TA/Prabhupada 0174 - அனைத்து உயிர்களும் கடவுளின் குழந்தைகள்
Lecture on SB 1.8.26 -- Los Angeles, April 18, 1973
அனைத்து வாழும் உயிர்களும் கடவுளின் குழந்தைகள். கடவுள் தான் அனைத்திற்கும் தந்தை கிருஷ்ணர் கூறுகிறார்: aham bija-pradah pita. நானே அனைத்து உயிரினங்களுக்கும் விதை ஆகிறேன் Sarva- yonisu kaunteya (BG 14.4). " எந்த உருவத்தில் இருந்தாலும், அனைத்து ஜீவன்களும் என் மகன்கள். " அது தான் உண்மை. நாம் அனைவருமே கடவுளின் குழந்தைகள் தான் நாம் அனைவரும் அதை மறந்துவிட்டோம். எனவே தான் சண்டையிட்டு கொள்கிறோம் . ஒரு நல்ல குடும்பத்தில் "தந்தை நமக்கு உணவு அளிக்கிறார். நாம் சகோதர்கள். எதற்கு சண்டையிட்டுக்கொள்ளவேண்டும் ?" என்று கூறுவர் இதேபோல் நாம் கடவுளை உணர்ந்துவிட்டால், கிருஷ்ணரை உணர்ந்துவிட்டால் இந்த சண்டைகள் தீர்ந்து விடும். இந்த மூட விஷயங்கள் முடிந்து விடும். கிருஷ்ண உணர்வு இயக்கம் அனைவருக்கும் நல்லது. விரைவில் மக்கள் கிருஷ்ணரை உணர்ந்துவிட்டால், இந்த அரசியல் சண்டைகள், தேசிய சண்டைகள், அனைத்துமே முடிவுக்கு வந்துவிடும். ஏனெனில் அனைத்துமே கடவுளுக்கு சொந்தமானது என்ற உண்மையை உணர்ந்துவிடுவார்கள் ஒரு குழந்தைக்கு தந்தையின் மீது எப்படி உரிமை எடுத்துக்கொள்ள முடிகிறதோ.. அதேபோல் , அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்றால் , அனைவருக்கும் கடவுளின் சொத்தை அனுபவிக்கும் உரிமை இருக்கிறது. எனவே அந்த உரிமை மனிதனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. பகவத் கீதையை பொறுத்தவரை , இந்த உரிமை அனைத்து ஜீவ ராசிகளுக்கும் உண்டு அது மனிதனோ , அல்லது மிருகங்களோ, அல்லது மரம், செடி, கொடியோ , அல்லது பூச்சிகளோ.. அனைவருக்கும் சொந்தம்... அது தான் கிருஷ்ண உணர்வு. நாம் நல்லவர்கள், மற்றும் என் சகோதரர்கள் மட்டுமே நல்லவர்கள் என்ற அடிப்படையில் இருக்கிறோம் . இந்த குறுகிய எண்ணங்களை நாங்கள் வெறுக்கிறோம்.. நாங்கள் வெளியேற்றுவோம். நாம் இவ்வாறு நினைக்கவேண்டும் : panditah sama - darsinah(BG 5.18). பகவத் கீதையில் நீங்கள் இதை தெரிந்துகொள்வீர்கள்.
- vidyā-vinaya-sampanne
- brāhmaṇe gavi hastini
- śuni caiva śva-pāke ca
- paṇḍitāḥ sama-darśinaḥ
- (BG 5.18)
எவனொருவன் பண்டிதனோ, எவனொருவன் கல்வி கற்றவனோ, அவன் அனைத்து ஜீவராசிகளையும் சமமாகவே பார்க்கிறான். எனவே ஒரு வைணவன் மிகுந்த கருணை உள்ளம் கொண்டவனாகிறான். Lokānāṁ hita-kāriṇau. அவர்களால் நிச்சயமாக மனித குலத்திற்கு நன்மை செய்ய முடியும். அவர்கள், இந்த உலகத்தில் உள்ள அனைத்துமே கடவுளின் ஒரு பகுதி என்று உணர்கிறார்கள். ஏதோ ஒரு வகையில் இந்த எந்திர மயமான உலகத்தில் அவரகள் விழுந்துவிடுகின்றார்கள். வெவ்வேறு கர்மங்களை பொறுத்தவரை, பல்வேறு வகையான உடல்களைப் பெறுகின்றனர். எனவே, கல்வி கற்ற பண்டிதர்களுக்கு பாகுபாடு என்பது இல்லை. "இது ஒரு மிருகம். இது இறைச்சி கூடத்திற்கு அனுப்பப்படவேண்டும். இதை மனிதன் சாப்பிடவேண்டும்."இல்லை கிருஷ்ணரை உணர்ந்த ஒருவன் அனைவரிடத்திலும் கனிவுடன் இருப்பான். எதற்காக விலங்குகளை கொன்றுகுவிக்க வேண்டும்? எனவே எங்களின் தத்துவம் மாமிசம் சாப்பிடக்கூடாது என்பதே ஆகும் . மாமிசம் சாப்பிடக்கூடாது... உங்களால் முடியாது நாம் கூறுவதை அவர்கள் கேட்கமாட்டார்கள், "இது என்ன முட்டாள்தனம்? இது எங்கள் உணவு . இதை ஏன் நான் சாப்பிட கூடாது?" என்று கேட்பார்கள் ஏனெனில் edhamāna-madaḥ (SB 1.8.26). அவன் போதை கொண்ட பாவி. அவன் உண்மை என்ன என்பதை கேட்கமாட்டான்.