TA/Prabhupada 0969 - நீ உன் நாக்கை பகவத் சேவையில் ஈடுபடுத்தினால், அவர் தன்னை உன்னிடம் வெளிப்படுத்திக் கொள்
730400 - Lecture BG 02.13 - New York
இந்தியாவில், உடல் இன்பம் என்பது நாவில் தான் தொடங்குகிறது. நாவின் சுகம்தான் எல்லா இடங்களிலும். இங்கும் கூட. நாவின் சுகம்தான். எனவே நாம் நம் புலன்களை கட்டுப்படுத்த வேண்டுமானால்... தன் முந்தைய ஆசாரியர்களின் பாதையை பின்பற்றி பக்தி வினோத தாக்கூர் கூறுவது "நாவை கட்டுப்படுத்து." என்பதுதான். நாவை அடக்கு. பகவத் கீதையிலும் இது சொல்லப்பட்டிருக்கிறது, அத: ஸ்ரீ-க்ருஷ்ண-நாமாதி ந பவேத் க்ராஹ்யம் இந்த்ரியை: (பிரச. 1.2.234). மழுங்கிய இந்தப் புலன்களை கொண்டு நாம் கிருஷ்ணரை புரிந்து கொள்ள முடியாது. அது சாத்தியமில்லை. குறைகள் உடைய இந்த புலன்களை கொண்டு குறைவற்ற ஞானத்தை பெற முடியாது, பௌதிகமோ ஆன்மீகமோ, அது சாத்தியமில்லை. அதஹ. இந்த பௌதிக உலகத்தைப் பற்றி முழுமையாக அறிய முடியாவிட்டால். சந்திர மண்டலத்தை நமக்கு மிகவும் அருகில் உள்ள மண்டலத்தை படிக்கின்றனர் அதுபோல. சந்திரனைப் போல, கோடிக்கணக்கான வேறு மண்டலங்களும் இருக்கின்றன. அதைப் பற்றி அவர்களால் ஒன்றும் சொல்ல முடியாது. ஏனெனில் புலன்கள் அவ்வளவு சிறந்தவை அல்ல. எப்படிப் புரிந்து கொள்வது? நம்மால் பார்க்க முடிவது ஒரு மைல் தூரம் தான். கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பால் என்று சொல்லும் பொழுது நம் புலன்களைக் கொண்டு எப்படி முழுமையான ஞானத்தை அடைய முடியும்? இந்தப் புலன்களைக் கொண்டு பௌதிக ஞானத்தையே முழுமையாக பெற முடியாது. அப்படியிருக்க கடவுள் மற்றும் ஆன்மீக ஞானத்தைப் பற்றி என்ன சொல்வது? அது நம்முடைய கற்பனைக்கு அப்பாற்பட்டது. மானஸ-கோசர. எனவே சாஸ்திரம் கூறுகிறது: அத: ஸ்ரீ-க்ருஷ்ண-நாமாதி ந பவேத் க்ராஹ்யம் இந்த்ரியை: (பிரச. 1.2.234). மன அனுமானத்தின் மூலம் கடவுளை அறிந்து கொள்ள முயன்றால், அது தவளை தத்துவம், தவளை என்னும் முனைவர், அட்லாண்டிக் கடலின் ஆழத்தை, ஒரு கிணற்றுக்குள் இருந்து கொண்டு அளக்க முடியுமா? அதற்குப் பெயர்தான் தவளை தத்துவம். நம்மால் புரிந்து கொள்ள முடியாது. பின்னர் புரிந்து கொள்வது எப்படி சாத்தியம்? அடுத்த வரியில் ஸேவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ ஸ்வயம் ஏவ ஸ்புரத்ய்... நாவை பகவத் சேவையில் ஈடுபடுத்தினால், அவர் தானே தன்னை வெளிப்படுத்திக் கொள்வார். அவரே வெளிப்படுத்திக் கொள்வார்.
எனவே நாம் நாவைக் கட்டுப்படுத்த வேண்டும். நாவின் வேலை என்ன? நாக்கின் வேலை ருசி பார்த்து அதிர்வது. எனவே நாம் ஹரே கிருஷ்ணா என்று பகவத் சேவையில் அதிர வேண்டும். ஹரே கிருஷ்ணா என்றால் "கிருஷ்ணரே பகவானின் சக்தியே உன்னுடைய சேவையில் என்னை ஈடுபடுத்து!" ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே... இதுவே ஹரே கிருஷ்ணா மஹா மந்திரத்தின் அர்த்தம். அதற்கு வேறு எந்த அர்த்தமும் இல்லை. "பகவானே கிருஷ்ணா கிருஷ்ணரின் சக்தியே ராதா ராணி முக்கியமாக, தயைகூர்ந்து இருவரும் என்னை உங்கள் சேவையில் ஈடுபடுத்துங்கள்." ஹா ஹா ப்ரபு நந்த-ஸுத வ்ருஷபானு-ஸுதா-ஜுத: என்று நரோத்தம தாஸ தாக்கூர் சொல்வதைப்போல "எனது அன்பு கிருஷ்ணா, நீ நந்த மகாராஜாவின் மகன் என்று அனைவரும் அறிவர். உன்னுடைய நித்திய மணவாட்டி ராதாராணி, அவளும் மன்னர் விருஷ பானுவின் மகள் என்று அறியப்படுவாள். ஆக இருவரும் இங்கு இருக்கின்றீர்கள்." ஹா ஹா ப்ரபு நந்த-ஸுத வ்ருஷபானு-ஸுதா... கருணா கரஹ ஏஇ-பார. "இப்போது நான் உங்களிடம் வந்திருக்கிறேன் தயைகூர்ந்து இருவரும் என்னிடம் கருணையுடன் இருக்க வேண்டுகிறேன்." இதுதான் ஹரே கிருஷ்ணா: "என்னிடம் கருணையோடு இரு" நரோத்தம-தாஸ கய, நா டேலிஹ ராங்கா-பாய: "உன்னுடைய கமலப் பாதங்கள் கொண்டு என்னை தள்ளி விடாதே புறக்கணித்து விடாதே." கிருஷ்ணரால் எட்டி உதைக்கபடுவது மிகப்பெரிய பாக்கியம் என்று நான் நினைக்கிறேன். கிருஷ்ணர் தன்னுடைய தாமரைப் பாதங்கள் கொண்டு நம்மை உதைக்கிறார் என்றால் அது பெரும் பாக்கியம் இல்லையா? அதனை ஏற்று கொள்வது என்ற பேச்சுக்கு இடமேது. காளியன் தலையை கிருஷ்ணர் உதைத்தது போல. காளியனின் மனைவியர் வேண்டினர்: "அன்பான அய்யா, இந்தக் குற்றவாளியான காளியன் எப்படி, தங்கள் கால்களால் மிதிக்கப்படும் அளவுக்கு எப்படி இவ்வளவு பெரிய பாக்கியசாலி ஆனான் என்பது எனக்கு தெரியவில்லை? உன்னுடைய தாமரைப் பாதங்கள் தொடவேண்டும் என்று மாபெரும் யோகிகள் சாதுக்கள் போன்றோர் எத்தனை கோடி ஆண்டுகளாக தியானம் செய்து வருகின்றனர், ஆனால் இந்த காளியன் தன் முன் ஜென்மத்தில் என்ன செய்தான் என்று தெரியவில்லை அவனுடைய தலையை உதைத்து நீ நடனமாடினாய்?"