TA/Prabhupada 0901 - என்னிடம் பொறாமை இல்லை என்றால், நான் ஆன்மீக உலகத்தில் இருப்பதாக அர்த்தம். யார் வேண்டுமா
730415 - Lecture SB 01.08.23 - Los Angeles
கொள்ளலாம். இந்த நொடியில் நமது புலன்கள் களங்கம் அடைந்துள்ளன. "நான் ஒரு அமெரிக்கன், எனவே என்னுடைய புலன்கள் என் நாட்டினுடைய சேவைக்காக, என் சமூகத்தின் சேவைக்காக , பயன்படுத்தப்பட வேண்டும்" என்று நான் நினைக்கிறேன். பெரும் பெரும் தலைவர்களும், பல பெரிய விஷயங்கள். உண்மை கருத்து என்னவென்றால் "நான் ஒரு அமெரிக்கன், எனவே என்னுடைய புலன்களும் அமெரிக்க புலன்கள். எனவே அவை அமெரிக்காவிற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும்." இதைப்போலவே இந்தியர்களும் நினைக்கிறார்கள், மற்றவர்களும் நினைக்கிறார்கள். ஆனால் யாருமே இந்தப் புலன்கள் கிருஷ்ணருக்கு சொந்தமானவை என்பதை அறிவதில்லை. இதுதான் அறியாமை. புத்தியற்ற தன்மை. இப்போதைக்கு இந்தப் புலன்கள் எல்லாம் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளதாக..,.. அமெரிக்க புலன்கள், இந்திய புலன்கள், ஆப்பிரிக்கப் புலன்களாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இல்லை. இதுதான் மாயை என்று அழைக்கப்படுகிறது. இது மறைக்கப்பட்டுள்ளது. எனவேதான் பக்தி என்றால் ஸர்வோபாதி4-வினிர்முக்தம் (சை.சரி மத்ய 19.170). உங்களுடைய புலன்கள், இந்த அடையாளங்களிலிருந்தெல்லாம் களங்கப்படாமல் இருந்தால், அதுவே பக்தியின் தொடக்கம். "நான் ஒரு அமெரிக்கன். நான் ஏன் கிருஷ்ண உணர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். அது ஒரு ஹிந்து கடவுள்." என்று நினைத்தால் அதுதான் முட்டாள்தனம். "நான் ஒரு முகமதியன்," "நான் ஒரு கிறிஸ்தவன்"என்று நான் நினைத்தால், அதன் பிறகு முடிந்துவிட்டது. ஆனால்"நான் ஒரு ஆன்மீக ஆத்மா. கிருஷ்ணர் உன்னதமான பரமாத்மா ஆவார்" என்று நம் புலன்களை தூய்மைப்படுத்திக் கொண்டால், "நான் கிருஷ்ணருடைய அங்க துணுக்கு; எனவே அவருக்கு சேவை செய்வது என்னுடைய கடமை" பிறகு நீங்கள் உடனடியாக விடுதலை அடைவீர்கள். உடனடியாகவே. அதன்பிறகு நீங்கள் அமெரிக்கனோ, இந்தியனோ அல்லது ஆப்பிரிக்கனோ அல்லது இதுவோ அல்லது அதுவோ அல்ல. நீங்கள் கிருஷ்ண உணர்வு உடையவர். இதுவே தேவைப்படுகிறது.
