TA/Prabhupada 0173 - நாம் அனைவரும் நண்பர்கள் ஆக வேண்டும்

Revision as of 13:45, 5 July 2016 by SenthilKumar (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0173 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on SB 1.7.6 -- Vrndavana, April 23, 1975

எனவே நாம் பகவத் கீதையில் அல்லது ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து கிருஷ்ணர் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். Krsne parama - puruse bhaktir utpadyate. நீங்கள் ஸ்ரீமத் பாகவதம் கேட்டால் ...... நீங்கள் கிருஷ்ணரின் அடிப்படை கொள்கை அல்லது அவரின் முழுமையான கொள்கை என்னவென்று புறிந்துகொள்ளவில்லை எனில்...... அது ஸ்ரீமத் பாகவதத்தில் முதலிலேயே சொல்லப்பட்டுஇருக்கிறது. Dharmah projjhita - kaitavah atra paramo nirmatsaranam(SB 1.1.2). இங்கே ஸ்ரீமத் பாகவதத்தில், போலிகளால் உருவாக்கப்பட்ட மதங்கள் என்பது வெளியேற்றப்பட்டுவிட்டது. Nirmatsaranam என்பது பரமஹம்சர் என்பதை குறிக்கிறது. Nirmatsaranam என்பது பொறாமை இல்லாத நபரை குறிக்கிறது. நம் பொறாமை குணம் கிருஷ்ணரிடமிருந்து தொடங்குகிறது. நாம் கிருஷ்ணரை ஏற்றுக்கொள்வதில்லை பெரும்பாலும் அவர்கள் " ஏன் கிருஷ்ணர் மட்டுமே கடவுளாக இருக்க வேண்டும் ? பலர் உள்ளனரே. " என்று கூறுவர் .. இது தான் பொறாமை. நம் பொறாமை கிருஷ்ணரிடமிருந்து தொடங்குகிறது. அது பல வழிகளில் விவரிக்க பெற்றுள்ளது. மற்றும் நம் சாதாரண வாழ்க்கையிலேயே நமக்கு பொறாமை உள்ளது நாம் நம் நண்பர்கள் மீது பொறாமை கொள்கிறோம், தந்தை மீது பொறாமை கொள்கிறோம், நம் மகனின் மீது பொறாமை கொள்கிறோம் .... மற்றவர்களை பற்றி என்ன சொல்லுவது.. வர்த்தகர்கள், நாடு, சமுதாயம், சமூகம், அனைத்திலும் பொறாமை. matsarata. அவர்கள் என்னைவிட முன்னேறுகிறார்களே? என்று நான் பொறாமை படுகிறேன்.

இது இயற்கையான ஒன்று. எனவே, ஒருவன் எப்பொழுது கிருஷ்ணரை புரிந்து கொள்கிறானோ, அவன் கிருஷ்ண உணர்வு பெறுகிறான். அவன் பொறாமையற்றவன் ஆகிறான். பொறாமைக்குணமே இல்லாதவன் ஆகிறான். அவன் நண்பனாக ஆசை படுகிறான் . Suhrdah sarva-bhutanam. எனவே இந்த கிருஷ்ண உணர்வு இயக்கம் என்னவென்றால், நாம் அனைவரும் , எல்லோரின் நண்பர்கள் ஆவது. ஏனென்றால் அவர்கள் கிருஷ்ண உணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். நாம் ஒவ்வொரு கதவையும் தட்டி, நகரத்திற்கு நகரம் சென்று, கிராமத்திற்கு கிராமம் சென்று கிருஷ்ண உணர்வு இயக்கம் பற்றி போதிக்கவேண்டும் .. கிருஷ்ணரின் அருளால் நாம் அறிவார்ந்த மக்களின் கவனத்தை ஈர்க்கிறோம். எனவே பொறாமை குணம் பெறாமல் இருக்கும் இந்த நடைமுறையை நாம் பின்பற்ற வேண்டும். பொறாமை என்பது மிருக குணம்.. நாயின் குணம், பன்றியின் குணம் para-dukha-dukhi என்பது மனித இயல்பாக இருக்க வேண்டும். ஒரு பரிதாபமான நிலையில் இருப்பவரை பார்த்தால் ஒருவன் மிகுந்த சோகம் கொள்ள வேண்டும் மக்கள் அனைவரும் கிருஷ்ண உணர்வில்லாமல் மிகுந்த சிரமப்படுகிறார்கள். நம் ஒரே குறிக்கோள் கிருஷ்ண உணர்வை தட்டி எழுப்புவது மட்டுமே. இந்த உலகம் முழுவதும் சந்தோஷமாக இருக்கும் Anartha upasamam saksad bhakti-yogam adhoksaje, lokasya ajanatah. மக்களுக்கு கிருஷ்ண உணர்வைப்பற்றிய போதிய அறிவில்லை. நாம் தான் அவர்களை எப்படியேனும் உள்ளே கொண்டு வந்து போதிக்க வேண்டும். Lokasyajan..., vidvams cakre satvata - samhitam (SB 1.7.6) Srimad- Bhagavatam. கிருஷ்ண உணர்வு இயக்கத்தின் மறுபெயர் பாகவத - தர்மம் பாகவத - தர்மம் . நாம் இதை ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் மொத்த மனித சமுதாயமும் சந்தோஷமாக இருக்கும். மிக்க நன்றி.


Merci beaucoup.