TA/Prabhupada 0177 - கிருஷ்ண உணர்வு என்பது நித்தியமானது

Revision as of 14:30, 4 July 2016 by SenthilKumar (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0177 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on SB 1.15.28 -- Los Angeles, December 6, 1973

நாம் பகவானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளோம். எப்போது நாம் அந்த தொடர்பை உணர்கிறோமோ.. அந்த நிலை ஸ்வரூப-சித்தி எனப்படுகிறது. ஸ்வரூப-சித்தி என்றால் பூரண உண்மையை உணர்தல் என்று பொருள். எனவே சூத கோஸ்வாமி அவர்கள் இங்கு "சௌஹர்தேன கட்ஹேன, சந்த" என்று கூறுகிறார். ஒருவர் நெடுநாட்களுக்கு பிறகு, தனது பழைய நண்பரை சந்தித்தால் அவர்கள் இருவரும் மிகுந்த மகிழ்ச்சி கொள்வர். அதே போல் ஒரு தந்தை காணாமல் போன தனது குழந்தையை கண்டுபிடித்து சந்திக்கும் போது மிகவும் மகிழிச்சி அடைவார். அந்த குழந்தையும் மகிழ்ச்சி அடையும். பலநாள் பிரிந்துள்ள கணவனும் மனைவியும் சந்திக்கும் போது, கண்டிப்பாக மகிழ்ச்சி கொள்வர். இது இயற்கையான விஷயம். ஒரு எஜமானனும் அவனது சேவகனும், நெடுநாட்கள் கழித்து சந்திக்கும் போது மிக்க மகிழ்ச்சி கொள்வர். நாம் கிருஷ்ணருடன் பல வகைகளில் தொடர்பு வைத்துள்ளோம்: சாந்த,தாஸ்ய, ஸாக்ய,வாத்சல்ய ,மாதுர்ய சாந்த என்றால் எந்த சலனமும் இன்றி கடவுளை உணர்தலாகும் . தாஸ்ய என்பது அதிலிருந்து ஒரு படி முன்னேறி செல்வது..அதாவது கடவுளே பூரணமானவர் என்ற உணர்வுடன் அவருக்கு சேவை செய்வது.... சாந்த என்பது கடவுளின் பெருமையை போற்றுவது மட்டுமே.. அங்கு எந்த வித சேவையும் இல்லை... ஆனால் ஒரு படி முன்னேறி , தாஸ்ய பக்தி என்பது பூரணத்துவம் வாய்ந்தவருக்கு சேவை செய்தலாகும். நமக்கு பிரியமான நபர்களுக்கு, உறவினர்களுக்கு, பிராணிகளுக்கு, சமூகத்திற்கு நாம் சேவை செய்கிறோம். அவர்கள் மீது அதிகப் பிரியம் வைக்கிறோம். முழுமுதற் கடவுளை எஜமானனாக அன்புடன் பாவித்து சேவை செய்வது தாஸ்ய பக்தி ஆகும். கடவுளை உணரும் பக்தியைவிட இது உயர்ந்த பக்தி முறை ஆகும். அதாவது சாதாரண நிலையிலிருந்து ஒரு படி முன்னேறி, பூரணமான கடவுளுக்கு நாம் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் செயலாற்றுதல் சிறந்ததாகும். அதாவது ஒரு சாதாரண வேலையில் இருக்கும் ஒருவர்.. தன்னுடைய தற்போதைய வேலையிலிருந்து அடுத்த நிலைக்கு செல்வது போன்றது.. வேலை செய்தல் என்பது உள்ளது. ஆனால் ஒருவர் அரசாங்க உத்தியோகம் பார்ப்பது என்பது பெருமையாக இருக்கும். அரசாங்க உத்தியோகம் பார்ப்பவர் தன்னை பெருமையாக உணர்வார். அதே போல் நாம் மற்றவர்களுக்கு செய்யும் சேவையை எப்போது முழுமுதற் கடவுளுக்கு செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமோ, அப்போது நாம் அமைதியைப் பெறுவோம். இதுவே சாந்த மாற்றும் தாஸ்ய பக்தி.

பிறகு கடவுளை நண்பனாக பாவித்து சேவை செய்வது ( சாக்ய) எஜமானனுக்கு சேவகன் சேவை செய்கிறார். அந்த சேவகன் , எப்போது எஜமானனுக்கு மிகவும் நெருக்கமானவனாக மாறுகிறானோ அப்போது அது நட்பென்ற உறவாக மாறுகிறது. நான் கல்கத்தாவில் இவ்வாறு நிகழ்ந்ததை நேரிலேயே பார்த்திருக்கிறேன். டாக்டர் போஸ் என்பவருக்கு அவருடைய வண்டி ஓட்டுநர் நெருங்கிய நண்பராவார். அவர் காரில் வரும்போதெல்லாம், தனது ஓட்டுனரிடம் மனதில் உள்ள விஷயங்களை பகிர்ந்துகொள்வார். எனவே, அந்த ஓட்டுநர் அவருடைய நெருங்கிய நண்பராக ஆனார். தன்னைப் பற்றிய தனிப்பட்ட ரகசியங்களையும் ஓட்டுனரிடம் பேசுவார். சேவகன் உண்மையுள்ளவனாக இருந்தால், எஜமானன் மனம் திறக்கிறார். அவர் அவனிடம் என்ன செய்ய வேண்டும் என்று பேசுகிறார். இது நட்பு என்ற தளத்தில் உள்ளது. அடுத்த படியான பக்தி சற்று முன்னேறி பெற்றோராக தன்னை கருதுவது. தந்தை மகன், தாய் மகன் உறவைப்போல் கருதுவது. இது வாத்சல்யம் ஆகும். கடைசி பக்தி காதலனாக கருதுவது. (மாதுர்யம்)

