TA/Prabhupada 0899 - கடவுள் என்றால் எந்தப் போட்டியும் இல்லாதவர் : ஒருவர்தான். கடவுள் ஒருவர்தான். அவரை விட உய

Revision as of 06:25, 6 August 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Tamil Pages - 207 Live Videos Category:Prabhupada 0899 - in all Languages Category:TA...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


730415 - Lecture SB 01.08.23 - Los Angeles

மொழிபெயர்ப்பு : " ஓ, புலன்களின் நாயகனான ரிஷிகேஸனே, தேவ தேவனே, துஷ்டன் கம்சனால் சிறை வைக்கப்பட்டு நீண்ட நாட்கள் சொல்லொணா துயரத்தில் ஆழ்ந்த உமது அன்னை தேவகியை விடுதலை செய்தீர். என்னையும், எனது குழந்தைகளையும் தொடர்ந்துவந்த ஆபத்துகளிலிருந்து காத்தருளினீர்.

பிரபுபாதா : இதுதான் பக்தர்களுடையே நிலை. கிருஷ்ணரின் தாயாராக இருக்கும் தேவகி..... ஒரு சாதாரண பெண்மணி அல்ல. யாரால் பரமபுருஷ பகவானின் தாயாக முடியும்? மிக முன்னேறிய பக்தர் என்பதால் தான், அவருடைய மகனாக இருப்பதற்கு கிருஷ்ணர் ஒப்புக் கொண்டுள்ளார். அவர்களது முந்தைய வாழ்க்கையில், கணவனும், மனைவியும் கடுமையான தவங்களை மேற்கொண்டனர், மேலும் கிருஷ்ணர் அவர்கள் முன் தோன்றி, அவர்களுக்கு வரம் அளிக்க விரும்பியபோது, அவர்கள் கடவுளைப் போன்றதொரு மகனை வேண்டினார்கள். கடவுளுக்கு நிகரான இன்னொரு நபர் எங்கே இருக்க முடியும்? அது சாத்தியமற்றது. கடவுள் என்றால் அவருக்குச் சமமாக, அல்லது அவரை விட உயர்ந்தவராக யாரும் இல்லாதவர் என்று பொருள் அஸமோர்த்4வ. அவர்தான் கடவுள். கடவுள், அதில் எந்தப் போட்டியும் இருக்க முடியாது, அதாவது "நீயும் கடவுள், நானும் கடவுள், அவனும் கடவுள், இவனும் கடவுள்." இல்லை இவர்களெல்லாம் நாய்கள். இவர்கள் கடவுள் அல்ல. கடவுள் என்றால் போட்டியே இல்லாதவர். ஒருவர். கடவுள் ஒருவர்தான். உயர்ந்தவர் எவரும் இல்லை....... அவரை விட உயர்ந்தவர் எவரும் இல்லை. அவருக்குச் சமமான வரும் இல்லை. அனைவரும் அவருக்கு கீழ் பட்டவர்களே. ஏகலே ஈஷ்2வர க்ரு'ஷ்ண ஆர ஸப3 ப்4ரு'த்ய (சை.சரி ஆதி 5.142). ஒரே எஜமானர் கிருஷ்ணர் தான், கடவுள்தான் மேலும் அனைவரும் சேவகர்கள். யாராக இருந்தாலும். பிரம்மாவாகவோ, விஷ்ணுவாகவோ அல்லது சிவனாகவோ அல்லது பெரும்பெரும் உபதெய்வங்களாக இருந்தால்கூட. மேலும் மற்றவர்களைப் பற்றிக் கூற என்ன இருக்கிறது?

