TA/Prabhupada 0672 – நீங்கள் கிருஷ்ணப் பிரக்ஞையில் லயிக்கும்போது, உமது பூரணத்துவம் உறுதியாகிறது

Revision as of 10:47, 24 June 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0672 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 6.16-24 -- Los Angeles, February 17, 1969

பக்தர்: இதுவே ஜடத்தொடர்பினால் எழும் எல்லாத் துன்பங்களிலிருந்தும் பெறப்படும் உண்மையான விடுதலை. இந்த யோகம் உறுதியுடனும் தளராத இதயத்துடனும் பயிற்சி செய்யப்பட வேண்டும்.

பதம் 24 : யோகப்பயிற்சியில் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் பாதையிலுருந்து பிறழாமலும் ஈடுபட வேண்டும். மனக் கற்பனையால் பிறந்த எல்லா ஜட ஆசைகளையும் துறந்து, எல்லா பக்கங்களிருந்தும் அனைத்துப் புலன்களையும் மனதால் அடக்க வேண்டும்.(ப.கீ 6.24) பொருளுரை: யோகப் பயிற்சியாளன் மனவுறுதியுடனும் பாதையிலிருந்து பிறழாமல் பொறுமையுடனும் யோகத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

பிரபுபாதா: இந்த உறுதியை பாலுறவு வாழ்வில் ஈடுபடாத ஒருவனால், உண்மையில் பயிற்சி செய்யவோ, அடையவோ முடியும். அவனது உறுதி திடமானது. எனவே தான் "விலக்கப்பட்ட பாலுறவு வாழ்கை " என்று ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது. இதுவே உறுதி. அல்லது "கட்டுப்படுத்தப்பட்ட பாலுறவு வாழ்கை நீங்கள் பாலுறவில் ஈடுபடுவீர்களானால், இந்த உறுதி வராது. நிலையில்லாத உறுதி, சரிதானே? ஏனவே பாலுறவு விலக்கப்படவோ அல்லது கட்டுபடுத்தப் படவோ வேண்டும். முடிந்தால், முற்றிலுமாக விலக்குங்கள், இல்லையென்றால், கட்டுப்படுத்துங்க்ள் அதன் பிறகு, நீங்கள் உறுதியை அடைவீர்கள். ஏனெனில், இந்த உறுதி, உடல் சம்மந்தப்பட்ட விஷயமே. எனவே இந்த உறுதியை அடைவதற்கான வழி இதுதான்.

பக்தர்: இறுதியில் அடையப்படும் வெற்றியில் நம்பிக்கைகொண்டு, மிக்க பொறுமையுடன், வெற்றியடைவதில் ஏற்படும் தாமதத்தினால் தளர்ச்சியடையாது, இவ்வழியில் முன்னேற வேண்டும்.

பிரபுபாதா: பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் தொடர்வதே உறுதி எனப்படும். எதிர்பார்த்த பலன் எனக்கு கிடைக்கவில்லை. " ஒ, என்ன க்ருஷ்ண உணர்வு, இதை விட்டு விடலாம்" இல்லை உறுதி. இது உண்மைதான். ஏனென்றால், இது கட்டாயம் நடக்கும் என்று க்ருஷ்ணர் கூறுகிறார். ஒரு நல்ல உதாரணம்: ஒரு பெண்னுக்கு திருமணமாகிறது . அவளுக்கு குழந்தைபெற்றுக் கொள்ள ஆசை. எனவே அவள், " எனக்கு இப்போது திருமணமாகி விட்டது. எனவே நான் இப்போதே குழந்தைப் பெற்றுக் கொள்வேன்", என்று நினைத்தால், அது எப்படி சாத்தியம்? பொறுமை வேண்டும். நீ ஒரு நல்ல மனைவியாகி , உன் கணவனுக்கு சேவை செய்து, உங்கள் அன்பை வளர்க்க வேண்டும் மேலும் நீங்கள் கணவன் மனைவியாக இருப்பதால், உங்களுக்கு குழந்தைகள் பிறப்பது உறுதி. ஆனால் அவசரப்படக் கூடாது. அதைப்போலவே, நீங்கள் க்ருஷ்ண உணர்வில் இருப்பதனால், நீங்கள் பக்குகமடைவதும் உறுதியே. ஆனால், உங்களுக்கு, பொறுமையும் உறுதியும் வேண்டும்., அதாவது, " நான் அவசரப்படாமல், நிச்சயமாக செயல் பட வேண்டும். " அவசரப்படுவதற்கு உறுதியற்ற தன்மையே காரணம். மேலும் உறுதியற்றதன்மை எப்படி வந்தது? கட்டுப்பாடற்ற பாலுறவினால் ஏற்பட்டது. இவையெல்லாம் அதன் விளைவே.

பக்தர்: "ஊறுதியான பயிற்சியாளனுக்கு வெற்றி நிச்சயம். பக்தி யோகத்தைப் பற்றி ரூப கோஸ்வாமி கூறுகிறார்: இதய பூர்வமான உற்சாகம், பொறுமை, உறுதி, பக்தர்களின் சங்கம், விதிக்கப்பட்ட கடமைகளை ஆற்றுதல், ஸத்வ குணச் செயல்களில் இடையறாது ஈடுபடுதல் இவற்றின் மூலம் பக்தி யோக முறையை வெற்றிகரமாக

பிரபுபாதா: பின்பற்றலாம்