TA/660808 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 06:24, 26 September 2021 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ண உணர்வில் உள்ளவர் நல்ல விளைவுகளின் மீதோ தீய விளைவுகளின் மீதோ பற்றுதல் கொள்ளக்கூடாது, ஏனென்றால் நல்ல விளைவை விரும்புவதும் ஒருவித பற்றுதல் ஆகும். நிச்சயமாக, தீய விளைவு மீது நமக்கு எந்தவித பற்றுதலும் இல்லை, ஆனால் சிலசமயம் நாம் புலம்புவதுண்டு. அதுதான் நமது பற்றுதல். எனவே ஒருவர் நல்ல மற்றும் தீய விளைவுகளைக் கடந்தாக வேண்டும். அதை எவ்வாறு செய்வது? அதைச் செய்ய முடியும். ஒரு பெரிய நிறுவனத்தின் கீழ் வேலை செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் ஒரு விற்பனையாளர். இப்போது ஒரு மில்லியன் டாலர் லாபத்தை பெற்றீர்கள் என்றாலும் அதன்மீது எந்தவித பற்றுதலும் இருக்காது, ஏனென்றால் 'அந்த லாபம் உரிமையாளருக்குச் சொந்தம்' என்று உங்களுக்குத் தெரியும். அதேபோல் நஷ்டம் ஏற்பட்டால்,

'எனக்கு இந்த நஷ்டத்தில் செய்வதற்கு ஒன்றுமில்லை. அதுவும் உரிமையாளருக்குத்தான்' என்று உங்களுக்குத் தெரியும். இதேபோல் கிருஷ்ணருக்காக செயலாற்றுவோமானால், செயல்களின் பலன்களின் மீதான பற்றுதலைக் கைவிட முடியும்."

660808 - சொற்பொழிவு BG 04.19-22 - நியூயார்க்