TA/661117 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:45, 1 October 2021 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணருக்கும் சாதாரண மனிதனுக்கும் அல்லது சாதாரண உயிர்வாழிக்குமுள்ள வித்தியாசம் என்னவெனில், நாம் ஓரிடத்தில் இருக்க முடியும், ஆனால் கிருஷ்ணர்...கோ₃லோக ஏவ நிவஸதி அகி₂லாத்ம-பூ₄த꞉ (BS 5.37). கோலோக பிருந்தாவனம் எனப்படும் தனது ஆன்மீக இராச்சியத்தில் தனது இருப்பிடத்தைக் கொண்டிருந்தாலும்... நான் புறப்பட்டு வந்த பிருந்தாவன நகரம் பௌம பிருந்தாவனம் எனப்படுகிறது. பௌம பிருந்தாவனம் என்றால் அதே பிருந்தாவனம் பூவுலகில் அவதரித்துள்ளது என்று அர்த்தம். தனது அந்தரங்க சக்தியால் கிருஷ்ணர் இந்த பூவுலகில் அவதரிப்பது போன்று அவரது தாமம், அல்லது இருப்பிடமான பிருந்தாவன தாமமும் அவதரித்துள்ளது. இன்னொரு வகையில் கூறப்போனால், கிருஷ்ணர் இந்த பூவுலகில் அவதரிக்கும் போது, அவர் தன்னை குறிப்பிட்ட நிலப்பகுதியில் வெளிப்படுத்துவார். எனவே, அந்த நிலம் மிகவும் புனிதமானது, பிருந்தாவனம் எனப்படுகிறது."
661117 - சொற்பொழிவு BG 08.15-20 - நியூயார்க்