TA/Prabhupada 0803 - என் இறைவனே, உனது சேவையில் என்னை ஈடுபடுத்து என்று இறைஞ்சுவதே வாழ்வின் பூரணத்துவம்

Revision as of 13:29, 3 August 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0803 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 1.7.19 -- Vrndavana, September 16, 1976

ஹரே கிருஷ்ண என்றால் பரம புருஷ பகவானும் அவருடைய ஆன்மீக சக்தியும் ஆகும். எனவே நாம் அவரை ஹரே, " ஓ சக்தியே, பகவானுடைய ஆன்மீக சக்தியே" என்று அழைக்கிறோம், மேலும் கிருஷ்ணா, "ஓ, பரம புருஷ பகவானே" . ஹரே ராமா- அதே தான். பரம் பிரம்மன். ராமா என்றால் பரம் பிரம்மன், கிருஷ்ண என்றால் பரம் பிரம்மன், மேலும்.... ஆக, "ஹே கிருஷ்ணா, ஹே ராதா, ஹே ராமா" என்று அழைப்பதன் பொருள் என்ன... ஏன்? ஏதாவது ஒரு..... நீங்கள் எதற்காக கேட்கிறீர்கள்? அதாவது "என்னை உங்களது சேவையில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்" இதுதான் சைதன்ய மஹாபிரபுவினால் கற்றுத் தரப் பட்டிருக்கிறது:

அயி நந்த3-தனுஜ கிங்கரம்'
பதிதம்' மாம்' விஷமே ப4வாம்பு3தௌ4
க்ரு'பயா தவ பாத3-பங்கஜ-
ஸ்தி2த-தூ4லீ-ஸத்3ரு'ஷ2ம்' விசிந்தய
(சை.சரி அந்த்ய 02.32)

இதுதான் நமது பிரார்த்தனை. "ஓ கிருஷ்ணா, ஓ ராமா, எனக்கு சில செல்வத்தை கொடுங்கள், எனக்கு சில பெண்ணை க் கொடுங்கள்" என்பது நம் பிரார்த்தனை அல்ல. இல்லை. இது நம் பிரார்த்தனை அல்ல. ஆரம்பநிலையில் அவர்கள் அப்படி பிரார்த்தனை செய்யலாம் என்பது உண்மைதான். ஆனால், நான் கூறவருவது என்னவென்றால், சுத்த பக்தி, தூய பக்தி அதுவல்ல.

தூய பக்தி என்றால் பகவானிடம், சில சேவைக்காக யாசித்து பிரார்த்தனை செய்வது: "எனதருமை பகவானே, தயவு செய்து என்னை உங்கள் சேவையில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்" இதுதான் வாழ்க்கையின் பக்குவம், ஒருவர் அன்பினால் பகவானது சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது. நீங்கள் மிகப்பெரும் சாதுவாகி, தனிமையான இடத்தில் வாழ்ந்து, மிகப்பெரும் நபர் ஆகிவிட்டதாக கர்வம் கொள்ளலாம், மேலும் மக்கள் "அவரை பார்க்கவே முடிவதில்லை, அவர் ஜெபத்தில் ஈடுபட்டிருக்கிறார்" என்று பார்க்க வரலாம். என்னுடைய குரு மகாராஜா, இதனை கண்டனம் செய்கிறார். அவர் கூறுகிறார், மன துமி கிஸேர வைஷ்ணவ. "எனதன்பு மனமே, உன்னுடைய மனக் கற்பனையால் நீ மிகப்பெரிய வைஷ்ணவன் ஆகிவிட்டதாக நினைத்துக் கொள்கிறாய் நீ எதையும் செய்யாமல், தனிமையான இடத்தில் அமர்ந்து, ஜெபம் செய்வதாக ஹரிதாஸ் தாகூரை நகல் செய்கிறாய். எனவே நீ ஒரு முட்டாள்". மன துமி கிஸேர வைஷ்ணவ. ஏன்? நிர்ஜனேர க4ரே, ப்ரதிஷ்டா2ர தரே: மிகப்பெரும் ஜபம் செய்பவர் எனும் மலிவான புகழைப் பெறுவதற்காகத் தான். ஏனெனில், ஒருவர் உண்மையில் ஜெபம் செய்தால், ஏன் அவர் பெண் மீதும் பீடி மீதும் பற்று கொள்ள வேண்டும்? அவர் உண்மையில் ஹரிதாஸ் தாகூரின் நிலையில் இருந்தால், ஏன் அவர் ஜட விஷயங்களின் மீது பற்று கொள்ள வேண்டும்? எனவே இது போலி நாடகம் தான். இது சாதாரண மனிதனுக்கு சாத்தியமல்ல.

எனவே சாதாரண மனிதன் எப்போதும் உடலளவிலான சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும். அது உடல்தளத்தில் உள்ளது மட்டுமல்ல உன்னதமானது கூட. எப்போதும் கிருஷ்ண உணர்வின் ஏதாவது ஒரு வேலையில் இயங்கிக் கொண்டே இருப்பது. இதுதான் தேவைப்படுகிறது. "ஓ, நான் மிகப்பெரும் பண்டிதன், மேலும் நான் இப்போது மிகப் பெரும் வைஷ்ணவன் ஆவது எப்படி என்பதையும் கற்றுக் கொண்டேன். நான் 64 மாலைகள் ஜபம் செய்து விட்டு, பிறகு எங்காவது என் மனைவியை நினைத்து, கோவிந்தாஜியிடம் விடைபெற்று விருந்தாவனத்தை விட்டு வெளியேறலாம்." என்பதல்ல. இந்த அயோக்கியத்தனம் பின்பற்றப்பட கூடாது. கோவிந்தாஜி இத்தகைய அயோக்கியர்களை விருந்தாவனத்தை விட்டு விரட்டி விடுவார். எனவே விருந்தாவனம், விருந்தாவனத்தில் வாழும் ஒருவர், விருந்தாவன சந்திரரின் புகழை உலகம் முழுக்க எப்படி பரப்புவது என்பது குறித்து கவலை கொள்ள வேண்டும். இதுதான் தேவைப்படுகிறது. "விருந்தாவன சந்திரா என்னுடைய தனிப்பட்ட சொத்து. நான் இங்கேயே அமர்ந்து சுவைத்துக் கொண்டு இருப்பேன்" என்பதல்ல இல்லை. இது தேவைப்படவில்லை. இது தேவைப்படவில்லை. இது என்னுடைய ஒரு மகாராஜாவினால் கண்டனம் செய்யப்பட்டுள்ளது