எனவே இதில் ஏதேனும் ஒருவகையில் நாம் கிருஷ்ணருடன் உறவு கொண்டுள்ளோம். அவரை தியானிப்பவனாகவோ, சேவகனாகவோ, நண்பனாகவோ, பெற்றோராகவோ அல்லது காதல் கொண்டோ நாம் உறவு கொண்டுள்ளோம். எனவே அந்த உறவு முறையை நாம் உணரவேண்டும். அதை உணர்ந்தவுடன் .... மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறோம். ஏனென்றால் அது நித்தியமானது. ஒரு விரலை மட்டும் தனியாக எடுத்தால், அது மகிழ்ச்சியாக இருக்காது. அது உடலுடன் சேர்ந்தால் மட்டுமே மகிழ்ச்சி அடையும். அதைப்போலவே நாம் கிருஷ்ணருடன் நித்தியமான உறவு கொண்டுள்ளோம். இப்போது நாம் பிரிக்கவைக்கப்பட்டுள்ளோம். நாம் அவருடன் இணைந்தவுடன் நித்திய மகிழ்ச்சி கொள்கிறோம்.

எனவே இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் அனைவருக்கும் பயனுள்ள ஒன்று. உங்களுடைய நித்தியமான உணர்வை வெளிக்கொணருகிறது. கிருஷ்ணருடரான நித்தியமான உறவு ஏற்கனவே இருக்கிறது. கிருஷ்ண உணர்வு என்பது என்றென்றும் நம்மிடம் உள்ளது. அமெரிக்கர்களாகிய உங்களுக்கு மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு வரை கிருஷ்ணர் யார் என்றே தெரியாது? அப்படியிருக்க இப்போது ஏன் கிருஷ்ணரால் கவரப்பட்டிருக்கிறீர்கள்? நீங்கள் கிருஷ்ணரால் கவரப்பட்டாலொழிய அவருடைய கோவிலுக்கு வருவதோ அல்லது அவரது புகழை பாடுவதோ உங்களால் முடியாது. நீங்கள் கிருஷ்ணரிடம் உங்கள் அன்பை வளர்த்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் முட்டாள்கள் அல்ல. உங்கள் நேரத்தை வீணடிப்பதற்கு ..இது எவ்வாறு நடந்தது என்பதை யோசிக்க வேண்டும்...

சிலர் கிருஷ்ணரை ஒரு இந்தியன் என்றோ அல்லது இந்து என்றோ சொல்லலாம்... அது உண்மையென்றால் கிறிஸ்தவர்கள் ஏன் கிருஷ்ணரால் கவரப்படவேண்டும் ? அவர்கள் என்ன இந்துவா? இல்லை. கிருஷ்ணர் ஒரு இந்துவோ அல்லது கிறிஸ்தவரா அல்லது இஸ்லாமியரே அல்ல..கிருஷ்ணர் கிருஷ்ணர் தான்... நாம் அனைவரும் கிருஷ்ணரின் பகுதிப் பின்னங்கள். "நான் இந்து", "நான் கிறிஸ்தவன்", "நான் இஸ்லாமியன்", "நான் இந்தியன்", "நான் அமெரிக்கன்" என்று நாம் சொல்வதெல்லாம் ஒரு பதவிப்பெயரே. உண்மையில் நாம் அனைவரும் ஆத்மாக்களே. அஹம் ப்ரம்மாஸ்மி. மேலும் கிருஷ்ணர் பரமாத்மா. பரம் ப்ரம்ம பரம் தாம பவித்ரம் பரமாம் பவன் (BG 10.12).

எனவே நாம் அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளோம். இந்த உறவு நித்தியமானது. அந்த நித்திய உறவை வெளிக்கொணர்ந்து நாம் உணரவேண்டும். "Sravanadi-suddha-citte karaye udaya" ஒரு இளம் ஆடவன் ஒரு பெண்ணிடம் காதல் கொள்கிறான்...அதேப்போல் ஒரு  பெண்ணும் ஒரு ஆணிடம் காதல் கொள்கிறாள்.. இது இயற்கையே...அவர்கள் இருவரும் சந்திக்கும் போது அந்த உணர்வு வெளிக்கொணரப்படுகிறது. இது ஒன்றும் புதிய உணர்வல்ல...இது ஏற்கனவே இருக்கும் உணர்வு தான்.. ஆனால் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் இருவரும் சந்திக்கும் போது, அந்த காதலிக்கவேண்டும் என்ற எண்ணம் அதிகமாகிறது. காதலும் அதிகமாகிறது. இதைப்போலவே, கிருஷ்ணருடரான நம் தொடர்பும் இயற்கையானதே. அது செயற்கையானதல்ல.. அது நித்தியமானதாகும். அது இப்போது மறைக்கப்பட்டுள்ளது. மறைக்கப்பட்டுள்ள அந்த உணர்வை நாம் வெளியே கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டுவந்தால் நாம் கிருஷ்ணருடன் எப்போதும் தொடர்பிலேயே இருப்போம். இந்த நித்திய தொடர்பே கிருஷ்ண பக்தியின் பூரணத்துவம் ஆகும்.