TA/Prabhupada 1050 - 'நீ இதைச் செய்து, எனக்கு பணம் தந்தால், நீ மகிழ்ச்சி அடைவாய்' இது குரு அல்ல

Revision as of 13:51, 16 August 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Tamil Pages - 207 Live Videos Category:Prabhupada 1050 - in all Languages Category:TA...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


750712 - Lecture SB 06.01.26-27 - Philadelphia

எனவே இதுதான் நிலை ஒரு குரு இல்லாமல், அவன் தன்னுடைய வாழ்க்கை முறையை உருவாக்கினான் என்றால், பிறகு அவன் ஒரு மூட:4, அயோக்கியன் எனவேதான் மூட:4 என்று கூறப்படுகிறது. அவன் நினைத்துக் கொண்டிருந்தான், "நான் அன்பான தந்தை, நான் என்னுடைய சிறு மகனை பராமரிக்கிறேன். எல்லா வகையிலும் - நான் அவனுக்கு உணவு ஊட்டுகிறேன், நான் அவனைத் தட்டிக் கொடுக்கிறேன், மேலும் பல விஷயங்களை நான்.... நான் மிகவும் உண்மையான, மிகவும் நேர்மையான தந்தை." ஆனால் சாஸ்திரம் கூறுகிறது, "அவன் ஒரு மூட:4 அயோக்கியன்." இங்கே பாருங்கள். போ4ஜயன் பாயயன் மூட:4. என்று கூறப்பட்டிருக்கிறது. ஏன் அவன் மூட:4? ந வேதா3க3தம் அந்தகம். அவனுக்குத் தெரியவில்லை, அவன் பார்க்கவில்லை, அதாவது "எனக்குப் பின்னால் மரணம் காத்துக்கொண்டிருக்கிறது. அது என்னை எடுத்துக்கொள்ள வந்திருக்கிறது." இப்போது, "உன் பெயரளவு மகன், சமூகம் மற்றும் குடும்பம் மற்றும் நாட்டின் மீது நீ கொண்ட பற்று எப்படி உன்னை காப்பாற்றும்? இதோ மரணம்." இதற்கு அவனால் பதில் அளிக்க முடியாது. அவனால் முடியாது..... மரணம் இருக்கிறதென்று அவனால் பதில் அளிக்க முடியாது. எனவே நாம் தயாராக வேண்டும். இதுதான் மனித வாழ்க்கை. நாம் எப்போதும் அறிந்து கொள்ள வேண்டும்: "மரணம் எனக்கு பின்னால் நின்று கொண்டிருக்கிறது. எந்த நொடியில் வேண்டுமானாலும் அது என் கழுத்தை பிடித்து அழைத்துச் செல்லலாம்." அதுதான் உண்மை. நீங்கள் நூறு வருடங்கள் உயிர் வாழ்வீர்கள் என்பதற்கு ஏதாவது உத்திரவாதம் இருக்கிறதா? இல்லை. சில நொடிகள் கழித்து கூட, நீங்கள் வீதிக்கு போனால், நீங்கள் உடனடியாக மரணத்தை சந்திக்கலாம். இதய செயலிழப்பு ஏற்படலாம். மோட்டார் விபத்துகள் நிகழலாம். ஏதாவது, ஏதாவது நடக்கலாம். எனவே வாழ்வது அற்புதமானது. சாவது அற்புதமானதல்ல. ஏனெனில், நீங்கள் இறப்பதற்கு தான் இருக்கிறீர்கள். நீங்கள் பிறந்த உடனேயே, உடனடியாக, நீங்கள் இறக்கத் தொடங்கி விடுகிறார்கள். உடனடியாகவே. "ஓ, குழந்தை எப்போது பிறந்தது? என்று நீங்கள் விசாரித்து, "ஒரு வாரம்." என்று கூறினால், அதாவது, அவன் ஒரு வாரம் இறந்து விட்டான் என்று அர்த்தம். நாம் அவன் ஒரு வாரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று எடுத்துக் கொள்கிறோம். ஆனால், உண்மையில் அவன் ஒரு வாரம் இறந்து விட்டான். அவன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான், இறக்கவில்லை என்பது அற்புதமானது. எனவே மரணம் அற்புதமானதல்ல, ஏனெனில் அது நிச்சயமானது. அது வந்தே தீரும் - ஒரு வாரத்துக்குப் பிறகோ அல்லது நூறு வருடங்களுக்கு பிறகோ. அது அற்புதமானதல்ல, நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வரை அது அற்புதமானது. எனவே வாழ்க்கைக்கான தீர்வுக்காக நாம் நேரத்தை உபயோகிக்க வேண்டும். அதாவது நாம் மீண்டும் மீண்டும் இறந்து, திரும்ப மற்றொரு உடலை ஏற்றுக் கொள்கிறோம். எனவே சரியான குருவிடம் வந்து சேராதவரைக்கும், அவர்கள் எவ்வாறு புரிந்து கொள்வார்கள்? எனவேதான் சாஸ்திரம் கூறுகிறது, தத்3-விஜ்ஞானார்த2ம்: "நீங்கள் உங்கள் வாழ்வின் உண்மையான பிரச்சனை என்ன என்று தெரிந்துகொள்ள விரும்பினால், மேலும் எவ்வாறு கிருஷ்ண உணர்வு அடைவது என்பது குறித்து நீங்கள் அறிவொளி பெற விரும்பினால், எவ்வாறு நித்தியமானவனாக ஆவது, எவ்வாறு இறைவனுடைய திருநாட்டிற்கு திரும்புவது என்று தெரிந்து கொள்ள விரும்பினால், பிறகு நீங்கள் ஒரு குருவை அணுக வேண்டும்." மேலும் யார் குரு? அதுவும் விளக்கப்பட்டுள்ளது, மிக எளிமையான விஷயம். குரு, "நீ இதைச் செய்து எனக்கு பணத்தை தந்தால், நீ மகிழ்ச்சியாக இருப்பாய்." போன்ற கருத்தை எப்போதும் உருவாக்க மாட்டார். அவர் குரு அல்ல. அது பணம் சம்பாதிப்பதற்கான மற்றொரு வழி முறை. எனவே இங்கு கூறப்பட்டுள்ளது: ஒவ்வொருவரும் அஜாமிளனைப் போல, முட்டாள்களின் சொர்க்கத்தில் வெறுமனே வசித்துக் கொண்டு, தங்களுடைய சொந்த கருத்துக்களை உருவாக்கிக் கொண்டு.... சிலர் "இது தான் என்னுடைய கடமை" என்று எடுத்துக் கொண்டுள்ளார்கள், சிலர் வேறு விஷயத்தை..... அவன் ஒரு முட்டாள். உங்கள் கடமை என்ன என்று நீங்கள் குருவிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தினமும் காலையில் பாடுகிறீர்கள்: கு3ரு-முக2-பத்3ம-வாக்ய, சித்தேதே கோரியா ஐக்ய, ஆர் நா கோரிஹோ மனே ஆஷா2. இதுதான் வாழ்க்கை. இதுதான் வாழ்க்கை. கு3ரு - முக2 - பத்3ம.... நீங்கள் அதிகாரப்பூர்வமான குருவை ஏற்றுக்கொண்டு, அவர் உங்களுக்கு என்ன ஆணையிடுகிறாரோ, அதனை செயல்படுத்துங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்க்கை வெற்றி அடையும். ஆர் நா கோரிஹோ மனே ஆஷா2. அயோக்கியனே, நீ வேறு எதற்கும் ஆசைப்படாதே.