எனவே குந்திதேவி கூறுகிறார், "ஹ்ருஷிகேஷரே, என் இனிய கிருஷ்ணரே, நீங்களே என்னுடைய புலன்களின் அதிபதி, மேலும் புலனுகர்ச்சியின் தேவைக்காகத்தான், நாங்கள் இந்த பல்வேறு விதமான பௌதிக வாழ்க்கையில் விழுந்து இருக்கிறோம்." எனவேதான் நாம் துன்பப்படுகிறோம், எந்த அளவிற்கென்றால், ஒருவர் கிருஷ்ணருக்கு தாயார் ஆனால் கூட, இது ஜட உலகம் என்னும் காரணத்தினால், அவளும் துன்பத்திற்கு உட்படுத்த படுகிறாள். பிறரை பற்றி பேச என்ன இருக்கிறது? தேவகி கிருஷ்ணருக்கு தாய் ஆகும் அளவிற்கு மிக முன்னேறியவர். இருந்தால்கூட அவள், சிரமங்களுக்கு உட்படுத்தப்பட்டார் மேலும் யாரால் இந்த துன்பங்கள்? அவளுடைய சகோதரன், கம்சனால். எனவே இந்த உலகம் இப்படிப்பட்டதாக இருக்கிறது. புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நீங்கள் கிருஷ்ணரின் தாய் ஆனால் கூட, உங்களது மிக நெருங்கிய உறவினரான சகோதரன் கூட. இந்த உலகம் எந்தளவிற்கு பொறாமை கொண்டதென்றால், ஒருவரது சுய நலம் பாதிக்கப்பட்டால், உங்களுக்கு தொந்தரவு அளிக்க அனைவரும் தயாராக இருப்பார்கள். இதுதான் இந்த உலகம். அனைவரும். சகோதரனே ஆனால் கூட, தந்தையே ஆனால் கூட. பிறரைப் பற்றி கூற என்ன இருக்கிறது? க2லேன. க2ல என்றால் பொறாமை. இந்த ஜட உலகம் பொறாமை கொண்டுள்ளது. நான் உங்கள் மீது பொறாமை கொண்டு இருக்கிறேன்; நீங்கள் என்மீது பொறாமை கொண்டிருக்கிறீர்கள். இப்படி தான் நாம் இருக்கிறோம். இப்படி தான் நாம் இருக்கிறோம்.
எனவே இந்த கிருஷ்ண உணர்வு இயக்கம் , எந்த பொறாமையுமே இல்லாத நபர்களுக்கானது, பொறாமையே இல்லாதவர். மிகப் பக்குவமான நபர். த4ர்ம: ப்ரோஜ்ஜி2த-கைதவோ 'த்ர பரமோ நிர்மத்ஸராணாம்' ஸதாம்' வாஸ்தவம்' வஸ்து வேத்3யம் அத்ர (ஸ்ரீமத் பா 1.1.2). யார் ஒருவர் பொறாமை கொண்டிருக்கிறாரோ, அவர் இந்த பௌதிக உலகத்தில் உள்ளார். மேலும் பொறாமை அற்றவர்கள், ஆன்மீக உலகத்தில் உள்ளனர். எளிமையான விஷயம். நீங்களே உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள், "நான் பொறாமையுடன் இருக்கிறேனா, நான் என்னுடைய, சகாக்கள் மீது, நண்பர்கள் மீது, மற்றவர்கள் மீது, பொறாமைப் படுகிறேனா? ஆமென்றால் நான் ஜட உலகில் உள்ளேன். அப்படியில்லையென்றால், பிறகு நான் ஆன்மீக உலகில் உள்ளேன். யார் வேண்டுமானாலும் இதனை பரிசோதிக்கலாம். நான் ஆன்மீகத்தில் முன்னேறியவனாக இருக்கிறேனா இல்லையா என்பதைப்பற்றி கேள்வியே இல்லை. நீங்களே உங்களை பரிசோதித்து கொள்ளலாம். ப4க்தி: பரேஷா2னுப4வோ விரக்திர் அன்யத்ர ஸ்யாத் (ஸ்ரீமத். பா 11.2.42). நீங்கள் சாப்பிடுவதைப் போல, நீங்கள் திருப்தி அடைந்து இருக்கிறீர்களா, பசியாறி விட்டதா என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம். மற்றவர் யாரும் உங்களுக்கு அதைச் சொல்லத் தேவையில்லை. அதைப்போலவே, நீங்களே உங்களை பொறாமை கொண்டிருக்கிறீர்களா என்று பரிசோதித்து, பொறாமை கொண்டிருந்தால், நீங்கள் இந்த ஜட உலகில் இருக்கிறீர்கள் என்று பொருள். மேலும் நீங்கள் பொறாமை அற்றவராக இருந்தால், பிறகு நீங்கள் ஆன்மீக உலகத்தில் உள்ளீர்கள். நீங்கள் பொறாமையற்றவராக இருந்தால், நீங்கள், கிருஷ்ணருக்கு நன்றாக சேவை செய்யலாம் காரணம் நம்முடைய பொறாமை கிருஷ்ணரின் மீதிருந்து தான் தொடங்கியுள்ளது. மாயாவாதிகளைப் போல. "ஏன் கிருஷ்ணர் கடவுளாக இருக்க வேண்டும்?" நான், நானும் கடவுள் தான், நானும் தான்"