TA/Prabhupada 0180 - ஹரே கிருஷ்ண மந்திரம் ஒரு கிருமிநாசினி

Revision as of 17:11, 4 July 2016 by SenthilKumar (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0180 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on SB 1.5.11 -- New Vrindaban, June 10, 1969

பிரபுபாதா: Vināpi pada-cāturyaṁ bhagavad-yaśaḥ-pradhānāṁ vacaḥ pavitram ity aha tad vāg pavitra iti. இது மிகவும் தூய்மையானது. அதை என்ன சொல்வார்கள்? கிருமிநாசினி. உலகம் முழுவதும் மாயையின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, இந்த கிருஷ்ண பக்தி இயக்கம், ஹரே கிருஷ்ண மந்திரம் தான் கிருமிநாசினி. இது நிச்சயம். கிருமிநாசினி. Tad-vāg-visargo janatāgha-viplavaḥ. Bhagavad-yaśaḥ-pradhānāṁ vacaḥ pavitram ity aha tad vāg iti, sa cāsau vāg-visargo vacaḥ prayogaḥ. Janānāṁ samuho janatā, tasya aghaṁ viplavati naśayati. விப்லவ என்றால் அது கொல்கிறது என்று அர்த்தம். ஏனெனில் அது கிருமிநாசினி ஆயிற்றே. இப்பொழுது இந்தக் கிருஷ்ண பக்தி இயக்கம் எப்படி ஒரு கிருமிநாசினி ஆகிறது என்பதை புரிந்து கொள்வதற்கு இதை உதாரணமாக எடுக்கலாம்.. இதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டவர்கள், உடனடியாக பாவத்தின் பாதிப்புகளைத் தடுத்துவிடுகிறார்கள், நான்கு வகையான பாவங்கள் : தகாத உடலுறவு கொள்வது, குடிப்பழக்கம், சூதாட்டம் மற்றும் இறைச்சி உட்கொள்வது. இது எப்படி கிருமிநாசினி ஆகிறது. இந்த நான்கு விஷயங்களும் பாவச் செயல்களை அதிகரிக்கிறது. மற்ற பாவச் செயல்கள் எல்லாமும் ஒன்றன் பின் ஒன்றாக வரும், ஒன்றன் பின் ஒன்றாக. திருடுவது, பிறகு ஏமாற்றுவது…இந்த நான்கு பாவங்களிலும் ஈடுபட்டால், இன்னும் பல விஷயங்கள் பின்தொடரும். இந்த நான்கு முக்கிய பாவங்களை நிறுத்திவிட்டால், மேலும் பாவச் செயல்களைப் புரியச் செய்யும் சுவிட்சை அணைத்துவிடலாம். நீங்கள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதை எப்படிப் பேண முடியும்? இந்த ஹரே கிருஷ்ண ஜபம் என்னும் கிருமிநாசினி முறையின் மூலம். இல்லையென்றால், அது முடியாது, வெறும் தத்துவார்த்த அறிவைக் கொண்டு முடியாது.

ஆக அது உண்மையிலேயே கிருமிநாசினி தான். Janatāgha-viplavaḥ. அது அந்த நபர் மேலும் செய்யக்கூடிய பாவச் செயல்களைத் தடுக்கிறது. அதற்காக நாம் தவறான எண்ணத்துடன் , “சரி, என்னிடம் ஒரு கிருமிநாசினி இருக்கிறது, ஹரே கிருஷ்ண ஜபம். ஆகையால், நான் இந்த நான்கு பாவங்களையும் செய்து கொண்டே இருப்பேன். பிறகு நான் சுத்தமாவேன்.” என்று எண்ணக்கூடாது. கிறித்துவ தேவாலயங்களுக்குச் சென்று, பாவ மன்னிப்பு கோருவது போல. அது எல்லாம் சரி தான். பாவ மன்னிப்பும் கிருமிநாசினி தான். ஆனால் அது எப்படி மறுபடியும் அதையே செய்கிறீர்கள்? அதற்கு என்ன அர்த்தம்? தேவாலயத்திற்குச் சென்று, பாவ மன்னிப்பு கோருகிறீர்கள். இது நல்லது தான். இப்போது உங்கள் பாவச் செயல்கள் எல்லாம் ஈடுகட்டப்பட்டுவிட்டது. மிக நல்லது தான். ஆனால் ஏன் மறுபடியும் அதே செயலைப் புரிகிறீர்கள்? இதன் பதில் என்ன? ஹ்ம்? நான் யாரேனும் ஒரு கிறித்துவ கண்ணியவானிடம் இதைக் கேட்டால் என்ன பதில் கிடைக்கும்: “நீங்கள் பாவச் செயல்களைச் செய்கிறீர்கள், சரி, தேவாலயத்தில் பாவ மன்னிப்பு கோருகிறீர்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முன், அவர் தான் பிரதிநிதி, அல்லது அவரது பிரதிநிதி அல்லது கடவுள். உங்கள் பாவச் செயல்கள் அனைத்தும் சரிக்கட்டப்படுகிறது, மன்னிக்கப்படுகிறது. அது பரவாயில்லை. ஆனால் நீங்கள் ஏன் மறுபடியும் அதையே செய்கிறீர்கள்?” இதற்கு பதில் என்ன கிடைக்கும்?

Nara-nārāyaṇa: அவர்கள் மறுபடியும் பாவ மன்னிப்பு கோருவார்கள்.

பிரபுபாதா: அவர்கள் மறுபடியும் பாவ மன்னிப்பு கோருவார்கள். அப்படியென்றால் இது ஒரு வியாபாரமாக ஆகிவிட்டது. “நான் செய்வேன்..” என்பது..இது அதன் கருத்து அல்ல. நம்முடைய கடவுளை அவமதிக்கும் செயல்களின் பட்டியலில் இது வன்மையாக கண்டிக்கப்படுகிறது. Nāmno balād yasya hi pāpa-buddhiḥ. யாரேனும் “என் வசம் இதன் கிருமிநாசினி முறை உள்ளது, அதனால் நான் பாவச் செயல்களைப் புரிவேன். பின் ஹரே கிருஷ்ண ஜபம் செய்வேன், அது சரிக்கட்டப்படும்” என்று எண்ணினால், ஆக அது தான் மிகப் பெரிய பாவம்.