ஷி2வ-விரிஞ்சி-நுதம் (ஸ்ரீமத் பா 11.5.33). சாஸ்திரத்தில் அவர், சிவபெருமானாலும், பிரம்ம தேவராலும் தலை வணங்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் மிக உயர்ந்த தேவர்கள். அவர்கள் தேவர்கள். மனிதர்களுக்கும் மேற்பட்ட நிலையில் தேவர்கள் உள்ளனர். நாம் மனிதர்களாக, கீழ்நிலை உயிர் வாழிகள், கீழ்நிலை விலங்குகள், இவற்றிற்கு மேல் உள்ளோம், இதைப்போலவே நமக்கு மேல் தேவர்கள் உள்ளனர். அதிலும் முக்கியமான தேவர்களாக பிரம்ம தேவரும் சிவபெருமானும் உள்ளனர். பிரம்மதேவர் இந்தப் பிரபஞ்சத்தைப் படைப்பவர், மேலும் சிவபெருமான் இந்த பிரபஞ்சத்தை அழிப்பவர். மேலும் பகவான் விஷ்ணு காப்பவர். பகவான் விஷ்ணு, கிருஷ்ணர் தான். எனவே உலகத்தின் பராமரிப்பிற்காக மூன்று குணங்கள் உள்ளன, சத்வகுணம் ரஜோகுணம் தமோகுணம். ஆக, ஒவ்வொருவரும் ஒரு துறையின் பொறுப்பு ஏற்கின்றனர். பகவான் விஷ்ணு சத்வ குணத்தின் துறையை ஏற்கிறார். பிரம்மதேவர் ரஜோ குணத்தின் துறையையும், சிவபெருமான் தமோ குணத்தின் துறையையும் ஏற்றுள்ளனர். அவர்கள் அந்த குணங்களின் தாக்கத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல. ஒரு சிறையின் அதிகாரியைப் போல. அவர் சிறைக் கைதி அல்ல, அவர் கட்டுப்படுத்தும் அதிகாரி. அதைப்போலவே சிவபெருமானும், விஷ்ணுவும், பிரம்ம தேவரும் ஒவ்வொரு துறையை கட்டுப் படுத்தினாலும், தாங்கள் கட்டுப்படுத்தும் துறையின் கீழ் அவர்கள் வருவதில்லை. அந்தத் தவறை நாம் செய்யாமலிருக்கலாம்.

எனவே ரிஷிகேஷர். கிருஷ்ணர் உன்னத அதிகாரியாவார். ஹ்ரிஷிக. ஹ்ரிஷிக என்றால் புலன்கள். ஆக, நாம் புலன்களை அனுபவித்தாலும், இறுதியில் கிருஷ்ணர் தான் கட்டுப்படுத்துபவர். இது என்னுடைய கை என்று வைத்துக்கொள்வோம். இந்தக் கை என்னுடையது என்று நான் உரிமை கோருகிறேன். " நான் ஒரு மிக நல்ல அடியை உன் மீது....." நான் மிகவும் தற்பெருமையுடன் உள்ளேன். ஆனால் கட்டுப்படுத்துபவர் நான் அல்ல. கட்டுப்படுத்துபவர் கிருஷ்ணரே. அவர் உங்கள் கரத்தின் செயல்படும் சக்தியை விலக்கி விட்டால், உங்கள் கை முடங்கிப் போகும். " இது என்னுடைய கை. நான் இதனை உபயோகப்படுத்துவேன் " என்று நீங்கள் உரிமை கோரினாலும், முடக்குவாதம் வந்தால், உங்களால் எதையும் செய்ய முடியாது. எனவே, கிருஷ்ணரது கருணையால் எனக்கு இந்தக் கை கிடைத்திருந்தாலும், நான் இதனை கட்டுப்படுத்துபவர் கிடையாது. இதுவே கிருஷ்ண உணர்வு. எனவே எந்த ஒரு புத்தியுள்ள மனிதனும், இறுதியில் இந்தக் கரம் கிருஷ்ணரால் கட்டுப்படுத்தப்படுகிறது என்றால் இது கிருஷ்ணருக்காகத்தான் உபயோகப்படுத்த வேண்டும் என்று நினைப்பான். இதுவே புத்திசாலித்தனமான புரிதல்.