிய சரியான இடத்தை கண்டுபிடி. அவ்வளவு தான். சரி. ஜெபியுங்கள்